சினிமா
Published:Updated:

“இன்னும் நூறு படங்களில்கூட அஜித்கிட்ட அடி வாங்க ரெடி!”

 ஜான் கொக்கேன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜான் கொக்கேன்

அஜித் சார பார்த்தப்போ சந்தோஷமா இருந்தது. என்ன பேசறதுன்னு கூட தெரியல. ‘வீரம்’ படத்தில் சின்ன ரோல் பண்ணியிருப்பேன். அப்போதிலிருந்தே அவர்கூட டச்ல இருந்தேன்.

“ ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வேம்புலி கேரக்டர் எனக்குப் பெரிய பெயரைக் கொடுத்தது. அதுக்கு அப்புறம் எனக்குக் கிடைச்ச பொக்கிஷம் ‘துணிவு.’ ‘வாழ்க்கையில் நேரம் ரொம்ப முக்கியம்’னு அஜித் சார் சொல்லுவார். இப்போ எனக்கான நேரம் ஸ்டார்ட் ஆகிருச்சு” என சந்தோஷமாகப் பேசுகிறார் நடிகர் ஜான் கொக்கேன்.

“ ‘துணிவு’ பட வாய்ப்பு எப்படி வந்தது?”

‘‘தமிழ்ல வெப் சீரிஸ் ஒன்னு பண்ணுறதுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தேன். அந்த நேரத்துல ‘துணிவு’ படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமாக என்னால் நடிக்க முடியல. அஜித் சாரின் ரசிகரா ரொம்ப வருத்தப்பட்டேன். ரெண்டு வாரம் தூக்கமே இல்ல. கொஞ்ச நாளைக்கு அப்புறம் ‘துணிவு’ படத்துல இன்னொரு கேரக்டர் இருக்குன்னு சொன்னாங்க. திரும்ப வந்த வாய்ப்ப விடாம உடனே ஓகே சொல்லிட்டேன். கார்ப்பரேட் வில்லன் ரோல்னு சொல்லிதான் கமிட் பண்ணுனாங்க. மெயின் வில்லன் கேரக்டர்னு அப்போ தெரியாது. படம் ரிலீஸுக்குப் பிறகுதான் எல்லாம் தெரிய வந்தது. இந்தப் படத்தோட ஸ்பெஷல் இதுதான். எல்லாத்தையுமே ரகசியமாகத்தான் வச்சிருந்தாங்க. என் ரோல் 60 வயசு கெட்டப் மாதிரி இருந்தது. மேக்கப் டெஸ்ட் எடுத்தாங்க. வினோத் சாருக்கு சரியா படாததால, உடனே என் கேரக்டரை கார்ப்பரேட் இளைஞனா மாத்திட்டாங்க.’’

“இன்னும் நூறு படங்களில்கூட அஜித்கிட்ட அடி வாங்க ரெடி!”

“ஷூட்டிங்ல அஜித்தைப் பார்த்த அனுபவம்?”

‘‘அஜித் சார பார்த்தப்போ சந்தோஷமா இருந்தது. என்ன பேசறதுன்னு கூட தெரியல. ‘வீரம்’ படத்தில் சின்ன ரோல் பண்ணியிருப்பேன். அப்போதிலிருந்தே அவர்கூட டச்ல இருந்தேன். எப்போதும் என்னை மோட்டிவேட் பண்ணுவார். சண்டைக் காட்சிகள் எடுக்கிறப்போ ரொம்ப அக்கறையா பார்த்துப்பார். இன்னும் நூறு படங்களில்கூட அஜித் சார்கிட்ட அடி வாங்க ரெடியா இருக்கேன். ஒரு சீன்ல எனக்குத் தோள்ல அடிபட்டப்போ ‘டூப் வெச்சுப் போயிடலாம்’னு சார் சொன்னார். ஆக்‌ஷன் சீன்ல பாடி லாங்குவேஜ் அட்டகாசமா கொண்டு வருவார்.’’

“பிட்னஸ் பற்றி அஜித் நிறைய பேசுவார்னு கேள்விப்பட்டோம்?”

