Published:Updated:

Dhanush: ரஜினியின் இயக்குநருடன் இணைகிறாரா தனுஷ்? பிறந்த நாளில் `கேப்டன் மில்லர்' டீசர்; D50 அப்டேட்!

'கேப்டன் மில்லர்' பூஜையின் போது

இந்நிலையில் எல்லா பிரச்னைகளையும் சரிசெய்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கின்றனர். அனேகமாக ஜூன் மாதம் முழுவதும் `கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு பரபரக்கும்.

Published:Updated:

Dhanush: ரஜினியின் இயக்குநருடன் இணைகிறாரா தனுஷ்? பிறந்த நாளில் `கேப்டன் மில்லர்' டீசர்; D50 அப்டேட்!

இந்நிலையில் எல்லா பிரச்னைகளையும் சரிசெய்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கின்றனர். அனேகமாக ஜூன் மாதம் முழுவதும் `கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு பரபரக்கும்.

'கேப்டன் மில்லர்' பூஜையின் போது

ரஜினியின் `ஜெயிலர்' படத்தை அடுத்து, அதன் இயக்குநர் நெல்சன், தனுஷை இயக்குகிறார் என்றும் `ஜெயிலர்' படம் தொடங்குவதற்கு முன்னரே தனுஷிடம் அவர் கதை சொல்லி விட்டார் என்றும், ரஜினி படம் வெளியான பின்னர், தனுஷ் படத்தை ஆரம்பிப்பார் என்றும் தகவல் உலவுகிறது. இது பற்றி தனுஷின் வட்டாரத்தில் விசாரித்தேன்.

'கேப்டன் மில்லர்'
'கேப்டன் மில்லர்'

தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் `கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷின் ஜோடியாக பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், சுதீப் கிஷன், ஜான் கொக்கேன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அடுத்த மாதமும், அதற்கு அடுத்த மாதம் டீசரும் வெளியாகிறது என்று அறிவித்து விட்டனர்.

அருண் மாதேஸ்வரன்
அருண் மாதேஸ்வரன்

`கேப்டன் மில்லர்' நிறைவுகட்ட படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் நடந்து வந்தது. வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட இடத்தில் அனுமதி இன்றி படப்பிடிப்பு நடத்தினார்கள், வனத்துறை பகுதியில் வெடிகுண்டு வெடித்ததால் படப்பிடிப்பு நிறுத்தம் என பல்வேறு பிரச்சினையின் காரணமாக ஒரே ஷெட்யூலில் நடந்திருக்க வேண்டிய படப்பிடிப்பு, இடைவெளி விட்டு நடந்தது. இந்நிலையில் எல்லா பிரச்னைகளையும் சரிசெய்து, மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கின்றனர். அனேகமாக ஜூன் மாதம் முழுவதும் `கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு பரபரக்கும். என்றும் அதன்பின் தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் `D50' படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். இந்நிலையில் ஜூலை 28ல் தனுஷின் பிறந்தநாள் வருகிறது. அன்று படத்தின் 'கேப்டன் மில்லர்' டீசரையும், `D50' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிறார்கள்.

D50
D50

என்கிறார்கள். தனுஷின் 50-வது படமான D50 ஒரே இடத்தில், ஒரே கட்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அரங்கம் அமைக்கும் பணிக்காக இப்போது இடம் பார்த்து வருகின்றனர். அதற்கான லொகேஷன் கிடைத்ததும், செட் வொர்க்குகளே ஒரு மாதம் நீடிக்கும் என்கிறார்கள்.

இந்நிலையில் தனுஷ் - நெல்சன் தகவலில் உண்மையில்லை என்றும், இதே பேச்சு ஒரு வருடத்திற்கு முன்னரே உலவியது. இப்போது மறுபடியும் அதைப் பரப்பி வருகின்றனர். மற்றபடி தனுஷிடம் நெல்சன் கதை சொல்லவே இல்லை என்கிறார்கள்.