Published:Updated:

"சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகளைக் கேட்பது..."- கன்னடப் படத்தை பாராட்டிய ரஜினி; நெகிழ்ந்த நடிகர்

ரஜினி

சமீபத்தில் இப்படத்தை பார்த்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, 'நாய்களின் அன்பு தூய்மையானது. அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

"சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகளைக் கேட்பது..."- கன்னடப் படத்தை பாராட்டிய ரஜினி; நெகிழ்ந்த நடிகர்

சமீபத்தில் இப்படத்தை பார்த்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, 'நாய்களின் அன்பு தூய்மையானது. அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

Published:Updated:
ரஜினி

கடந்த ஜூன் 10-ம் தேதி கே.கிரண் ராஜ் இயக்கத்தில், ரக்‌ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்த `சார்லி 777’ படம் திரையரங்குகளில் வெளியானது. செல்லபிராணிக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் இடையே நடக்கும் பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, 'நாய்களின் அன்பு தூய்மையானது. அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதையடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் 'சார்லி 777’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட படத்தின் நாயகன் ரக்‌ஷித் ஷெட்டி இவ்வாறு கூறியிருந்தார், "ரஜினிகாந்த் சாரிடம் இருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. சார்லி 777 படத்தை அவர் நேற்று இரவு பார்த்து பிரமித்திருக்கிறார். படம் தரமாகும், அடர்த்தியாகவும் உருவாக்கப்பட்டிருப்பதாகக் வியந்து பேசினார். படத்தின் இறுதிக்காட்சிகள் ஆன்மிக அனுபவத்தை அளிப்பதாக பாராட்டியிருக்கிறார். சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இப்படியான வார்த்தைகளை கேட்பது அற்புதமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism