Published:Updated:

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

எம்.குணா

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

மெரிக்காவில் பொருளாதாரம் தள்ளாடும். இந்தியாவில் பங்குச் சந்தை, ஆட்டோ மொபைல் துறைகள் சரியும். ஆனால், எப்போதும் ஆடாமல் அசையாமல் ஸ்டெடியான வளர்ச்சியில் இருப்பது சினிமா ஹீரோக்களின் சம்பளம்தான்! நான்கைந்து ஃபிளாப் கொடுத்தாலும் ஒரு ஹிட் மூலம் விட்ட மார்க்கெட்டைப் பிடித்துவிடலாம் என்கிற ஹீரோக்களின் 'கேம் பிளான்’ இப்போது வரை லாபம் அளித்தும் வருகிறது.

இதில் கோடம்பாக்கத்தைப் பொறுத்தவரை ரஜினி, கமல் இருவருமே 'டிரெண்ட் செட்டர்’கள். பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனிலும் விருது குவிக்கும் பெர்ஃபார்மன்ஸிலும் இருவரும் புதுப்புது உயரங்களை

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

எட்டிப் பிடித்துக்கொண்டே, சளைக்காமல் மலைக்காமல்  ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களது ஒவ்வொரு படமும் எந்த விளம்பரமும் இல்லாமலேயே அதிகபட்ச கவனத்தை ஈர்த்துக்கொள்ளும். ஆனால், இவர்களுக்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் ஹீரோக்கள், ஒவ்வொரு படத்திலும் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு படம் 'ஆவரேஜ்’ என்றாலும் சம்பளம் முதல் சாட்டிலைட் ரைட்ஸ் வரை எல்லாமே மாற்றி நிர்ணயிக்கப்படும். அதனாலேயே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இவர்களின் ஸ்டேட்டஸில் கணிசமான மாற்றங்கள் இருக்கும்.

ஹீரோ-இயக்குநர் காம்பினேஷனுக்கும் ஹீரோக்களின் அந்தஸ்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு இருக்கிறது. கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, ஹரி... இவர்கள் பல காலமாக விநியோகஸ்தர்களின் 'குட் புக்’கில் இடம் பிடித்திருக்கும் இயக்குநர்கள். ஹீரோவின் தனிப்பட்ட ஓப்பனிங் ப்ளஸ் ஹிட் இயக்குநருடன் காம்பினேஷன் என்றால், அந்தப் படங்களின் மார்க்கெட் மதிப்பு கூடும். ஹீரோவின் முந்தைய பட ரிசல்ட், கை கோத்திருக்கும் இயக்குநர், ஹீரோயின், இசையமைப்பாளர், காமெடியன் உள்ளிட்ட பல 'மேஜிக்கு’களில் நம்பிக்கை வைத்துதான் இயங்குகிறது சினிமா லாஜிக்!

இந்த லாஜிக்- மேஜிக் அடிப்படையில் 2014-ன் முதல் பாதியில் ஸ்கோர் செய்து 'லீட்’ இடங்களைப் பிடித்திருப்பவர்களைப் பற்றிய தகவல்கள் இங்கே...

 அஜித்:

தமிழ் சினிமாவின் செம ஸ்டைல் ஹீரோ. ரஜினிக்கு அடுத்து பிரமாண்ட ஓப்பனிங் உள்ள பாஸ். முந்தைய படம் அட்டர் ஃபிளாப் என்றாலும், அடுத்த படத்துக்குக் கூட்டம் கும்மும். 'நான் கொடுத்த மாதிரி ஃபிளாப் படங்களை வேற யாரும் கொடுத்திருந்தா, இந்நேரம் அட்ரஸே இல்லாம போயிருப்பாங்க...’ என்று வெளிப்படையாகப் பேசுபவர்.

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம் : 15 - 19 கோடி ரூபாய்

மார்க்கெட் வேல்யூ : 'வீரம்’ தமிழ்நாட்டில் 25 கோடி, வெளிநாட்டு உரிமை 8.5 கோடி, டி.வி. ரைட்ஸ் 15 கோடி, கேரளாவில் 1.5 கோடி என இந்தப் படம்  விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்தாலும், தயாரிப்பாளருக்கு சிறிய அளவில் நஷ்டம்.

ஹிட் ஹிஸ்ட்ரி :  'பில்லா’, 'மங்காத்தா’.