‘‘ஆமா, அவருக்கு பிட்னஸ் ரொம்பப் பிடிக்கும். பைக் ரைடிங் பற்றி ரொம்பப் பேசியிருக்கோம். வாழ்க்கையை வாழ்ற விதத்தைக்கூட அவர்கிட்ட இருந்து கத்துக்கலாம்.’’

“படத்தில் எல்லோரும் என்ஜாய் பண்ணுன இன்டர்வியூ சீன் மேக்கிங் எப்படியிருந்தது?”

‘‘படத்துல நடிச்சிட்டு இருந்தப்போதான் என்னோடது நார்மல் ரோல் இல்ல, முக்கியமானதுன்னு தோண ஆரம்பிச்சது. நான் பண்ணுன மத்த படங்கள்ல அடி வாங்குறது மட்டும் இருக்காது, அடிக்கிறதும் இருக்கும். அதைத் தாண்டி வேற எதுவும் இருக்காது. ஆனா, இதுல கொஞ்சம் ஹியூமர் சீன்ஸ் இருந்தது. டைரக்டர் வினோத் சார் முதல்ல சீன்ஸ் பத்திச் சொல்லிட்டு நடிச்சுக் காட்டச் சொல்லுவார். இதிலிருந்து நம்ம நடிப்பை ட்யூன் பண்ணுவார். கோ ஆர்ட்டிஸ்ட் ரியாக்‌ஷன்ஸ், என் கேரக்டரோட ஃபயர் எல்லாம் மனசுல கொண்டு வந்து நடிச்சேன். ‘ஜான், உங்ககிட்ட இருக்குற ஃபயர் எப்போதும் இருக்கணும்’னு அஜித் சார் சொல்லுவார். காட்சிக்கு ஏத்தபடி ரியாக்‌ஷன்ஸ் பண்ணும்போது, ‘சூப்பர், செமயா பண்ணியிருக்கீங்க’ன்னு அஜித் சார் சொல்லுவார். என்னுடைய கரியர்ல இந்த ரோல் முக்கியமான வாய்ப்புன்னு மனசுல நினைச்சுப் படம் பண்ணினேன். முக்கியமா, வினோத் சார்க்கு நன்றி சொல்லணும். எனக்கு காமெடி வரும்னு உணர வச்சது வினோத் சார்தான்.’’

“இன்னும் நூறு படங்களில்கூட அஜித்கிட்ட அடி வாங்க ரெடி!”

“உங்க வாழ்க்கையோட முக்கியத் தருணத்தை அஜித்கிட்ட சொன்னீங்களா?”

‘‘ஆமாம், சொன்னேன். என்னுடைய மனைவி பூஜா கர்ப்பமா இருக்காங்க. நான் அப்பா ஆகப் போறேன். இதை அஜித் சார்கிட்ட சொன்னப்போ ஹெல்த்தியா நிறைய டிப்ஸ் கொடுத்தார். முதல் நாள் முதல் காட்சி மனைவிகூட தியேட்டர்ல பார்த்தேன். அவங்களும் ரொம்ப ஹேப்பி. அஜித் சார் எப்போ பேசினாலும் பூஜா பற்றியும் விசாரிப்பார். ‘வாழ்க்கைல டைம்தான் எல்லாத்துக்கும் காரணம் ஜான்’னு அடிக்கடி சொல்லுவார்.

“தெலுங்கில் பாலகிருஷ்ணாகூடவும் நடிச்சிருக்கீங்க?”

‘‘தெலுங்கு சினிமால பெரிய ஸ்டார் பாலகிருஷ்ணா சார். அவர்கிட்ட இருந்தாலே நமக்கும் எனர்ஜி ஒட்டிக்கும். அவர்கூட எனக்கு ரெண்டாவது படம் ‘வீர சிம்ஹா ரெட்டி.’ பிட்னஸ், ஜோசியம்னு நிறைய விஷயங்கள் பேசுவார். தியானம் பண்ணுறது அவருக்குப் பிடிக்கும். எப்போதும் நேரத்தைச் சரியா திட்டமிடும் நபர். அவரோட ஞாபகசக்தி அபாரமானது. அதைப் பார்க்குறப்போ எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.’’