Published:Updated:

Viruman: "மக்கள் மாறிட்டாங்களோன்னு நினைச்சேன்; ஆனால் அது தப்பு"- நடிகர் கார்த்தி

கார்த்தி

படத்தில் கார்த்தியோடு இணைந்து ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆகியோரும் நடித்திருக்கின்றனர்

Viruman: "மக்கள் மாறிட்டாங்களோன்னு நினைச்சேன்; ஆனால் அது தப்பு"- நடிகர் கார்த்தி

படத்தில் கார்த்தியோடு இணைந்து ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆகியோரும் நடித்திருக்கின்றனர்

Published:Updated:
கார்த்தி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில், ஒருவர் கார்த்தி. தற்போது கார்த்தி நடிப்பில் ஆகஸ்ட் 12 -ம் தேதி விருமன் படம் வெளியாக உள்ளது. கார்த்தி நடித்த கொம்பன் படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையா இந்த படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கார்த்தியோடு இணைந்து ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கார்த்தி
கார்த்தி

இந்த படம் ஆகஸ்ட் 12 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த பிரஸ் மீட்டில் நடிகர் கார்த்தி படத்தைப் பற்றி பேசும் போது, "விருமன் படத்தின் டிரைலர் வரதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் பதற்றமாவே இருந்துச்சு. ஏனென்றால் நான் கிராமம் சார்ந்த படங்களில் அதிகமா நடிக்குறேன்னு சொல்லிருவாங்களோன்னு தோணுச்சு. காரணம் இப்போல்லாம் நம்ம மக்கள் OTT- ல கொரியன் படம் பார்த்து மார்டன் ஆயிட்டாங்க. ஒரு சின்ன ஊருக்கு போனா கூட ஸ்விகியும் சொமேட்டாவும் இருக்கு.

இதனால் மக்கள் மாறிட்டாங்களோன்னு நினைச்சேன். ஆனால் அது தப்பு என்று விருமன் படத்தினுடைய டிரைலரில் புரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது . கிராமத்து படங்கள் மூலம் தான் நம்முடைய கலாசாரத்தை பார்க்க முடியும். கிராமத்து வாழ்க்கை ரொம்ப இனிமையாக இருக்கும்." என்றார்.

மேலும் பேசிய அவர், " நாங்கள் ஷூட்டிங்கில் இருந்தபோது, வயதானவர்கள் சிலர் வந்தனர். `பக்கத்தில் ஒரு பள்ளியிருக்கிறது வந்து பாருங்கள்' என்றனர். அங்கு போய் பார்க்கும்போது மிகவும் மோசமான நிலையில் ஒரு பள்ளி இருந்தது. உடனே அந்தப் பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதை சரிசெய்தோம். இப்போது அங்கே குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதை அகரம் பவுண்டேஷன் (foundation) மட்டும் செய்யவில்லை. அங்கிருக்கும் நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள். அந்தந்த பகுதியில் இருக்கும் செல்வந்தர்கள் நிறைய பேர் சிதிலமடைந்த பள்ளிகளுக்கு உதவ முன்வரவேண்டும்'' என்றும் கார்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்

இதனைத் தொடர்ந்து மேடையில் பேச தொடங்கிய விருமன் படத்தின் நடிகை அதிதி ஷங்கர், "முதல்ல என் அப்பா, அம்மா, அக்கா, தம்பி ஆகியோர் என் கனவுகளை தொடர்வதற்கு உறுதுணையா இருந்தாங்க. அவங்களுக்கு நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். கார்த்தி சார் எங்க அண்டை வீட்டுக்காரர், அவருக்கு வணக்கம் சொல்லி இவ்வளவு தூரம் வருவேனென்று எதிர்பார்க்கல. இது ஒரு நல்ல கற்றல் அனுபவம் கார்த்தி சாருடைய சினிமா கரியரும் கிராமப்புறம் சார்ந்த பருத்திவீரன் திரைப்படம் மூலம் தான் தொடங்குச்சு. நானும் அதே வழியில் தொடங்குறேன். எனக்கும் இது அதிர்ஷ்டவசமாக அமையும்னு நம்பறேன்" என்றார்.