ஃபிளாப் மிஸ்ட்ரி :  'பில்லா-2’.

ப்ளஸ் : இளைஞர்களின் ஆதரவு, சலிக்காமல் 'வெல்கம்’ சொல்லும் ரசிகர்கள், புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது. அரசியல் சார்பு, சீண்டும் பன்ச்... என எந்த வம்பும் இல்லாத ஹீரோ என்பதால், பட வெளியீட்டில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

மைனஸ் : ஒரே மாதிரியான படங்களில் நடிப்பது.

 விஜய்

குழந்தைளுக்குப் பிடித்த நடிகர். அசத்தல் நடனம், அட்டகாச காமெடி விஜய் ஸ்பெஷல். இந்தக் காம்போ இப்போது வரை வேறு எந்த ஹீரோவுக்கும் கைவரவில்லை. 'அதிக வன்முறை இருக்காது. குடும்பத்தோடு பார்க்கலாம்’ என்பது அவரது படங்களுக்கான கியாரன்டி. கேரளாவில் தமிழ் நடிகர்களில் விஜய் படத்துக்கு மாஸ் பிசினஸ்.

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம் : 'துப்பாக்கி’ படத்துக்கு 14 கோடி. 'துப்பாக்கி’ இயக்குநர் முருகதாஸுடன் 'கத்தி’க்காகக் கை கோத்திருப்பதால், 'துப்பாக்கி’யைவிட 'கத்தி’ சம்பளம் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் அதிகமாம்.

மார்க்கெட் வேல்யூ : தியேட்டர் வசூல், சாட்டிலைட் உரிமை எல்லாம் சேர்த்து 'துப்பாக்கி’ 70 கோடியைத் தொட்டது. அதே நம்பிக்கையில் 'ஜில்லா’ 70 கோடிக்கு விற்கப்பட்டது. வழக்கமாக விஜய் படம் கேரளாவில் 3.5 கோடிக்கு பிசினஸ் ஆகும். மோகன்லாலுடன் சேர்ந்து நடித்ததால் 4.5 கோடிக்குப் போனது 'ஜில்லா’. ஆனால், அந்தப் படத்தில் விநியோகதஸ்கர்களுக்குக் சின்ன நஷ்டமாம். அதனால் 'கத்தி’ 90 கோடிக்கு பிசினஸ் ஆகலாம் என்கிறார்கள். 'ஜில்லா’ சாட்டிலைட் கிட்டத்தட்ட 15 கோடிக்கு விலை போக, 'கத்தி’யைக் கைப்பற்ற 22 கோடி, 24 கோடி என்று முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன இரண்டு சேனல்கள்.

ஹிட் ஹிஸ்ட்ரி:  'போக்கிரி’, 'துப்பாக்கி’.

ஃப்ளாப் மிஸ்ட்ரி : 'சுறா’.

ப்ளஸ் : டான்ஸ், காமெடி, புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது.

மைனஸ் : மசாலா கதைகளில் மட்டுமே நடிப்பது. அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது பட வெளியீட்டைப் பாதிக்கிறது!

 சூர்யா

பெண்கள், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஹீரோ. அஜித், விஜய்க்கு ஜூனியராக இருந்து குறுகிய காலத்தில் முன்னேறி, அவர்களுக்குக் கடும் சவால் கொடுத்துக்கொண்டிருப்பவர். ஒவ்வொரு படத்துக்கும் சின்சியர் உழைப்பைக் கொட்டுபவர். எந்த வம்பு சர்ச்சைகளிலும் சிக்காதவர். தெலுங்கில் சூர்யாவுக்கு மிகப் பெரிய மார்கெட் உண்டு. அவர் தன் சம்பளத்துடன் தெலுங்கின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கிக்கொள்கிறார். அது சமயங்களில் சம்பளத்தையே தாண்டி எகிறும் கலெக்ஷனைக் கொட்டும்!

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம் :  14-16 கோடி ப்ளஸ் தெலுங்கு ரைட்ஸ்.

மார்க்கெட் வேல்யூ : 'சிங்கம்-2’ தமிழ்நாட்டில் 80-கோடி, தெலுங்கில் 20 கோடி வசூல்.

ஹிட் ஹிஸ்ட்ரி :  'சிங்கம்’, 'சிங்கம்-2’.

ஃப்ளாப் மிஸ்ட்ரி :  'மாற்றான்’.

