Published:Updated:

'12 ரூபாய் கட்டவில்லையென நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி விட்டனர்' - மன்சூர் அலிகான் புலம்பல்

சென்னை: உறுப்பினர் கட்டணம் 12 ரூபாய் கட்டவில்லை எனக்கூறி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுள்ளார்.
 
'12 ரூபாய் கட்டவில்லையென நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி விட்டனர்' - மன்சூர் அலிகான் புலம்பல்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "1990ல் இருந்து நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக உள்ளேன். கடந்த டிசம்பரில் உறுப்பினர் கட்டணம் 12 ரூபாய் கட்டவில்லை எனக்கூறி சில தினங்களுக்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து என்னை ஏற்கனவே நீக்கியிருந்தார்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் உறுப்பினர் ஆனேன். இப்போது மீண்டும் என்னை நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அப்படி நீக்கியதன் மூலம் நான் நடிகர் இல்லை என்றாகி விடாது.

நடிகர் சங்கத்தில் இல்லையென்றாலும் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் நான் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் என் பக்கம் இருப்பார்கள். நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில், பாண்டவர் அணி வெற்றி பெறும். நடிகர் சங்கம் நல்ல எதிர்காலத்தை நோக்கி போகும்" என்றார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவாக மன்சூர் அலிகான் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.