Published:Updated:

Vaathi Audio Launch: `Captain Miller, வடசென்னை- 2 அப்டேட்; வா வாத்தி, தேன்மொழி பாடல்' - ஹைலைட்ஸ்

வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்

படத்தின் டீசரில் `படிப்ப பிரசாதம் மாதிரி கொடுங்க, 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி விக்காதீங்க' என்று ஒரு வசனம். அதுதான் இந்தப் படத்தோட மைக்கரு" வாத்தி மேடையில் தனுஷ்.

Published:Updated:

Vaathi Audio Launch: `Captain Miller, வடசென்னை- 2 அப்டேட்; வா வாத்தி, தேன்மொழி பாடல்' - ஹைலைட்ஸ்

படத்தின் டீசரில் `படிப்ப பிரசாதம் மாதிரி கொடுங்க, 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி விக்காதீங்க' என்று ஒரு வசனம். அதுதான் இந்தப் படத்தோட மைக்கரு" வாத்தி மேடையில் தனுஷ்.

வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்
பிப்ரவரி 17ம் தேதி தனுஷின் 'வாத்தி' திரைப்படம் வெளியாகக் காத்திருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் படத்தின் இசையின் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் நடிகர் தனுஷ், இயக்குநர் வெங்கி அத்லூரி, சம்யுத்தா, பாரதிராஜா எனப் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய நடிகர் தனுஷ், `லாக்டவுன் காலத்தில்தான் வெங்கி இந்தக் கதையை கூறினார். நானே அப்போது வேலையில்லாமல் மனஉளைச்சலில் இருந்தேன். இத்திரைப்படத்தை எப்படியாவது மறுத்துவிடலாம் என எண்ணினேன். கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டது. இத்திரைப்படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். எதோ புண்ணியம் பண்ணியிருக்கேன். எனக்காக எங்கெங்கோ இருந்து இவ்வளவுபேர் வந்திருக்கீங்க. எல்லோருக்கும் ரொம்ப நன்றி.

வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்
வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்

இந்தப் படம் 1990 காலகட்டத்துல நடக்குற ஒரு கதை. இதுல வேடிக்கை என்வென்றால், அப்போ நான் ஒரு ஸ்டூடண்ட். ஸ்டூடண்ட் ஆக இருக்குறப்போ டீச்சர் வேலை ஈசின்னு நெனச்சேன். டீச்சர்லாம் எப்போவேணும்னா வரலாம், எப்போவேணும்னா போலாம். ஸ்டூடன்ட் நம்மதான் பர்மிஷனெல்லாம் கேக்கணும்னு நெனைச்சேன். ஆனால் முதல்நாள் படப்பிடிப்பின் போதுதான் டீச்சர் வேலை எவ்வளவோ கஷ்டம்னு தெரிஞ்சது. டீச்சர் கைல தான் நம்ம தலை எழுத்தே இருக்கு. பொல்லாதவன் திரைப்படத்தில் இருந்து எனக்கும் ஜி.விக்குமான நட்பு தொடர்ந்து வருகிறது. ஜி. வி இப்போது கோல்டன் ஃபார்மில் இருக்கிறார்.

டீசரில் 'படிப்ப பிரசாதம் மாதிரி கொடுங்க, 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி விக்காதிங்க'ன்னு என்று ஒரு வசனம் வரும். அது தான் இத்திரைப்படத்தின் மையக்கரு.

பள்ளிப் படிப்பை படித்துக்கொண்டிருக்கும் போது டியுஷன் சென்றேன். படிப்பதற்காக அல்ல. என் கேர்ள் பிரண்ட்டை பார்ப்பதற்கு தான். அப்போது என் வண்டியை வைத்து சத்தம் கொடுத்து என் கேர்ள் பிரண்டுக்கு சிக்னல் கொடுப்பேன். அதப் பார்த்து என் ஆசிரியர் 'இவன பாரு எங்க உருப்பட போறான்' என்றார்கள். பள்ளியில் படிக்கும்போது பெற்றோர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்திவிடுவார்கள் என்று கவனமின்றி சுற்றி வந்தேன். என் பிள்ளைகளை படிக்க வைக்கும் போது தான் அந்தக் கஷ்டம் தெரிகிறது. எந்தச் சூழ்நிலையிலும் படிப்பு மிகவும் அவசியமானது. எண்ணம்போல் வாழ்க்கை, உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள். அது தான் உங்களைக் காப்பாற்றும். நான் என்ன விஷயங்களைச் சரி செய்து கொள்ள வேண்டும் என்று ஹோம் வொர்க் செய்வேன். 2010 வரை என்ன இப்படி செய்திருக்கிறோம் எனத் தோன்றும் இனி வரும் வருடங்கள் அப்படி இருக்கக் கூடாது என எண்ணுவேன்" என்றார்.

வாத்தி இசை வெளியீட்டு விழா
வாத்தி இசை வெளியீட்டு விழா

'Miller, Miller, Miller... Captain Miller...' ரசிகர்கள் ஆரவாரம்...

"அதற்குத் தான் சன்யாசி வடிவில் தாடி வைத்துச் சுற்றுகிறேன்" என்று சொன்னார். வடசென்னை-2 க்கான சத்தம் எழ, "அதை வெற்றிமாறன் அலுவலகம் முன்பு சென்று கேளுங்கள். எப்போ நடக்கும் என்று தெரியவில்லை. ஆனா, கண்டிப்பாக அது நடக்கும்" என்றார். பிறகு, "என் வண்டிக்கு பின்னால் என்னைப் பின் தொடர்ந்து வருகிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களை நம்பி அனுப்பிவைக்கிறார்கள். அப்படி நீங்கள் செய்யும்போது எனக்கு பயமாக இருக்கிறது" என்று தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொன்னார். உங்களின் நெருங்கிய நண்பர்கள் யார் என்று கேட்ட கேள்விக்கு, நண்பர்கள் என்று பலரை மேடையில் அழைத்தார். அப்போது நடராஜ் என்பவரை அழைத்து, "இவர் என் தந்தைக்கு டிரைவராக இருந்தார், இப்போது எனக்கும் டிரைவராக இருக்கிறார். இவர் எப்போதும் எனக்கு நண்பர் தான். யாத்ரா, லிங்கா என் நெருங்கிய நண்பர்கள்" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

எனக்காக இவளோ பேர் வந்து இருக்கீங்க... உங்களுக்கு என்னால ஒன்னும் பண்ண முடியாது ... சோ... இன்னொரு பாட்டு எனக்கூறி, `திருச்சிற்றம்பலம்' படத்திலிருந்து தேன்மொழி பாடலை இரண்டு வரிகள் பாடினார்.