ப்ளஸ் : ஹேண்ட்சம் லுக், 'குட் பாய்’ இமேஜ்.

மைனஸ் : புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது.

சிவகார்த்திகேயன்

மூன்றே படங்களில் செம ஜம்ப் அடித்து சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று பலரின் மார்க்கெட்டைத் தாண்டி வந்தவர். 'நம்ம வீட்டுப் பையன்’ லுக்கும், காமெடி டைமிங்கும் சிவா ஸ்பெஷல். ஹீரோயிச பில்டப், பன்ச் டயலாக் இல்லாமல், தன்னைத்தானே கலாய்த்துக்கொண்டு இயல்பாக நடிக்கும் டிரெண்டில் ஹிட் அடித்திருக்கிறார்.

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம் : சுமார் 6 கோடி.

மார்க்கெட் வேல்யூ : 'மான் கராத்தே’ சுமார் 20-கோடிக்கு தமிழ்நாட்டில் மட்டுமே பிசினஸ் ஆகியிருக்கிறது.  படத்தின் சாட்டிலைட் உரிமை 9 கோடிக்கு விலை போயிருக்கிறது.

ஹிட் ஹிஸ்ட்ரி :  'வருத்தபடாத வாலிபர் சங்கம்’.

ஃபிளாப் மிஸ்ட்ரி : இன்னும் இல்லை! ('மான் கராத்தே’ ஆவரேஜ் வசூல்.)

ப்ளஸ் : 'நம்ம வீட்டுப் பையன்’ இமேஜ், காமெடி, குழந்தைகளுக்குப் பிடித்த ஹீரோ.

மைனஸ் : பக்கா சினிமா ஹீரோ இமேஜ் இன்னும் கிட்டவில்லை. காமெடியே 'ஹைலைட்’ அம்சமாக இருப்பது!

 விக்ரம்

சினிமாவுக்காக, படத்தில் தன் கேரக்டருக்காக தன்னை வருத்திக் கொள்ளும் நடிகன். 'என் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி இருக்க வேண்டும்’ என மெனக்கெடுபவர். மிகக் கடுமையான உழைப்பாளி. தோல்விகளுக்குத் துவளாமல் மீண்டும் மீண்டும் படையெடுத்து அசத்துவது விக்ரம் ஸ்பெஷல்.

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம்:   7 கோடி ரூபாய்

மார்கெட் வேல்யூ :  தமிழகத்தில் 16 முதல் 20 கோடி வரை பிசினஸ். ஆனால், ஷங்கர் போன்ற மாஸ்டர் இயக்குநர் படமென்றால், இது அப்படியே டபிள், ட்ரிபிள் என எகிறும்.  

ஹிட் ஹிஸ்ட்ரி: 'சாமி’, 'அந்நியன்’.  

ஃப்ளாப் மிஸ்ட்ரி : 'ராஜபாட்டை’, 'தாண்டவம்’.

ப்ளஸ் : க்ளாசிக் ஆக்டர். எந்த கேரக்டருக்கும் உயிர் கொடுப்பது.

மைனஸ் : நடிப்புக்குக் கொடுக்கும் கவனத்தை, கதை, திரைக்கதைகளில் செலுத்தாதது!

தனுஷ்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை பெர்ஃபார்மர். 'கொலவெறி’ மூலம் உலகக் கவனம் ஈர்த்து, பாலிவுட்டிலும் 'ஹிட் அறிமுகம்’ கொடுத்திருப்பவர். 'கொக்கி’ குமாரோ, கே.பி.கருப்போ... எந்த கேரக்டருக்கும் பொறுப்பு எடுத்துக்கொண்டு பின்னி எடுப்பவர்.

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம் : 6 கோடி ரூபாய்

மார்க்கெட் வேல்யூ :  தமிழ் நாட்டில் வியாபாரம் 6-8 கோடி. வெளிநாட்டு உரிமை 1.5 கோடி. சாட்டிலைட் உரிமை 9 கோடி ரூபாய்.

ஹிட் ஹிஸ்ட்ரி : 'ஆடுகளம்’.

ஃப்ளாப் மிஸ்ட்ரி :  'நய்யாண்டி’

ப்ளஸ் : விடலை லுக், பவர்ஃபுல் நடிப்பு, டான்ஸ், காமெடி, அசால்ட் தில்... என, கல்லூரி இளைஞர்களை ஈர்க்கும் அம்சங்கள்.

