
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் இனி சமாதானத்திற்கு இடமில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு தாக்கல் செய்த மாற்று மனுவை நடிகர் விஷால் இன்று திரும்ப பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், கமல்ஹாசன் மிகப் பெரிய நடிகர் என்றும், அவரை சரத்குமார் தரக்குறைவாக பேசியது தவறு என்றும் தெரிவித்தார்.
மேலும் இது தனக்கு மட்டுமல்லாமல், மற்ற நடிகர்களுக்கும் வேதனை அளிப்பதாகவும் விஷால் கூறினார்.