கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“சீரியலுக்கும் சினிமாவுக்கும் வேலை ஒண்ணுதான்!”

 ‘ஜோ' படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஜோ' படத்தில்...

எனக்குக் காடுகளில் ட்ராவல் பண்ணுறது ரொம்பப் பிடிக்கும். அந்த ட்ராவல்தான் எனக்குக் கிடைக்கிற புத்துணர்ச்சி.

ரியோ - இந்தப் பெயருக்கு சின்னத்திரை உலகில் அறிமுகம் தேவையில்லை. சோஷியல் மீடியாவின் ஆளுமை இல்லாத காலத்திலேயே தனக்கும் தன் ஷோவுக்கும் ஆர்மி வைத்திருந்த பெருமை கொண்டவர். விஜய் டி.வி சீரியல், அவ்வப்போது ரியாலிட்டி ஷோக்கள் எனச் சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருந்தவர், இப்போது தமிழ் சினிமாவின் எமர்ஜிங் ஹீரோ! தன் மூன்றாவது படமான ‘ஜோ' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதன் டப்பிங் பணியில் இருந்தவரைச் சந்தித்தேன்.

“சீரியலுக்கும் சினிமாவுக்கும் வேலை ஒண்ணுதான்!”

‘‘சின்னத்திரை ஹீரோவா வெற்றி அடைஞ்சுட்டீங்க. சினிமா ஹீரோவா பயணம் எப்படியிருக்கு?’’

‘‘ரொம்ப நல்லா போய்க்கிட்டிருக்கு. முன்னாடி இருந்ததைவிட, இப்போ ரொம்ப ஈடுபாடாகி வேலை செய்கிற மாதிரியான உணர்வு. அதுவும் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு படைப்பை உருவாக்கும்போது ரொம்ப ஜாலியாவும் சுவாரஸ்யமாகவும் இருக்கு. சீரியலுக்கும் சினிமாவுக்கும் மேக்கிங்தான் வித்தியாசமே தவிர, மத்தபடி வேலை ஒண்ணுதான். இப்போ சீரியலையும் சினிமா மாதிரி பிரமாண்டமா பண்ணுறாங்க. ரசிச்சு வேலை செய்கிறேன். நிறைய கத்துக்கிறேன்.’’

“சீரியலுக்கும் சினிமாவுக்கும் வேலை ஒண்ணுதான்!”
“சீரியலுக்கும் சினிமாவுக்கும் வேலை ஒண்ணுதான்!”

`` ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா', ‘பிளான் பண்ணிப் பண்ணணும்' இந்த ரெண்டு படங்களிலும் ஜாலியான ரியோவைப் பார்த்தோம். ‘ஜோ' படத்துல உங்களை எப்படிப் பார்க்கலாம்?’’

‘‘இந்தப் படத்தின் கதையைக் கேட்கும்போது, எனக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்துச்சு. சின்ன வயசுல ஆரம்பிச்சு திருமண வாழ்க்கைன்னு வரும்போது, சில விஷயங்களும் சந்தர்ப்பங்களும் நம்மைப் பக்குவப்படுத்தும். அது இந்தக் கதையில ரொம்ப நியாயமா இருக்கும். இதுல எனக்கு ரெண்டு லுக். நிறைய முடி, தாடியோடு என்னைப் பார்க்கிறதுக்கு எனக்கே புதுசா இருந்தது. 12 கிலோ வெயிட் குறைச்சேன். இதுக்கு முன்னாடி நான் வொர்க் அவுட், டயட் இதெல்லாம் பண்ணினதே இல்லை. அந்த ப்ராசஸ் ரொம்ப நல்லாருந்தது. என்னுடைய முதல் ரெண்டு படங்கள்ல இத்தனை நாள் என்னை எப்படி டி.வி-யில பார்த்தாங்களோ அப்படிப் பார்த்தால் போதும்னு இருந்தது. ஆனா, இதுல யாருக்கும் நான் ரியோவா தெரிஞ்சிடக் கூடாதுன்னு கவனமா இருந்தேன். டீமும் ரொம்ப கவனமா இருந்தாங்க. படம் பார்க்கும்போது, தான் லவ் பண்ணுனபோதோ, தன்னுடைய ப்ரெண்ட் லவ் பண்ணும்போதோ நடந்த விஷயங்கள் ஞாபகத்துக்கு வரும்.’’