மைனஸ் : படத்தின் கதை, திரைக்கதையைக் கண்டுகொள்ளாமல் பளிச்சென்று நடித்துவிட்டு மட்டும் செல்வது.  

 சிம்பு

எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி சிம்பு ஸ்பெஷல். சினிமா தொழில்நுட்பம் தெரிந்த நடிகன். கொஞ்சம் கிளிஷே நடிப்பு என்றாலும்,  ஏதேனும் மசாலா சேர்த்து சுவாரஸ்யப்படுத்திவிடுபவர். ஆன் ஸ்க்ரீன், ஆஃப் ஸ்க்ரீன்... எங்கும் எதிலும் பரபரப்பு சேர்த்துவிடுவார்.

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம் : 6 கோடி ரூபாய்.

மார்க்கெட் வேல்யூ :  'போடா போடி’ தமிழ்நாட்டில் 4 கோடி பிசினஸ்.  வெளிநாடு  உரிமை 1.5 கோடி. இதுதவிர சாட்டிலைட் தனி. தற்போது ஒப்பந்தமாகி இருக்கும் கௌதம் மேனன் படத்தில் நடிக்க, வழக்கத்தைவிட அதிகமாக  சம்பளம் கேட்டிருக்கிறார்.

ஹிட் ஹிஸ்ட்ரி :  'மன்மதன்’, 'விண்ணைத் தாண்டி வருவாயா’.

ஃப்ளாப் மிஸ்ட்ரி : 'போடா போடி’.

ப்ளஸ் :  துறுதுறுப்பு ப்ளஸ் குறும்பு.

மைனஸ் : கால்ஷீட் சொதப்பல், இயக்குநர்களைத்  தவிக்கவைப்பது, கிசுகிசு சர்ச்சைகள், கடந்த சில வருடங்களாக படமே வெளியாகாமல் இருப்பது.

ஆர்யா

யாருடனும் போட்டி இல்லை. எல்லாருடைய தோளிலும் கைபோட்டுக்கொண்டே தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த சாக்லேட் பாய். எந்தப் பஞ்சாயத்தும் இருக்காது என்பதால்,  இயக்குநர்களின் ஃபேவரைட் ஹீரோ.

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம் : 5-6 கோடி ரூபாய்

மார்க்கெட் வேல்யூ : 'ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு  15 கோடி வரை பிசினஸ் ஏறியிருக்கிறது.

ஹிட் ஹிஸ்ட்ரி : 'ராஜா ராணி’.

ஃபிளாப் மிஸ்ட்ரி :  'இரண்டாம் உலகம்’.

ப்ளஸ் : பூனைக் கண்கள், ஹேண்ட்சம் லுக்.

மைனஸ்: ப்ளேபாய் இமேஜ்.

 விஷால்

உதவி இயக்குநர் டு நடிகன் என்று உயர்ந்தவர். ஆக்ஷன் கதைகளில் பொறி பறக்கவைத்து அட்டகாச 'டேக் ஆஃப்’ எடுத்தவர், தொடர் தோல்விகளில் துவண்டுவிட்டார். 'பாண்டியநாடு’ மூலம் மீண்டவர், இப்போது முன்னைக் காட்டிலும் அதிக அலெர்ட்!

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம் : 5 கோடி வரை... (பெரும்பாலும் சொந்தத் தயாரிப்புதான்!)

மார்க்கெட் வேல்யூ : 'சண்டக் கோழி’, 'திமிரு’க்குப் பிறகு விஜய்க்கு நிகராக இருந்த காலமும் உண்டு. ஆனால், தொடர் ஃபிளாப்கள் அதில் சரிவு ஏற்படுத்தின. 'பாண்டிய நாடு’, 'நான் சிகப்பு மனிதன்’ மூலம் சற்றே உயர்ந்திருக்கிறது கிராஃப்.

ஹிட் ஹிஸ்ட்ரி : 'சண்டக் கோழி’, 'திமிரு’.

ஃப்ளாப் மிஸ்ட்ரி :  'சத்யம்’.

ப்ளஸ் : உயரம், மேன்லி லுக், ஆக்ஷன்.

மைனஸ் :  ஒரே மாதிரியான பாடிலாங்வேஜ்.

