பிப்ரவரி 17ம் தேதி தனுஷின் `வாத்தி' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை சாய்ராம் கல்லூரியில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, "ஒரு நாள் காலை 4 மணிக்கு என்னைத் தொடர்பு கொண்டு படத்தில் இணையுமாறு கூறினார் தனுஷ். இந்த நல்ல படைப்பில் நானும் இருப்பது மகிழ்ச்சி. எப்போதும் ஒரு படைப்பளி சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதுபோல் தான் வெங்கி அத்லூரி. என் தம்பி தனுஷ். வேலையில்லா பட்டதாரி படத்துல ஆரம்பிச்சப் பயணம். இந்தப் பயணம் நான் இருக்கும் வரை தொடரணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் எனக்குள் இருக்கும் இயக்குநர் வீட்டில் உறங்கிவிடுவார்.

சம்யுக்தா ரொம்ப தகுதியான படத்துல தமிழ் சினிமாவுக்கு வர்றீங்க. விழா முடித்ததும் அனைவரும் பத்திரமாக வீட்டை அடைய வேண்டும் என்பதே என் தம்பியான தனுஷின் ஆசை. எல்லாருக்கும் நன்றி" என்றார். இறுதியாக, அவரிடம் 'Rapid fire round'-ல் தனுஷ் பற்றி கேட்டபோது "அன்புல பொல்லாதவன், எல்லாரும் ஏமாத்துவாங்க-அதுல படிக்காதவன், ஒழுக்கத்தில் வாத்தி, நடிப்பில் அசுரன்" என சடசடவென பதிலளித்துவிட்டு, "இன்னும் பெரிய பெரிய மேடைகளில் சந்திப்போம், வெல்வோம்" என்று மகிழ்ச்சியுடன் நிறைவு செய்தார்.