“சீரியலுக்கும் சினிமாவுக்கும் வேலை ஒண்ணுதான்!”

``நிறைய லவ் படங்கள் வந்திடுச்சு. அதுல ‘ஜோ' எப்படி ஸ்பெஷலா தெரியும்?’’

‘‘நிச்சயமா சுவாரஸ்யமான லவ் படமா இருக்கும். இந்தக் கதையில ரெண்டு ஹீரோயின்கள். அந்த ரெண்டு பேருடைய வாழ்க்கையிலும் ஒரே பையன் க்ராஸாகி இருப்பான். ரெண்டு பேருடைய வாழ்க்கையிலும் பயங்கர சந்தோஷமும் பயங்கர சோகமும் நடக்கும். அதுக்கு காரணம், அந்தப் பையன்தான். ‘ஜோ'ங்கிற பையனுடைய வாழ்க்கையை திரையில பார்ப்பீங்க. படத்துடைய ஹீரோயின் பவ்யா இதுக்கு முன்னாடி தமிழ்ல ‘கதிர்' படத்துல நடிச்சிருந்தாங்க. இன்னொரு ஹீரோயின் மாளவிகா மனோஜ். மலையாளத்துல ‘பிரகாஷன் பரக்கட்டே'னு ஒரு படத்துல நடிச்சிருந்தாங்க. இயக்குநர் ஹரிஹரன் ராமின் திரைக்கதை பேசப்படும். ‘மீசைய முறுக்கு' படத்துல துணை இயக்குநராகவும், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துல இணை இயக்குநராகவும் வேலை செஞ்சவர். சித்துகுமார் மியூசிக் பண்ணியிருக்கார். பாட்டெல்லாம் சூப்பரா வந்திருக்கு.’’

“சீரியலுக்கும் சினிமாவுக்கும் வேலை ஒண்ணுதான்!”

``ஹீரோவான பிறகும், அப்பப்போ விஜய் டி.வி-யில உங்களைப் பார்க்க முடியுது. இதனால ஹீரோ இமேஜ் பாதிக்குமோன்னு யோசிச்சிருக்கீங்களா?’’

‘‘நான் அப்படியெல்லாம் நினைக்கலை. டைம் கிடைச்சா நிச்சயமா டி.வி-யில ஷோ பண்ணுவேன். ஷோ நல்லாருந்தா, ஷோ பார்க்கப்போறாங்க. படம் நல்லாருந்தா, படத்தைப் பார்க்கப்போறாங்க. இவனை டி.வி-யிலதான் பார்க்கிறோமே அப்புறம் ஏன் தியேட்டர்ல பார்க்கணும்னு நினைச்சிருந்தால், என் ரெண்டு படங்களுக்கும் டிக்கெட் வித்திருக்காதே!’’

``அடிக்கடி காடுகளுக்குள் பயணிக்கிறீங்க. அடுத்த ட்ரிப் எப்போ, எங்கே?’’

‘‘எனக்குக் காடுகளில் ட்ராவல் பண்ணுறது ரொம்பப் பிடிக்கும். அந்த ட்ராவல்தான் எனக்குக் கிடைக்கிற புத்துணர்ச்சி. தமிழ்நாடு, கேரளப் பகுதிகள்ல இருக்கிற நிறைய காடுகளுக்குப் போயிருக்கேன். அடுத்து கர்நாடக வனப்பகுதிக்குள் ட்ராவல் பண்ணலாம்னு இருக்கேன்.’’