Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

'கன்னட நடிகை ரம்யா, மாண்டியா மக்களவைத் தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு யார் காரணம்?’ என்பதுதான் கர்நாடக அரசியலின் செம ஹாட் சர்ச்சை! மாண்டியா தொகுதியில் 5,518 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் ரம்யா. 'நான் மீண்டும் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்படுவது அம்பரீஷ் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து சதி செய்துவிட்டார்கள்’ என ரம்யா கதற, 'காங்கிரஸ் கோட்டையான மாண்டியா தொகுதியின் தோல்விக்கு ரம்யாவே காரணம். அவர், கட்சிக்காரர்கள் யாரையும் மதிக்கவில்லை’ என முஷ்டி முறுக்குகிறார்கள் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள். சினிமால ரீ-என்ட்ரி கொடுங்க ரம்யாஜி!

இன்பாக்ஸ்

 இலங்கைக்கு வருகிறார் போப் ஆண்டவர் ஃபிரான்சிஸ். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில்

இன்பாக்ஸ்

இரண்டு நாள்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் போப் ஆண்டவர், தமிழர்கள் வசித்த, வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றுவரத் திட்டமிட்டிருக்கிறார். நல்லது பண்ணுங்க!

இன்பாக்ஸ்

 அட..! ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றியிருக்கிறார் மல்லிகா ஷெராவத். சர்வதேச அளவில் பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான தலைப்பில் மல்லிகா ஷெராவத் 'பாலினப் பாகுபாடு, பெண்களை ஒடுக்குகிறது’ எனப் பேசியிருக்கிறார். தன் உரையை முடித்ததும் மிகவும் நெகிழ்வாக, 'நான் இந்தப் பல்கலைக் கழகத்துக்குள் நுழைவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை’ என்று ஏகத்துக்கும் ஃபீல் ஆகியிருக்கிறார். லைக்!

இன்பாக்ஸ்

 தேர்தல் தோல்வி, சிறைவாச சர்ச்சைகள் தாண்டியும் செம குஷியில் இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். காரணம், அரவிந்தின் மகள் அர்ஷிதா 12-ம் வகுப்புத் தேர்வில் 96 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஸ்வீட் எடு... கொண்டாடு!

இன்பாக்ஸ்

 பாலிவுட் ஹீரோயின்கள் பலர், வாய்ப்புகளுக்காக மாஸ் ஹீரோக்களுடன் 'டச்’சில் இருக்க, வித்யா பாலன், 'எனக்கு நானே ராணி’ என்று அடி துவம்சம் செய்துகொண்டிருக்கிறார். 'பாபி ஜாஸ¨ஸ்’ என்ற படத்தில் துப்பறியும் நிபுணராக 22 வேடங்களில் நடித்திருக்கிறார் வித்யா. அதில் தபால்காரன், பிச்சைக்காரன், ஜோசியக்காரன்... எனப் பல வேடங்களில்ஆணாக நடித்திருக்கிறார். டிரெய்லருக்கே ஏரியா பரபரக்க, மயக்கடிக்கும் புன்னகையுடன் வலம்வருகிறார் வித்யா. அவ்வை சண்முகம்!?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 'மிஸ்டர் பீன்’ ரோவன் அட்கின்ஸனை, காமெடியனாக மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் பார்ட்டி, படா கொண்டாட்டப் பேர்வழி. உலகின் விலை உயர்ந்த கார், படகு சவாரி, சாகசச் சுற்றுலாக்கள் என்று ஒவ்வொரு நிமிடத்தையும் சுவாரஸ்யமாகக் கழிப்பவர். அப்படி, கடந்த வாரம் இத்தாலியின் மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார்களை வைத்திருப்பவர்கள் அனைவரும் கிளம்பிய ஜாலி டிரைவில் ரோவனும் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது ஓவர் வேகத்தில் ஒருவர் காரை மரத்தில் மோதி கடும் விபத்துக்குள்ளானார். அவர் பின்னாடியே வந்த ரோவன், உடனடியாக விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்து, ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி, போலீஸ் விசாரணைக்கும் தகவல்கள் அளித்திருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு மெக்லாரன் கார் விபத்தில் சிக்கியவர் ரோவன். அப்போது அவர் காரை சரிசெய்ய செலவான தொகை, பிரிட்டன் வரலாற்றிலேயே அதிகபட்சமாகப் பதிவான ரிப்பேர் தொகை. மிஸ்டர் பீன், அவ்ளோ பெரிய அப்பாடக்கரா!

இன்பாக்ஸ்

 உடல் பருமன் விழிப்பு உணர்வுப் போராட்டங்களுக்காக, கோக-கோலா நிறுவனம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாயைச் செலவழிக்கத் திட்டமிட, சர்ச்சை கட்டிக் கிளம்பிவிட்டார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 'கோக-கோலா ஸீரோ பார்க்ஸ்’ என்ற பெயரில் இங்கிலாந்து பூங்காக்களில் நடைப் பயிற்சியாளர்களை ஊக்குவிக்க கோலா திட்டமிட, 'கோக-கோலா உள்ளிட்ட பாட்டில் குளிர்பானங்களாலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. அந்தக் கெட்ட பெயரை மறைப்பதற்காக இப்படி ஒரு நாடகமா?’ எனக் கொடி பிடித்துக் கிளம்பியிருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதான், பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு, தொட்டிலையும் ஆட்றதா?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 அனகோண்டா மலைப்பாம்புகள்தான் உலகிலேயே 'பிரமாண்ட டெரர்’ என்ற நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். அதைவிட 10 மடங்கு பெரிதான பாம்பு வகையைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். டைட்டனபோ (ஜிவீtணீஸீஷீதீஷீணீ) என்று அழைக்கப்படும் அந்தப் பாம்புகள், சுமார் 50 அடி நீளமும், 1,200 கிலோ எடையுடன் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உலவியிருக்கின்றன. வாழ்நாளின் பெரும் பகுதியை கடலிலேயே கழித்திருக்கும் இந்தப் பாம்புகள் வாழ்ந்ததற்கான தடயங்கள், இப்போது கொலம்பியாவின் நதிப் படிமங்களில்

இன்பாக்ஸ்

கிடைத்திருக்கின்றன. ஹாலிவுட் சினிமாவுக்கு லீட் சிக்கிருச்சுடோய்..!

இன்பாக்ஸ்

 16-வது இந்திய நாடாளுமன்றத்தின் இளம் எம்.பி... 26 வயதான டாக்டர் ஹீனா கவிட். மகாராஷ்டிரா மாநில நந்தர்பார் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் ஹீனா.  ஹீனாவின் தந்தை, மகாராஷ்டிர மாநில காங்கிரஸின் மூத்த உறுப்பினர் என்பதோடு, தேர்தல் நேரத்தில் மகள் பா.ஜ.க-வில் இணைந்ததால், அப்போது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!