Published:Updated:

Sarathkumar: ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை - சரத்குமார் வைக்கும் முக்கியக் கோரிக்கை!

சரத்குமார்

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக புதிய கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார் நடிகர் சரத்குமார்.

Published:Updated:

Sarathkumar: ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை - சரத்குமார் வைக்கும் முக்கியக் கோரிக்கை!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக புதிய கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார் நடிகர் சரத்குமார்.

சரத்குமார்
ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலைகளும், உளவியல் சிக்கல்களும் ஏற்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்க தி.மு.க தலைமையிலான தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இயற்றியது.

ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து நிராகரித்துக் கொண்டே இருந்ததால் தமிழக அரசியலில் பல அதிர்வுகளைக் கிளப்பியது இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம். பின்னர், தமிழக அரசின் பலகட்ட அழுத்தங்களுக்குப் பிறகு இதற்கு ஒருவழியாக ஒப்புதல் வழங்கியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. அதைத் தொடர்ந்து தற்போது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.

ஆர்.என்.ரவி, மு.க.ஸ்டாலின், ஆன்லைன் ரம்மி
ஆர்.என்.ரவி, மு.க.ஸ்டாலின், ஆன்லைன் ரம்மி

இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்டத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விளம்பரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இதுகுறித்து சரத்குமார், "நான் சொன்னாதால்தான் எல்லோரும் விளையாடுகிறார்களா? நான் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தேன். அதை இப்போதுதான் வெளியிடுகிறார்கள். அப்போதே அவசரச் சட்டம் வந்திருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன்" என்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதுபற்றி பேசியுள்ளார் அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார்.

சரத்குமார்
சரத்குமார்

அதில், "சூதாட்டத்துக்குத் தடை என்று சொல்லும்போது, அனைத்து விதமான சூதாட்டங்களுக்கும் தடை விதித்திட வேண்டும். முக்கியமாக இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆபாச இணையதளங்களை முடக்கவேண்டும்" என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சரத்குமாரின் இந்த வேண்டுகோள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் விவாதமாகி வருகிறது.