ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“ஐஸ்வர்யா ராயின் நடிப்பை என்னை மறந்து ரசிச்சேன்!”

தீபா வெங்கட்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபா வெங்கட்

‘பொன்னியின் செல்வன்’ சீக்ரெட் சொல்லும் தீபா வெங்கட்

முன்னணி நட்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பு, மணிரத்னத்தின் இயக்கம், திரை வடிவம் பெறும் வரலாற்று நாவல் என பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவர விருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். இதில், நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு முதன்முறையாகப் பின்னணிக் குரல் பேசியிருக் கிறார் தீபா வெங்கட்.

நயன்தாராவுக்கு ஆஸ்தான டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான இவர், தன் குரல் வழியே கோலிவுட் நாயகிகள் பலரையும் நம் கண்முன் நிறுத்தியவர். நடிப்பிலிருந்து முழுமை யாக விலகி, முன்னணி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக வளர்ந்திருக்கும் தீபா, அரிதாகவே பேட்டி அளிப்பவர். ‘பொன்னியின் செல்வன்’ அனுபவம் முதல் தன் பர்சனல் பக்கம்வரை கலகலப்பாகப் பேச கிரீன் சிக்னல் காட்டினார்.

“ஐஸ்வர்யா ராயின் நடிப்பை என்னை மறந்து ரசிச்சேன்!”

“இந்தப் படத்துல மத்த நடிகர்களுக்கான டப்பிங் வேலைகள் முடியுற தறுவாயில தான் எனக்கு அழைப்பு வந்துச்சு. நேர்ல போனப்போ மணிரத்னம் சாருடன் மரியாதை நிமித்தமா கொஞ்ச நேரம் பேசினேன். பிறகு, நீளமான வசனங்களைப் பேசவெச்சு, வாய்ஸ் டெஸ்ட் எடுத்தாங்க. சில தினங்கள்ல என் வாய்ஸ் ஓகே ஆகிடுச்சு. ‘பொன்னியின் செல்வன்’ கதையை நான் படிச்சதில்லை. இந்தப் படத்துக் காக டப்பிங் கொடுக்கிறது உறுதியான பிறகுதான், நந்தினி கேரக்டரையும், படத்தின் அடிப்படையான கதையையும் ஓரளவுக்குத் தெரிஞ்சுகிட்டேன். இந்தப் படத்துக்காக மெனக்கெட்டு தமிழ் கத்துக்கிட்டு, வசனங்களுக்கான அர்த்தம் புரிஞ்சு, இன்னொருத் தர் சப்போர்ட் (Prompting) இல்லாம டயலாக் பேசி ஐஸ்வர்யா ராய் மேம் நடிச்சிருக் காங்க. அவங்க பேசியிருந்த விதமும், அவங்க குரலோட ஏற்ற இறக்கமும் எனக்கு டப்பிங் கொடுக்க உதவியா இருந்துச்சு. ஐஸ்வர்யா ராய் மேடத்தின் நந்தினி கதாபாத்திரத்தைச் சுத்திதான் கதை நகரும். அமைதியா, தந்திரமா அவங்க செய்ற விஷயங்களும், பேசுற வசனங்களும், படம் பார்க்கும் ஆவலை அதிகப்படுத்தியிருக்கு” என்று எதிர்பார்ப்பைக் கூட்டுபவருக்கு, த்ரிஷா, நித்யா மேனன், சாய் பல்லவி ஆகி யோருக்குக் குரல் கொடுக்க ஆசையாம். டப்பிங் வேலைக்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் விதத்தைக் கூறினார் தீபா.

“ஒருமுறை முன்னணி நடிகர் ஒருவர், ‘ஷூட்டிங்ல ஏதோ ஒரு வேகத்துலயும் ஆர்வத்துலயும் டயலாக் பேசிடறோம். அதே உணர்வை டப்பிங்ல கொண்டு வர்றது எங்களுக்கே சவாலா இருக்கு. பிறர் நடிப்புக்கு டப்பிங் பேசுறது உங்களுக்கு சிரமமா இல்லையா?’னு என்கிட்ட கேட் டார். இது சவாலான வேலை தான். சிரிப்பு, கோபம், அழு கைனு அந்த கேரக்டராவே மாறி உயிர் கொடுக்கணும்.

