இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசனுடன், இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. மாநாடு திரைபடத்தின் ப்ரீ ரிலீசிங் ஈவென்ட் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சிலம்பரசன், " நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் உங்களால் தான் இந்த படத்தை தயாரிக்க முடியும் இதில் வரக்கூடிய பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும் எனக் கூறினேன். பல பிரச்னைகளைத் தாண்டி இந்தப் படத்தை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு இனத்தின்மீது எப்படி குற்றம் சுமத்தப்படுகிறது என்கிற ஒன்லைன்தான் இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்யவைத்தது. படத்தின் டைம் லூப் கான்செப்ட்காக படக்குழு மிகவும் சிரத்தையெடுத்து உழைத்திருக்கிறோம். யுவன் ஷங்கர் ராஜா என்னைப் புரிந்துகொள்கிற ஒரு இதயம். எடிட்டர் பிரவீன் கே.எல் -க்கு ரொம்ப நன்றி என்றார். திடீரென கண்கலங்கி ``ரொம்ப பிரச்னையா இருக்கு. நிறைய ப்ராப்ளம் பேஸ் பண்ணிட்டேன். நிறைய பிரச்னை குடுக்கறாங்க. பிரச்னையலாம் நான் பாத்துக்குறேன். என்னை மட்டும் நீங்க பாத்துக்கங்க" என்றார்.