Published:Updated:

`` `பிச்சைக்காரன் - 2’ படத்துல இயக்குநர் சசி இல்ல... நானே கதை எழுதிட்டேன்... ஏன்னா?’’ - விஜய் ஆண்டனி

vijay antony

நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் எனப் பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனி `பிச்சைக்காரன்' சீக்வெலுக்குத் தயாராகியிருக்கிறார்.

Published:Updated:

`` `பிச்சைக்காரன் - 2’ படத்துல இயக்குநர் சசி இல்ல... நானே கதை எழுதிட்டேன்... ஏன்னா?’’ - விஜய் ஆண்டனி

நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் எனப் பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனி `பிச்சைக்காரன்' சீக்வெலுக்குத் தயாராகியிருக்கிறார்.

vijay antony

`தமிழரசன்’, `அக்னிச் சிறகுகள்’, `காக்கி’ என மூன்று படங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி, லாக்டெளன் ஆரம்பிப்பதற்கு முன் `மெட்ரோ’ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் புதியபடம் ஒன்றிலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். இந்த நிலையில், நான்கு படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது `பிச்சைக்காரன்’ சீக்வெலுக்கு சீன்ஸ் எழுதுவதில் பிஸியாக இருக்கிறார். விஜய் ஆண்டனியின் கரியரில் `பிச்சைக்காரன்’ படம் மிக முக்கியமானது. அவருக்கு நல்ல பெயரையும், பெரிய வியாபாரத்தையும் கொடுத்தது. அவரிடம் பேசினேன்.

`` `பிச்சைக்காரன் -2’ படத்துக்கான ஐடியா எப்போது வந்தது?"

பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்

``கடந்த ஒரு வருஷமாவே இயக்குநர் சசி சார்கிட்ட, `` `பிச்சைக்காரன்’ சீக்வெல் பண்ணலாம் சார்'’னு கேட்டுட்டே இருந்தேன். அவரும், `ஒரு நல்ல லைன் கிடைச்சிட்டா பண்ணிடலாம்’னு சொல்லியிருந்தார். இதுக்கு இடையிலதான் எனக்கு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எப்படி பண்ணலாம்கிற ஐடியா தோணுச்சு. உடனே உட்கார்ந்து அப்படியே நானே கதையை எழுதிட்டேன். திரைக்கதை மற்றும் வசனங்களை இன்னொருத்தர் எழுதி இருக்கார். வேற ஒரு இயக்குநர் இந்தப் படத்தை இயக்கப்போறார். அவங்கலாம் யார்னு சீக்கிரமே அறிவிக்கிறேன்.’’

`` `பிச்சைக்காரன் - 2’ படத்தின் ஐடியாவை இயக்குநர் சசிகிட்ட சொல்லும்போது அவர் என்ன சொன்னார்?"

இயக்குநர் சசி
இயக்குநர் சசி

``கதையைக் கேட்டதுமே சசி சார் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அவர் இப்போ ரெண்டு படங்கள்ல பிஸியா இருக்கிறதுனால, இப்போதைக்கு அவரால இந்தப் படத்தை இயக்க முடியல. அதனாலதான் நான் வேற இயக்குநர்கிட்ட போனேன். அதுமட்டுமல்லாமல், சசி சார் ஒரு படத்தில் கமிட்டாகிட்டால் அவரோட முழுக் கவனமும் அதுல மட்டும்தான் இருக்கும். டக்குனு ஒரு படம் பண்ணிட மாட்டார். அந்தப் படத்துக்காக, அந்த கதைக்காக எவ்வளவு தூரம் நியாயம் சேர்க்கணுமோ, எவ்வளவு தூரம் தகவல்கள் சென்று சேகரிக்கணுமோ அதையெல்லாம் பண்ணிட்டுத்தான் படத்தை ஆரம்பிப்பார். `பிச்சைக்காரன்’ படத்துல அவர் கமிட்டானப்போ, காலை 7 மணிக்கே உதவி இயக்குநர்களோடு ஆபீஸில் மீட்டிங்கை ஆரம்பிச்சிடுவார். அவரோட உழைப்பு ரொம்பப் பெருசு. லாக்டெளன் முடிஞ்சதுக்கு அப்புறம் அவர் ஹரிஷ் கல்யாணை வெச்சு ஒரு படம் இயக்கப் போறார். எப்படியும் அந்தப் படத்தை அவர் முடிச்சிட்டு வர ஒரு வருஷத்துக்கு மேல ஆகும். ஆனால், எனக்கு இந்தப் படத்தை உடனே ஆரம்பிக்க வேண்டிய சூழல். அதனால, அதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டேன். `பிச்சைக்காரன்’ படத்தோட முதல் பாகம் மாதிரியே இந்தப் படத்தை நானே தயாரிச்சு, இசையமைச்சு நடிக்கிறேன்.’’

``நிறைய படங்களில் தொடர்ந்து நடிச்சிட்டு இருக்கீங்க. கதை எழுத எப்படி நேரம் கிடைச்சது?"

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

``ஒரு விஷயத்தை தொடர்ந்து பண்ணிட்டே இருந்தேன்னா, அதில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க வேற ஒரு வேலையை பார்ப்பேன். அப்படித்தான் நான் இசையமைச்சிட்டு இருந்தப்போ நடிக்க வந்தேன். நடிச்சிட்டு இருக்கும்போது எடிட்டிங் பண்ண ஆரம்பிச்சேன். அப்படித்தான் இந்தக் கதையையும் நான் எழுதினேன். சினிமா ஐடி வேலை மாதிரி ஒரே வேலையை மட்டும் பார்க்கிற துறை கிடையாதுல; இது ஒரு கிரியேட்டிவ் வொர்க். அதனால, என் விருப்பப்படி என்னப் பண்ணணும்னு தோணுதோ அதைப் பண்ணிட்டு இருக்கேன். யாரும் இந்த வேலையை பண்ணுனு சொல்லாமல், நாமளே அந்த வேலையை விருப்பப்பட்டு பண்ணும்போது அது நல்லா வரும்கிறது என் நம்பிக்கை.’’

``லாக்டெளன் நாள்களில் புதுசா என்ன கத்துக்கிட்டீங்க?"

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

``எடிட்டிங்ல எனக்கு ஆர்வம் அதிகம். என்னுடைய சில படங்களை நானே எடிட்டும் பண்ணியிருக்கேன். அடுத்து `பிச்சைக்காரன் - 2’ படத்தையும் எடிட் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்காக நிறைய விஷயங்களை இந்த லாக்டெளன் நாள்களில் நான் கத்துக்கிட்டிருக்கேன். நான் சவுண்டு இன்ஜினீயரா இருந்ததுனால டெக்னிக்கல் விஷயங்களை ஆர்வமா கத்துப்பேன். அப்படி சில விஷயங்களும் இந்த லாக்டெளனில் கத்துட்டு இருக்கேன். லாக்டெளன் முடிஞ்சதும் முதல் ஆளா ஷூட்டிங் கிளம்பிடுவேன்.’’