கட்டுரைகள்
Published:Updated:

திரைப்பட விழாவில் கமல்... ரிகர்சல் வைத்த பா.இரஞ்சித்... ஜி.எம்.சுந்தர் உடைக்கும் ரகசியங்கள்

ஜி.எம்.சுந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எம்.சுந்தர்

கம்பேக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காலங்கள்ல என்னை நானே அப்டேட் பண்ணிக்குவேன். உலக சினிமாக்கள் பார்ப்பேன்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறிமுகம் செய்து வைத்த நடிகர் என்ற பெருமை ஜி.எம்.சுந்தருக்கு உண்டு. ‘புன்னகை மன்னன்' படத்தின் மூலம் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர், சமீபத்திய ‘மண்டேலா', ‘சார்பட்டா பரம்பரை' ‘துணிவு' வரை கெத்து ரோல்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். அடுத்தும் அரை டஜன் படங்களில் நடித்து வரும் சுந்தரிடம் பேசினேன்.

கமலின் ‘சத்யா' வந்து 35 வருஷம் ஆகிடுச்சு. இன்னமும் உங்களை ‘சத்யா' சுந்தர்னுதான் கூப்பிடுறாங்க. சினிமாவில் உங்களோடது ரொம்ப நீண்ட பயணமாச்சே?

‘‘சந்தோஷமா இருக்குங்க. சினிமாவில் நடிக்கப் போறேன்னு எங்க அப்பாகிட்ட சொன்னதும், அவர் எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் போட்டார். ‘மொதல்ல ஒரு டிகிரியை முடி. அப்புறமா நடி'ன்னு சொன்னார். அப்பா சொன்னது போலவே காலேஜ் முடிச்சிட்டு, நடிப்பைக் கத்துக்க இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்தேன். கூத்துப்பட்டறையில் உள்ள நடிப்பையும் தெரிஞ்சுக்க, அங்கேயும் போனேன். அப்புறம், என்னை இன்னும் செதுக்கிக்கொள்ள ஆங்கில நாடகங்கள் குறித்த நடிப்புப் பயிற்சிகளும் எடுத்துக்கிட்டேன். இப்படி ஒரு சூழலில்தான் கே.பாலசந்தர் சார்கிட்ட வாய்ப்பு கேட்கப் போனேன். அங்கே அனந்து சார் அறிமுகம் கிடைச்சது. உலக சினிமாக்கள் குறித்து அவரிடம் பேசும் போது, நாங்க நட்பானோம். அந்த நட்பில்தான், ‘புன்னகை மன்னன்', ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு', ‘சத்யா'ன்னு கமல்சார்கிட்ட சொல்லி அவர் எனக்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார். உலக திரைப்பட விழாக்கள் டெல்லி, கோவான்னு எங்கே நடந்தாலும் என்னையும் அழைச்சிட்டுப் போயிருக்கார். ‘புன்னகை மன்னன்' சமயத்திலும் கமல் சார் பெரிய ஸ்டார். ஆனாலும் டெல்லி திரைப்பட விழாவுக்கு அவரும் எங்களுடன் வந்திருக்கார். அவருடன் நடிச்ச ‘சத்யா' எனக்கு மறக்க முடியாத படம். நல்ல ரோல். பெரிய ஸ்டாருடன் நடிச்ச படம்னால முதன்முதலா தியேட்டர் விசிட் போயிருந்தேன். யாராவது என்னைக் கண்டுக்குவாங்களான்னு எதிர்பார்ப்போடு ஒரு ஓரமா நின்னுட்டிருந்தேன். படம் பார்த்த அத்தனை பேரும் என்னை அடையாளம் கண்டு பாராட்டினதை மறக்கவே முடியாது. ‘சத்யா' அந்தத் தலைமுறை இளைஞர்கள்கிட்ட செம ரீச். இப்பவும் இயக்குநர்கள் சிலர் ‘சத்யா' சுந்தர்னுதான் சொல்வாங்க. இதுல எடிட்டர் லெனின் சார், அவரது போனில் என் நம்பரை ‘பர்ஃபாமர்'னுதான் பதிஞ்சு வச்சிருக்கார். அப்படி ஒரு நல்ல நடிகனாகவும் பெயர் வாங்கினதும் சந்தோஷமா இருக்கு.''

திரைப்பட விழாவில் கமல்...
ரிகர்சல் வைத்த பா.இரஞ்சித்...
ஜி.எம்.சுந்தர் உடைக்கும் ரகசியங்கள்

உங்க கம்பெனிக்கு கம்பேக்னு பெயர் வச்சிருக்கீங்க.. ஏன்?

‘‘கம்பேக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காலங்கள்ல என்னை நானே அப்டேட் பண்ணிக்குவேன். உலக சினிமாக்கள் பார்ப்பேன். நடிப்பு டிரெயினிங் எங்காவது நடந்தால் இப்பவும் போய் பங்கேற்பேன். காணாமல் போனால்கூட, சோர்ந்துபோகாமல் மறுபடியும் கம்பேக் ஆகிடுவேன். அப்படி அடிக்கடி கம்பேக் ஆகுறதனால என் தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘கம்பேக்'னு பெயர் வச்சிட்டேன். ‘சார்பட்டா பரம்பரை'யில் படப்பிடிப்புக்கு முன்னாடி ரிகர்சல் இருக்குதுன்னு பா.இரஞ்சித் சார் சொன்னதும் சந்தோஷப்பட்டேன். எனக்கு கம்பேக் கொடுத்த படம் அது. பதினைந்து வருஷம் வாய்ப்பே இல்லாமல் சும்மா இருந்திருக்கேன். அந்தச் சமயத்துல என் நண்பன் பாபுதான் எனக்கு உதவி பண்ணியிருக்கார். கம்பேக் ஆகணும்னு முடிவு பண்ணின சமயத்துல, ‘சூதுகவ்வும்' படம் வந்துச்சு. படம் பார்த்துட்டு உடனே நலன் குமாரசாமியிடம் வாய்ப்பு கேட்டுப் போனேன். அப்படித்தான் ‘காதலும் கடந்து போகும்' வாய்ப்பு கிடைச்சது. அதுல ‘திருவிளையாடல்' சிவாஜி சார் மாதிரி நான் நடந்து போற சீனும் பிரபலமாச்சு...''

திரைப்பட விழாவில் கமல்...
ரிகர்சல் வைத்த பா.இரஞ்சித்...
ஜி.எம்.சுந்தர் உடைக்கும் ரகசியங்கள்

ஆனந்த் சீனிவாசனுடன் சேர்ந்து மத்திய பட்ஜெட், பங்குச்சந்தை, பங்குகள் வாங்குறதுன்னு பொருளாதாரம் சம்பந்தமாகவும் கலக்குறீங்களே..?

‘‘ஆனந்த் சீனிவாசன் சாருடன் பல வருஷ நட்பு உண்டு. உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் இருந்த காலங்களிலேயே நானும் அவரும் உட்கார்ந்து பொருளாதாரம் குறித்து விவாதிப்போம். நல்ல நண்பர். எனக்குப் பட வாய்ப்புகள் இல்லாத சமயங்களில் பங்குச் சந்தை குறித்துப் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். இப்ப ஜோதிடம் தொடர்பான புத்தகங்களும் நிறைய படிக்கறேன்'' - வியக்க வைக்கிறார் ஜி.எம்.சுந்தர்.