Published:Updated:

Varisu: பனையூர் பிரியாணி விருந்து; ரசிகர்களைச் சந்தித்த விஜய்!

வாரிசு; விஜய்

இன்று மதியம் சென்னையில் உள்ள பனையூரில் நடிகர் விஜய் தடபுடலான விருந்துடன் தனது ரசிகர் மன்றத்தினரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

Published:Updated:

Varisu: பனையூர் பிரியாணி விருந்து; ரசிகர்களைச் சந்தித்த விஜய்!

இன்று மதியம் சென்னையில் உள்ள பனையூரில் நடிகர் விஜய் தடபுடலான விருந்துடன் தனது ரசிகர் மன்றத்தினரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

வாரிசு; விஜய்
தெலுங்கு திரையுலக இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் 'வாரிசு'. தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை 'ஸ்ரீ வெங்கடேஷ்வாரா கிரியேஷன்ஸ்' என்ற தெலுங்கு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் பொங்கலன்று வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் வெளியிட்டின் அன்றைய தினம் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுமென தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இந்த விவகாரம் பேசுபொருளானதையடுத்து தமிழ் திரையுலகைச் சார்ந்த பலரும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிடிருந்த அறிக்கையில்,"தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்கு திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வன்மையாக எச்சரிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

வாரிசு; விஜய்
வாரிசு; விஜய்

இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஒன்றும் இல்லை. அதனால் நாங்கள் போராட்டத்தில் இறங்கவில்லை. நடிகர் விஜய்க்காக மட்டுமல்ல தமிழ் திரையுகிற்கு எந்தப் பிரச்னை வந்தாலும் நாங்கள் போராடுவோம்" என்று கூறினார்.

இந்நிலையில் இன்று மதியம் சென்னையில் உள்ள பனையூரில் நடிகர் விஜய் தடபுடலான விருந்துடன் தனது ரசிகர் மன்றத்தினரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதையடுத்து வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், வரும் பொங்கல் அன்று வாரிசு திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,