Published:Updated:

Rajini 170: ரஜினி படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கிறாரா? உண்மை என்ன?

விக்ரம்

லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

Published:Updated:

Rajini 170: ரஜினி படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கிறாரா? உண்மை என்ன?

லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

விக்ரம்
இயக்குநர் த.செ.ஞானவேலின் `ரஜினி 170' ஆவது படத்தில் ஹீரோவிற்கு இணையான கேரக்டரில் எதிர்நாயகனாக விக்ரம் நடிக்கப் போகிறார் எனப் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால் கேட்ட மாத்திரத்தில் விக்ரம் இந்த வாய்ப்பை மறுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள். லைகா சுபாஸ்கரன் தலையிட்டு இயக்குநரிடம் கதையைக் கேட்கச் சொன்னதாகவும் அதற்குப் பிறகு முடிவு எடுக்கும்படியும் சொன்னதாகச் சொல்கிறார்கள். இதற்கான சந்திப்புகள் அடுத்தடுத்து நடப்பதாகவும் சொன்னார்கள். நடந்தது என்னவென்று விசாரித்துப் பார்த்தோம்.

ரஜினிகாந்த் - த.செ.ஞானவேல்
ரஜினிகாந்த் - த.செ.ஞானவேல்

இயக்குநர் இன்னும் நேரடியாக விக்ரமிற்கு கதை சொல்லவில்லை. காரணம் விக்ரம் தன் குடும்பத்தோடு லண்டனில்தான் கோடை விடுமுறைக்காகவும், படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்திற்காகவும் ஓய்வு எடுக்கப் போயிருக்கிறார். கிட்டத்தட்ட 15 நாட்களாக அங்கே இருக்கும் விக்ரம் தன் குடும்பத்தோடு இன்னும் ஒரு வாரத்தில் சென்னைக்குத் திரும்புகிறார். அதற்குப் பிறகுதான் கதையை கேட்டு முடிவு எடுக்கப் போகிறாராம். அவருக்கு பெரிய சம்பளம் தரப்போவதாகத் தகவல்கள் வெளியே புறப்பட்டதும் உண்மையானது இல்லை என்கிறார்கள். விக்ரம் படத்தை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் அவர் கதை கேட்டப் பிறகு தான் என்கிறார்கள்.

இதற்கிடையில் கதையை கேட்கச் சொல்லி சிபாரிசு செய்து ரஜினியும் சியானுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம். இன்னும் ஒரு வாரத்திற்குப் பிறகு எல்லாம் சரியாக இருந்தால் ரஜினி - விக்ரம் காம்பினேஷனுக்கு சான்ஸ் இருக்கிறது என்கிறார்கள்.