Published:Updated:

Vikram: 40 வருடங்களாக தன் வீட்டில் வேலை செய்த ஊழியர் மகன் திருமணம்; கலந்துகொண்ட நடிகர் விக்ரம்!

நடிகர் விக்ரம்

பளபளவென பட்டு வேட்டி சட்டையில் வீட்டு ஊழியரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு நடிகர் விக்ரம் தாலி எடுத்துக் கொடுத்தார்.

Vikram: 40 வருடங்களாக தன் வீட்டில் வேலை செய்த ஊழியர் மகன் திருமணம்; கலந்துகொண்ட நடிகர் விக்ரம்!

பளபளவென பட்டு வேட்டி சட்டையில் வீட்டு ஊழியரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு நடிகர் விக்ரம் தாலி எடுத்துக் கொடுத்தார்.

Published:Updated:
நடிகர் விக்ரம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'கோப்ரா". இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படத்திற்கானப் படப்பிடிப்பு வேலைகள் தயாராகி வருகிறது. மேலும், விக்ரம் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படமும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது, இப்படத்தின் வெளியீட்டையொட்டி புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் விக்ரம், தன் வீட்டில் சுமார் 40 வருடங்களாக பணியாற்றும் ஊழியரின் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

விக்ரம்
விக்ரம்

நடிகர் விக்ரம், தன் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களின் வீட்டு விஷேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். அந்தவகையில் மேரி மற்றும் அவரது கணவர் ஒளிமாறன் இருவரும் பல வருடங்களாக விக்ரமின் வீட்டில் பணிபுரிந்து வந்தவர்கள். கணவர் ஒளிமாறன் மறைந்த பின்பும் மேரி, சுமார் 40 வருடங்களாக விக்ரம் வீட்டில் பணியாற்றி வருபவர். இந்நிலையில் மேரியின் மகன் தீபக் என்பவருக்கும் மணமகள் வர்ஷினி என்பவருக்கும் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நடிகர் விக்ரம் பளபளவெனப் பட்டு வேட்டி சட்டையில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.