Published:Updated:

குணச்சித்திர நடிகர் `பூ' ராமு மறைவு; திரையுலகினர் இரங்கல்!

`பூ' ராமு

குணச்சித்திர நடிகர் 'பூ' ராமு இன்று மாலை 7 மணியளவில் காலமானார். அவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Published:Updated:

குணச்சித்திர நடிகர் `பூ' ராமு மறைவு; திரையுலகினர் இரங்கல்!

குணச்சித்திர நடிகர் 'பூ' ராமு இன்று மாலை 7 மணியளவில் காலமானார். அவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

`பூ' ராமு

'பரியேறும் பெருமாள்' படத்தில் கல்லூரி முதல்வர், 'கர்ணன்' படத்தில் தனுஷின் தந்தை, 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவின் தந்தை, இப்படி கனமான கதாபாத்திரங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் 'பூ' ராமு இன்று மாலை 7 மணியளவில் காலமானார்.

சசி இயக்கிய 'பூ' படத்தின் வழியாக ராமு திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன்னர் சென்னை கலைக்குழுவில் நாடக நடிகராக முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருந்தார். கமலின் 'அன்பே சிவம்' படத்தில் வீதி நாடக காட்சியில் வந்து செல்வார். கலைஞராக பரிணமிக்கும் முன்பு ஆட்டோ தொழிலாளியாக இருந்தவர் ராமு.

`பூ' ராமு
`பூ' ராமு

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து இரண்டு நாள்களாகச் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரலில் நீர் சேர்ந்திருந்தது என்பதால் மூச்சு விடச் சிரமம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இறுதிச் சடங்குகள் ஊரப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் நடைபெற இருக்கின்றன. ராமுவிற்கு மகாலட்சுமி என்கிற மகள் இருக்கிறார். திரையுலகினர் பலரும் ராமுவின் மறைவுக்குத் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.