மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

தானாய் நிரம்பும் கிணற்றடி
ஆசிரியர்: அய்யப்ப மாதவன்
வெளியீடு: தமிழ்வனம், 63, இரண்டாவது தளம், மூன்றாவது தெரு,
முதல் செக்டார், கே.கே.நகர், சென்னை-8.
பக்கம்: 110  விலை:

விகடன் வரவேற்பறை

50

விகடன் வரவேற்பறை

விஞராக அறியப்பட்டு இருக்கும் அய்யப்ப மாதவனின் முதல் சிறுகதைத் தொகுதி. 10 கதைகளிலும் மொழிநடை கவிதைக்கு மிகப் பக்கத்திலேயே இருக்கிறது. ஆனால் ஒரு சிறுகதைக்கான உரைநடை, உரையாடல் வடிவத்தின் சாத்தியங்கள் எந்தக் கதையிலும் இல்லை. எல்லாவற்றிலும் ஒரு மூன்றாம் நபர் கதையைச் சொல்லிச் செல்கிறார். ஆழமான மனச் சிதைவுகளை, தேர்ந்தெடுத்த சொற்களில் எழுதி இருக்கிறார்!  

 The Eyes  இயக்கம்: சத்யா சுரேஷ்

விகடன் வரவேற்பறை

ந்த ஐடியாவை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் துவங்கும் குறும்படம். கிடார் இசை, நடனம், சிரிப்பு, கொஞ்சம் பேச்சு, நிறையக் காதல் என ஒரு காதலன் காதலியைச் சுற்றிச் சுற்றி வரும் காட்சிகள். திடீர் என ஒரு விபத்தில் அடிபட்டு உயிரிழக்கிறான் காதலன். அவனுடைய டிரைவிங் லைசென்ஸில் 'கண் தானம் செய்ய சம்மதிக்கிறேன்’ என்ற வரிகள். அவனுடைய கண்கள் தானமாக வழங்கப்படுகிறது. ஓட்டுநர் உரிம விண்ணப்பத்தில் கண் தானத்துக்குச் சம்மதம் எனக் காதலி குறிப்பிடுவதுடன் முடிகிறது படம். ஓட்டுநர் உரிமத்தில் கண் தானம் பற்றிய ஒப்புதலை அச்சிடலாம் என்ற ஐடியாவை காதலின் பின்னணியில் தந்திருக்கிறார் இயக்குநர்!

 மண் மணம்! www.organicanath.blogspot.com

விகடன் வரவேற்பறை

சாயன உரங்களால் நிலங்கள் பாழ்படுவது, சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு, மரபணு மாற்றப் பயிர்கள் குறித்த விவாதங்கள் ஆகியவை மேலெழும்பும் நேரத்தில், இயற்கை விவசாயம் குறித்து கவனம் குவிக்கும் வலைப்பூ. விவசாயத்தில் விந்தை புரியும் இரு நாடுகள் என்னும் கட்டுரை கியூபா மற்றும் இஸ்ரேல் என்னும் இரு நாடுகளில் பின்பற்றப்படும் மரபான இயற்கை விவசாயம் குறித்து விவரிக்கிறது. 'மரங்களை வளர்ப்போம்’ என்ற கோஷங்கள் எங்கும் கேட்டுக்கொண்டு இருக்கும் சூழலில், 'மரங்களை வெட்டுங்கள்’ என்ற கட்டுரை அழிக்கத்தக்க நச்சு மரங்கள் குறித்து விளக்குகிறது. மண்ணையும் மண்ணுக்கான விவசாயத்தையும் அறிய உதவும் வலைப்பூ!

 அப்புறமா படிக்க வேண்டுமா? http://www.instapaper.com

விகடன் வரவேற்பறை

ணையதளத்தில் ஏதோ ஒரு சுவாரஸ்யமான தகவலையோ, செய்தியையோ படிக்கிறீர்கள். அப்போதைக்கு படிக்க நேரம் இல்லை. ஆனால், பக்கத்தைவிட்டு வெளியேறினால், பிறகு மறந்துவிடுவோமோ என்ற பயம். அந்த இடத்தில் துணை புரிகிறது இந்தத் தளம். இத் தளத்தில் உங்களுக்கு என்று பக்கங்கள் உருவாக்கிக்கொள்ளலாம். அதில் நீங்கள் படிக்க விரும்பும் கட்டுரைகள், தகவல்கள், பார்க்க விரும்பும் படங்களை சேகரித்து வைத்துக்கொள்ளலாம். அப்படி சேகரிக்கும் தகவல்களை ரகசியமாகவும் வைக்கலாம். பிறரின் பார்வைக்கு பந்தியும் வைக்கலாம்!

 ஈசன்  இசை: ஜேம்ஸ் வசந்தன்  
வெளியீடு: திங்க் மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

ழக்கமான மெட்டுதான் என்றாலும் 'இந்த இரவுதான்’ பாடலில் ஒலிக்கும் மூன்று குரல்களின் வெரைட்டி மட்டும் வித்தியாச விருந்து. 'வந்தனம்மா... வந்தனம்’ என்று வரவேற்கும் தஞ்சை செல்வியின் கனத்த குரலில் ஒலிக்கும் 'ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையைக் கேட்டியா?’ பாடலில் பாட்டி கதை சொல்லும் தொனி. ஆனால், பாடு பொருளோ ஒரு பாலியல் தொழிலாளியின் பாடு. கிராமியக் குத்துப் போர்வையில் ஒரு மென்சோகக் கவிதை! வித்தியாச முயற்சிகள் இல்லாத ஒரு 'ஃபீல் குட்’ பாடல் 'கண்ணில் அன்பைச் சொல்வாளே..!’ 'பல்லே பல்லே’ என்று தாண்டியா கொண்டாட்ட உணர்வு கொடுக்கும் 'சுகவாசி’ பாடல், மால்குடி சுபா குரலில் உற்சாக ஊலலலாவாகக் கடக்கிறது. தமிழ் வார்த்தைகளைக்கொண்டு ஒரு டிஸ்கோ ராப் முயற்சி 'கெட் ரெடி’, அதிர்ந்து தடதடக்கிறது!