ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

டூயட் கிளினிக்

டூயட் கிளினிக்


ஸ்பெஷல் 1
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்
 
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்

பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ரகுவுக்கு ஐந்து இலக்கத்தில் சம்பளம். ஸ்க்ரீன் டெஸ்ட்டே எடுக்காமல் ஹீரோவாக நடிக்க வைக்கலாம். அப்படி ஓர் ஆணழகு. என்னிடம் வந்து அமர்ந்த வேகத்தில், ''டாக்டர், எப்படியாச்சும் ஃபர்ஸ்ட் நைட்ல என்னை ஜெயிக்க வெச்சுடுங்க. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. நான் தோத்துரக் கூடாது!'' என்றான். மனதின் பதற்றம் அவனது உடல் மொழியில் தெரிந்தது.

''அமைதியா சொல்லுப்பா. இவ்வளவு படபடப்பு தேவையில்லையே! என்ன பிராப்ளம் உனக்கு?''

''சார், அடுத்த மாசம் எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க. என்னால செக்ஸ்ல திருப்திகரமா ஈடுபட முடியுமான்னு பயமா, தயக்கமா, சந்தேகமா இருக்கு. நீங்கதான் என்னைச் சரி பண்ணணும்!''

பொதுவாக, பயம் இல்லாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒருவித பயம். ரகுவைப் போன்று சிலருக்குத் தனது வருங்கால மனைவியைத்திருப்திப் படுத்த முடியுமோ, முடியாதோ என்று பயம். இதற்கு perfomance anxiety என்று பெயர். மருந்து, மாத்திரைகளைவிட தங்களைத் தாங்களே உணர்வதுதான் இந்தப் பயத்துக்கான பிரிஸ்கிரிப்ஷன்.

திருமணத்துக்கு முன்பு தங்கள் பயத்தை ஒழித்துக்கட்டும் முயற்சியாக மருத்துவர்களை நாடுபவர்கள் வெகு சிலரே. திறமையான, வெற்றிகரமான செக்ஸ் பர்ஃபார்மன்ஸூக்கு மூன்று எதிரிகள் உண்டு. பயம், சந்தேகம், குற்ற உணர்ச்சி!

உடல் ஆரோக்கியமாகவே இருந்தாலும் மேற் குறிப்பிட்ட எதிரிகளில் ஒன்று இருந்தாலும் பிரச்னை தான். உறவுக்குத் தயாராக உடம்பு மட்டும் ஆயத்த மாவதில் பயனில்லை. மனசும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். செக்ஸில் ஒரு நபர் வெற்றி பெற வேண்டுமென்றால், அதில் பரீட்சார்த்த முயற்சியில் இறங்கக் கூடாது. அனுபவிக்க வேண்டும்.

எந்த நிலையில் அனுபவிக்க முடியும்?

தன்னைத்தானே மறந்து ஈடுபடும்போதுதான். நவீன செக்ஸாலஜியின் பிதாமகர்களான மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன், உடம்பை மனசு உற்றுப் பார்க்கும் நிலைக்கு Spectating என்று பெயரிட்டனர்.

ரகுவைப் போன்றவர்களுக்குச் சில ஆலோ சனைகள்...

எந்த ஒரு பயத்தையும் போக்கும் டானிக் நம்பிக்கைதான்.

செக்ஸ் தொடர்பான எதிர்மறை எண்ணங்களை ஒழித்துக்கட்டுங்கள்.

செக்ஸ் என்பது நீங்கள் அனுபவித்து உணர்வதற்குத்தான். எவருக்கும் நிரூபித்துக் காட்ட அல்ல.

டூயட் கிளினிக்

உங்கள் கவனத்தை உறுப்புகள் மீது வைக்காமல், செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் இன்பத்தின் மீது வைக்க வேண்டும்.

முதல் இரவில் தோற்றால் வாழ்க்கையே தோற்றுவிட்டதாக அர்த்தமல்ல. இன்னும் எத்தனையோ இரவுகள் உள்ளதையும் மனதில் கொள்ள வேண்டும்!

 
டூயட் கிளினிக்
டூயட் கிளினிக்