கடந்த செப்டம்பர் மாதம் 15 ம் தேதி சிம்பு நடிப்பில் வெளியாகி திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தில், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் தயாரிப்பில் உருவாகிய இத்திரைப்படத்தின் 50வது நாள் கொண்டாட்ட விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிம்பு, உதயநிதி ஸ்டாலின், ஐசரி.கே.கணேஷ், கெளதம் வாசுதேவ் மேனன் உட்பட படகுழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சிம்பு ,"இத்திரைப்படத்தை வெற்றிகரமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலினிடம் பேசினோம். அதற்கு அவர் உனக்காக இதை செய்கிறேன் என்றார். அதற்கு உதயநிதி ஸ்டாலினிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'மல்லிப் பூ பாடலை' முதன் முதலில் கேட்ட போதே ரஹ்மான் சாருக்கு இந்த பாடல் நிச்சயமாக ஹிட் ஆகும் என்று மெயில் செய்தேன். என் அப்பாவின் 'சிம்பு சினி ஆர்ட்ஸ்' எனக்கு எவ்வாறு இருந்ததோ அது போல் தான் எனக்கு 'வேல்ஸ்' நிறுவனமும் இருந்தது. சில தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இதுபோன்ற திரைப்படங்கள் மக்களுக்கு பிடித்த வண்ணத்தில் இருக்குமா என்று பேசிக் கொள்வதை நான் கேட்டிருக்கிறேன்.

ஆனால், இந்த காலத்தை தமிழ் சினிமாவின் பொற்காலமாக கருதுகிறேன். அதற்கு உதரணமாக தான் 'விக்ரம்', 'பொன்னியின் செல்வன்', 'லவ் டுடே', கன்னடத்தில் வெளிவந்த 'காந்தாரா' போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளது. இயக்குநர்களுக்கு பல கனவுகள் இருக்கும் அந்த கனவுகளை நிறைவேற்றக் கூடிய காலமாகத் தான் இந்த காலத்தைப் பார்க்க்கிறேன்.மக்களும் வேறு மாதிரியான கதையை விரும்ப தொடங்கிவிட்டனர். `வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் இந்த திரைப்படம் முழுவதும் கம்ர்சியல் பாணியில் இல்லாத ஒன்று என்பதை எண்ணி பயம் வந்தது.ஆனால்,மக்கள் வேறுபட்ட கதைகளை ரசிக்கக் கூடிய தன்மையால் இந்த திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பை எண்ணி ஆச்சிரியமாக இருந்தது.படம் தயாராகிக் கொண்டிருக்கும் போதே அப்டேட்ஸ் கேட்கிறீர்கள் .உங்களின் ஆர்வம் புரிகிறது.
ஒரு திரைப்படத்திற்காக இயக்குநர்,தயாரிப்பாளர்,நடிகர் எல்லோரும் இணைந்து கடின உழைப்பை செலுத்தி வருகிறோம்.தினமும் நீங்கள் அப்டேட்ஸ் போன்றவற்றை கேட்கும் போது ஒரு தவறான முடிவைக் கூட எடுக்க நேரிடும்.ரசிகர்களை மகிழ்ச்சியாக்குவது தான் எங்களின் நோக்கம்.அதற்கான இடத்தை கொடுத்தால் தான் நல்ல திரைப்படங்கள் வரும்.மற்ற ரசிகர்கள் ஒரு ஹீரோவை தூக்கி மேலே வைப்பார்கள்,நான் என் ரசிகர்களை தூக்கி மேலே வைக்க வேண்டும் என்று எண்ணுக்கிறேன்.என் படத்திற்கு மட்டுமின்றி மற்ற படத்திற்கும் தொந்தரவு செய்யாதீர்கள்.உங்களுக்காக நல்ல படத்தை கொடுப்பதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்." என உரையை முடித்துக் கொண்டார்.