Published:Updated:

`கல்யாணம்னு சொன்னாலே பயமா இருக்கு!' - விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா

தனக்கும் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் விரைவில் திருமணம் என்ற செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார், நடிகர் விஷ்ணு விஷால்.

Published:Updated:

`கல்யாணம்னு சொன்னாலே பயமா இருக்கு!' - விஷ்ணு விஷால்

தனக்கும் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் விரைவில் திருமணம் என்ற செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார், நடிகர் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா

'வெண்ணிலா கபடிக்குழு', 'ஜீவா', 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாத்துறையில் பத்து வருடங்களை நிறைவு செய்து பயணித்து வருகிறார், விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'ராட்சசன்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, பிரபுசாலமன் இயக்கத்தில் 'காடன்', எழில் இயக்கத்தில் 'ஜகஜால கில்லாடி' ஆகிய படங்களில் திரைக்கு வர தயாராக இருக்கின்றன.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

காதல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு சமீபத்தில் விவாகரத்தும் ஆனது. "கடந்த ஒரு வருடமாக நானும் ரஜினியும் பிரிந்து இருந்தோம். தற்போது சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம். எங்களுக்கு அழகான மகன் உள்ளான். பெற்றோர்கள் என்ற முறையில் எங்கள் மகனுக்கு முன்னுரிமை கொடுத்து அவனுக்குச் சிறந்தவற்றைக் கொடுப்போம். நாங்கள் இருவரும் சில இனிமையான வருடங்களைக் கழித்துள்ளோம். அந்த நினைவுகளை நாங்கள் மறக்க மாட்டோம். இனி இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம். எங்கள் குழந்தை மற்றும் குடும்பங்கள் நலனுக்காக எங்கள் பிரைவசியை அனைவரும் மதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சமீபமாக இந்திய பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தான் இருக்கும் புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார், விஷ்ணு விஷால். இவருடைய ட்வீட்களை ஜுவாலா ரீ ட்வீட் செய்து வந்தார். சில தனங்களுக்கு முன், ஜுவாலா கட்டா விஷ்ணுவுடன் இருக்கும் புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா
விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா

அதனால் இருவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்று தகவல்கள் கிளம்பின. இது குறித்து விஷ்ணு விஷாலிடம் கேட்டபோது, " என் நண்பர் ஒருவர் மூலமாக ஜூவாலாவை எனக்கு தெரியும். அப்படித்தான் எங்களுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அவ்வப்போது சந்தித்துக்கொள்வது உண்டு அவ்வளவுதான். இருவரும் நல்ல நண்பர்களாகதான் பழகி வருகிறோம். கல்யாணம் என்ற வார்த்தையை கேட்டாலே பயமாக இருக்கிறது. என் முழு யோசனையும் கரியரைப் பற்றிதான் இருக்கிறது. 'ராட்சசன்' எனக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. அதை தக்கவைத்து கொள்ளவேண்டும். அதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறேன். இதில் கல்யாணம் குறித்து நான் சிந்திக்கவே இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.