கட்டுரைகள்
Published:Updated:

``இந்த வருஷம் தனி ஒருவன் 2 அறிவிப்பு வந்துரும்' '

ஜெயம் ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயம் ரவி

PS1 ஹிட்டானது மாதிரி PS2 இன்னும் ஹிட்டாகும். `பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் முடிச்சிட்டு `அகிலன்' ஷூட்டிங் போனேன். எப்போதுமே ஒரு படத்தோட ஷூட்டிங் முடிச்சிட்டு அடுத்த படத்தோட ஷூட்டிங் போறது சிரமமான ஒன்னா இருக்காது.

தமிழ் சினிமாவின் மோஸ்ட் பிராமிஸிங் ஆக்டர் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிய 20 வருடங்களில் 25 படங்களைக் கடந்திருக்கிறார். அவர் நடித்திருக்கும் `அகிலன்' படத்தின் வெளியீட்டு வேலைகளில் இருந்தவரைச் சந்தித்துப் பேசினேன்.

`பூலோகம்' படத்துக்குப் பிறகு இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன்கூட இணைஞ்சிருக்கீங்க. `அகிலன்' எப்படியான படம்?

`` `பூலோகம்' படம் பிடிச்சவங்களுக்கு கண்டிப்பா ‘அகிலன்' படமும் பிடிக்கும். ரொம்பப் புதுசா நடிச்சிருக்கேன். லைட்டா நெகட்டிவ் கிரே ஷேட் இருக்கும். டைரக்டர் கல்யாண் என்கிட்ட கதை சொன்னப்பவே ரொம்பப் பிடிச்சிருந்தது. `பேராண்மை' படத்துல இருந்து கல்யாணைத் தெரியும். முதல்ல, கதைல என்னோட கேரக்டர் ஸ்கெட்ச்சை சொன்னார். அப்புறம் ஒவ்வொரு சீனையும் விளக்கிச் சொன்னார். `அகிலன்' கேரக்டர் புதுசா இருந்தது. பண்ணிடலாம்னு தோணுச்சு. கல்யாண் மாதிரியான சிந்தனைகளில் இருக்குறவங்க கொஞ்ச பேர்தான். இந்தக் கதையை விட்டுறக்கூடாதுன்னு முடிவு பண்ணி `அகிலன்' படத்தை கமிட் பண்ணினேன்.''

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

படத்தோட களமா துறைமுகம் இருக்கு. எங்கெல்லாம் ட்ராவல் பண்ணுனீங்க?

``ரெண்டு மூணு இடத்துல ஷூட் பண்ணினோம். முக்கியப் பகுதியா தூத்துக்குடிதான் இருந்தது. அங்கே வெயிட்டிங் நேரம் அதிகம். அதாவது கப்பல் வர்றதுக்கு அதிக நேரம் தேவைப்படும். அப்போ, எங்களுக்குத் தேவையான சில விஷயங்களை ஃபாலோ பண்ண நேரம் கிடைச்சது. இதுல சவாலான விஷயம் என்னன்னா, ஒரு சீனுடைய தொடர்ச்சி நாலு லொகேஷன்ல நடக்கும். அதனால, நாலு ஷெட்யூல் போற மாதிரியிருந்தது. ஒரு ஷெட்யூல்ல என்ட்ரி இருக்கும், எக்ஸிட் வேற லொகேஷன்ல அடுத்த ஷெட்யூல்ல எடுக்குற மாதிரியிருக்கும். கிட்டத்தட்ட 120 நாள்கள் இந்த லூப்லயே ஷூட்டிங் முடிச்சிட்டு வந்திருக்கோம்.''

நீங்களும் பிரியா பவானி சங்கரும் முதல்முறையா இந்தப் படத்துல சேர்ந்து நடிக்கிறீங்க?

``அவங்க நல்ல ஆர்ட்டிஸ்ட். அவங்களுக்குத் தமிழ் தெரியுங்கிறதால டயலாக்ஸ் புரிஞ்சு நடிக்கிறாங்க. அவங்களுடைய கரியர்ல முக்கியமான படமா `அகிலன்' இருக்கும்.''

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

உங்க அண்ணன் ராஜா இயக்கத்துல நீங்க நடிச்ச `தனி ஒருவன்' படம் மிகப் பெரிய ஹிட். `தனி ஒருவன் 2' அறிவிப்பு எப்போ வரும்?

``எல்லாமே ரெடியா இருக்கு. பேச்சுவார்த்தைகள் போயிட்டிருக்கு. இந்த வருஷம் கண்டிப்பா அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துரும்.''

'பொன்னியின் செல்வன் 2' படம் எப்படி வந்திருக்கு?

``மல்ட்டி ஸ்டார் படம் தேவையான ஒண்ணு. யாரும் பண்ண முடியாத பொன்னியின் செல்வனை மணி சார் பண்ணியிருக்கார். தமிழ் சினிமா இதைப் பண்ணியிருக்கு. இது ரொம்ப பாசிட்டிவான விஷயம்.

PS1 ஹிட்டானது மாதிரி PS2 இன்னும் ஹிட்டாகும். `பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் முடிச்சிட்டு `அகிலன்' ஷூட்டிங் போனேன். எப்போதுமே ஒரு படத்தோட ஷூட்டிங் முடிச்சிட்டு அடுத்த படத்தோட ஷூட்டிங் போறது சிரமமான ஒன்னா இருக்காது. டக்குனு கூடு பாஞ்சிருவேன். ஆனா, இந்த முறை அப்படியில்ல. கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு. `பொன்னியின் செல்வன்' படத்துல இளவரசரா நடிச்சிட்டு இப்போ அகிலனா நடிச்சு முடிச்சிருக்கேன்.''

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

இருபது வருட சினிமா கரியர்ல இருபத்து அஞ்சு படங்கள் வரைக்கும் பண்ணிட்டீங்க?

``ஸ்கிரிப்ட்தான் என்னைத் தேடி வருது. வொர்க்ல சின்சியரா இருந்தா நல்ல கதைகள் நம்மளைத் தேடி வரும். ஒரே மாதிரியான ஜானர் கதைதான் பண்ணுவேன்னு லாக் போட்டுக்குறது இல்ல. அதனாலதான் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள் பண்ணுறேன். இனிமேலும் பண்ணுவேன். எப்போதும் முழுக் கதையும் கேட்டுட்டுதான் ஓகே சொல்லுவேன். ஏன்னா, இதை விட்டா எனக்கு வேற வேலை கிடையாது.''

`கோமாளி' படம் எடுத்த பிரதீப் ரெங்கநாதன் இப்போ `லவ் டுடே' படத்துல நடிகராவும் ஜெயிச்சிருக்காரு. அவரோட வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?

``நல்ல வளர்ச்சி இருக்கும்னு நல்லாவே தெரியும். அப்போதே பிரதீப்கிட்ட இதைச் சொன்னேன். திறமையிருந்தா ஜெயிச்சே ஆகணும். அதை யாராலும் தடுக்க முடியாது. பிரதீப்கிட்ட திறமையோடு முயற்சியும் இருந்தது.''

உங்களுக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிச்ச விளையாட்டுன்னு சொல்லிருக்கீங்க. ஆனா செலிபிரிட்டி கிரிக்கெட்டில் உங்கள பார்க்கமுடியலையே?

``நானும் ஒரு தடவ போய் அதுல கலந்துகிட்டேன். எனக்கு அது சரியா வரல. அதனால அதுக்கப்புறம் கலந்துக்கல.''