 கார்த்தி

அண்ணன் சூர்யாவைப் போலவே குழந்தைகளுக்கு மிகப் பிடித்த நடிகர். பல்ப் கண்களும் பளிச் சிரிப்புமாகப் பெண்களைச் சட்டென கவர்ந்தவர். அறிமுகப் படத்திலேயே கார்த்தி அடித்த ஹிட், இப்போதைய எந்த ஹீரோவின் ஹிஸ்ட்ரியிலும் இல்லாதது! அதனாலேயே அடுத்தடுத்த சவால்களும் பிரமாண்டமானதாக அமைந்துவிட்டன.

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம் : பெரும்பாலும் சொந்தப் படங்களில் மட்டுமே நடிக்கிறார். அதனால் படத்தின் லாபம் - நஷ்டமே அதைத் தீர்மானிக்கிறது. 'ஆல் இன் ஆல் அழகுராஜா’, 'பிரியாணி’ படங்களின் சாட்டிலைட் உரிமை 22 கோடி பேக்கேஜாக விலை போனது.

ஹிட் ஹிஸ்ட்ரி : பருத்தி வீரன், சிறுத்தை.

ஃபிளாப் மிஸ்ட்ரி : ஆல் இன் ஆல் அழகுராஜா.

ப்ளஸ் : இயல்பான நடிப்பு. 'ஃபேமிலி ஆடியன்ஸை’ ஈர்க்கும் யதார்த்தம்.

மைனஸ் : ரிஸ்க் எடுக்காத ஒரே மாதிரியான நடிப்பு, பழகிய கதை, திரைக்கதை பாணியிலான படங்கள்.  

 விஜய் சேதுபதி

எந்த கேரக்டர் கொடுத்தாலும் கண்களாலேயே நடித்துவிடுகிற நடிகன்.  ரசிகர்கள், விமர்சகர்களிடையே லைக்ஸ் அள்ளினாலும், விநியோகஸ்தர்கள் சேதுபதியை இன்னும் 'புரொபேஷன்’ கண்காணிப்பில்தான் வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், இதுவரை அவர் நடித்தவை 'மினிமம் பட்ஜெட்’ படங்கள்தான். ஹீரோ பில்டப் இல்லாமல் எந்த கேரக்டரிலும் நடிக்கக்கூடியவர். தமிழ் சினிமா ஹீரோக்களிடையே ஆஃப் த ஸ்க்ரீன் டிரெண்ட் செட்டராக இருப்பவர்.

'பாஸ்' அஜித், 'மாஸ்' விஜய் க்ளாஸ் சூர்யா,'க்ரேஸ்'சிவகார்த்திகேயன்

சம்பளம் : 2 கோடி வரை

மார்க்கெட் பிசினஸ் : 'சூது கவ்வும்’ படத்துக்குப் பிறகே விஜய்சேதுபதி படங்களுக்கு தியேட்டர்கள் மொத்தமாகக் குத்தகைக்குக் கிடைக்கிறது. மற்ற ஹீரோக்களைவிட இவர் படங்களின் சாட்டிலைட் உரிமை பல்க் விலைக்குப் போகிறது.

ஹிட் ஹிஸ்ட்ரி : 'பீட்சா’, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’.

ஃபிளாப் மிஸ்ட்ரி : 'ரம்மி’.

ப்ளஸ் :  கண்கள், நடிப்பு.

மைனஸ் : குறும்பட பாணியிலான படங்களிலேயே நடித்துக்கொண்டிருப்பது.

விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், இயக்குநர்கள்... என பலதரப்பு நபர்களிடம் பேசித் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் தெரியவரும் விஷயம் இதுதான்... அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை, இப்போதைய நிலவரப்படி கைப்பற்றி இருப்பது... சிவகார்த்திகேயன். ஆனால், அதே இடத்தை இரண்டு வருடங்களுக்கு  முன்னர் கார்த்தியும், சில வருடங்களுக்கு முன் விக்ரமும் விஷாலும் கையில் வைத் திருந்தார்கள். ஆக, இந்த மியூசிக்கல் சேர் விளையாட் டில் இந்த ரவுண்ட் சிவகார்த்தி கேயன் வசம்.

'த்ரீ கிங்ஸ்’ போல முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் அஜித், விஜய், சூர்யாவை முந்துவதே மற்ற ஹீரோக்கள் எதிர்கொண்டிருக்கும் உண்மை யான சவால். அதை முறியடிப்பதற்கான 'கேம் பிளான்’ யாரிடம் இருக்கிறதோ!?