டைரக்டர்கள் ஹீரோவாகும் சீஸனோ என்னவோ... உடம்பை ஜம்மென வைத்துக்கொள்ள இப்போது எல்லா இயக்குநர்களும் 'ஜிம்'முக்குப் படையெடுக்க
ஆரம்பித்து விட்டார்கள். சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருக்கும் 'கேசவர்த்தினி இன்சாப் ஜிம்'மில் வேலுபிரபாகரன், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, கரு.பழனியப்பன் என இயக்குநர் பட்டாளமே தினசரி காலையில் ஆஜராகி விடுகிறது. உதவி டைரக்டர் வாய்ப்பு தேடும் எதிர்கால டைரக் டர்கள் ஆபீஸ் ஆபீஸாக ஏறிஇறங்குவதைவிட, நேராக இந்த ஜிம் வளாகத்துக்கே போய்விடலாம். டைரக்டர்கள் மட்டுமல்ல, என்.ஆர்.ஐ. கம்பெனி ஒன்றின் புதுப் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் கவிஞர் சிநேகன் மற்றும் முன்னாள் சில்வர் ஜூப்ளி ஹீரோ மைக் மோகன் ஆகியோரும்கூட சீரியஸாக 'ஜிம்'மிக் கொண்டிருக்கிறார்கள்.
|