நான் கர்னாடக இசை கத்துக்கிறேன். டப்பிங் பேசப்போகும் முன்பு, வீட்டுல பாடி, பயிற்சி எடுப்பேன். வெளியிடங் களுக்குப் போனாலும் வீட்டுல இருந்தேதான் குடிநீர் கொண்டு போவேன். மிதமான சூட் டுல வெந்நீர்தான் குடிப்பேன். டப்பிங் பேசப் போறப்போ, குழப்பமோ, மாறுபட்ட சிந்தனைகளோ இல்லாம, ரொம் பவே அமைதியான மனநிலையில இருக்கணும். அதனால, மனசை பாதிக்கிற மாதிரியான காட்சிகளையும் பேச்சுகளையும் தவிர்த்துடுவேன். என் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவேன். சமையல் ரொம்ப பிடிக்கும். ஃபிட்னஸ்ஸுக்காக ஜிம் போக ஆரம்பிச்சு, அந்தப் பழக்கமே இப்போ ஸ்ட்ரெஸ் பஸ்டராவும் மாறிடுச்சு” என்று எனர்ஜி சீக்ரெட் சொன்னவரின் பேச்சு, பர்சனல் உலகத்தின்மீது திரும்பியது.

“டப்பிங் துறைக்கு வந்த புதுசுல, ‘நிறைய போட்டிகள் இருக்கே... சரியான பட வாய்ப்புகள் தொடர்ச்சியா கிடைக்குமா?’னு எனக்குள்ள அடிக்கடி கேட்டிருக்கேன். இந்தத் தொழிலையும், அதுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் சரியா உணர்ந்த பிறகு, தினசரி ஆபீஸ் வேலை மாதிரி டப்பிங் வேலை எனக்குப் பழக்கமா கிடுச்சு. இந்தத் துறையில 23 வருஷங்களைத் தாண்டிட்டேன். இடைவிடாம வேலை செஞ்சுகிட்டே இருக்கணும்னு நான் ஆசைப் படலை. ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கு மான போதிய இடைவெளி விட்டு, அளவான படங்களைத் தான் ஏத்துக்கிறேன்.

“ஐஸ்வர்யா ராயின் நடிப்பை என்னை மறந்து ரசிச்சேன்!”

என் ரெண்டு பெண் பிள்ளை களை ஸ்கூல்ல பிக்கப், டிராப் பண்றது, ஹோம்வொர்க் சொல்லிக் கொடுக்கிறது, கதை பேசுறது, விளை யாடுறதுன்னு அதிக அக்கறை கொடுப்பேன். ஐ.டி வேலையில இருக்கிற கணவர், என் உலகத்தையும் உணர்வு களையும் முழுமையா புரிஞ்சுகிட்டவர். டப்பிங் வேலை மட்டும் போதும்னு உறுதியா இருக்கிறதால, ஆக்டிங் பத்தி யோசிக்கிறதே இல்லை” என்று க்யூட்டாக சிரிப்பவர், மீடியாக்களிலிருந்து தன்னை விலக்கிக்கொள்வதற்கான காரணத்தைச் சொன்னபோது, பிரபலமாக இருப்பதற்குப் பின்னிருக்கும் சவால்களையும் வலிகளையும் உணர முடிந்தது.

``நல்லவிதமா ஏதாச்சும் பேட்டி கொடுத் தாலும், அதைத் தவறா சித்தரிச்சு இணையத் துல செய்தியாவும் வீடியோவாவும் வெளி யிடுறாங்க. இன்றைய சோஷியல் மீடியா உலகத்துல இது சகஜம்னு பொதுவான கண் ணோட்டத்துல நான் கடந்து போகலாம். ஆனா, இதுமாதிரியான செய்திகள் என் குடும் பத்தினரை ரொம்பவே பாதிக்குது. தொழில் தர்மம் இல்லாம சிலர் செய்ற விஷயத்தால தனிப்பட்ட முறையில நான் ரொம்பவே பாதிக்கப்பட்டிருப்பதால, பேட்டி கொடுக் கிறதையே தவிர்க்கிறேன். என் சோஷியல் மீடியா பக்கத்துல என் குழந்தைகள், குடும் பத்தினரை பத்தி எதையும் குறிப்பிட மாட் டேன். என் பர்சனல் விஷயங்கள் பர்சனலா இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஒவ்வொருத் தரின் தனிப்பட்ட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கிறதுதான் தர்மம்” - எல்லோருக்குமான தார்மிக அறத்தை நினைவூட்டி முடிக்கிறார் தீபா.