சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“தோல்விகளால் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்!”

ஹன்சிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஹன்சிகா

நல்ல கதைக்களம் உள்ள படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தர்றேன். நல்ல கதை, நல்ல சினிமா, நல்ல பொழுதுபோக்கு இதுதான் என் சாய்ஸ்.

``இப்ப தமிழ்ல மட்டும் ஆறு படங்கள் நடிச்சு முடிச்சு ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு ரகமா வந்திருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் பலருமே, ‘நீங்க ஒரு கதையை எப்படித் தேர்ந்தெடுக்குறீங்க?’ன்னு ஆர்வமா கேட்பாங்க. தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸுக்கு படம் போரடிக்கக் கூடாதுன்னு நினைக்கறேன். அவங்களுக்கு என் படம் நல்ல பொழுதுபோக்கு உணர்வைத் தரணும். அதுல ஒரு நல்ல மெசேஜும் இருக்கணும்னு விரும்புவேன். அதனால ஆடியன்ஸோட எதிர்பார்ப்புகளுடனேதான் நான் கதைகள் கேட்பேன், கேட்குறேன்.

“தோல்விகளால் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்!”

கதை கொஞ்சம் போர் அடித்தால்கூட, அந்தப் படத்தைப் பன்றதில்லை. கதை கேட்கறப்ப எனக்கு ஏற்படற சந்தேகங்களுக்கு அப்பவே விளக்கங்களையும் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். மத்தபடி அது அறிமுக இயக்குநரின் படமா, அதுல ஹீரோவா யார் நடிக்கிறார், அந்த இயக்குநர் இதுக்கு முன்னாடி எடுத்த படம் என்ன, இப்படி எதையும் பார்க்கறதில்ல. என் படங்கள் நல்லா ஓடினாலும், தோல்வியைத் தழுவினாலும், ரெண்டையும் ஒரே மாதிரிதான் எடுத்துக்குவேன். வெற்றிகளில் மட்டுமல்ல, தோல்விகளிலும் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன். ஏன்னா, விமானம் எப்பவும் மேலேயே பறந்துட்டிருக்காது. தரையில இறங்கித்தானே ஆகணும்'' - நடிக்க வந்து ஐம்பது படங்களைத் தாண்டிவிட்டதால், பக்குவமாகப் பேசுகிறார் ஹன்சிகா. பொண்ணு முகத்தில் கல்யாணக்களை ஜொலிஜொலிக்கும் என எதிர்பார்த்துப் போனால், ‘கார்டியன்' படப்பிடிப்பில் ஹாரர் தோற்றத்தில் மிரட்டிக்கொண்டிருந்தார்.

“தோல்விகளால் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்!”

`` ‘கார்டியன்'ல கண்ணாலேயே மிரட்டுவீங்க போலிருக்கே..?’’

‘‘இந்தப் படத்தை வெறும் ஹாரர் த்ரில்லர்னு மட்டும் சொல்லிடமுடியாது. நல்ல மெசேஜ் இருக்கு. இந்தப் படத்தின் மூலம் ‘வாலு' இயக்குநர் விஜய்சந்தர் சார் தயாரிப்பாளரா புரொமோஷன் ஆகியிருக்கிறார். ‘கூகுள் குட்டப்பா' இயக்குநர்கள் சபரி, குருசரவணன் ரெண்டு பேருமே அவ்ளோ அழகா கதை சொன்னாங்க. ‘இதுல நான் நடிச்சா பொருத்தமா இருக்கும்’னு விஜய்சந்தர்கிட்ட சொல்லியிருக்காங்க. அவரும் உடனே என்கிட்ட பேசினார். எனக்கும் கதை பிடிச்சிருந்தது, நடிச்சாச்சு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல என் லுக் நல்லா இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க. கண்ணுல லென்ஸ் வச்சு நடிச்சிருக்கேன். ‘கார்டியன்'ல நான் ஐ.டி நிறுவனத்துல வேலை பார்க்கிற பொண்ணா வர்றேன். இதுல சுரேஷ்மேனன், மன், அபிஷேக்னு நிறைய பேர் இருக்காங்க. சாம் சி.எஸ். இசையமைச்சிருக்கார். ஒளிப்பதிவாளர் சக்திவேல், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா ரெண்டு பேருமே ‘வாலு' படத்திலும் ஒர்க் பண்ணினவங்க. ரொம்ப வருஷத்துக்குப் பிறகு அதே டீமோட படம் அமைஞ்சது சந்தோஷமா இருக்கு.''

“தோல்விகளால் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்!”
“தோல்விகளால் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்!”

`` ‘மை நேம் இஸ் ஸ்ருதி’, ஆர்.கண்ணன் இயக்குகிற படம், ‘ரவுடிபேபி' என்று இப்ப நீங்க நடிக்கற எல்லாமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளா இருக்கே?’’

‘‘அப்படிச் சொல்லிட முடியாது. நல்ல கதைக்களம் உள்ள படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தர்றேன். நல்ல கதை, நல்ல சினிமா, நல்ல பொழுதுபோக்கு இதுதான் என் சாய்ஸ். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதைக்களத்தில் இந்த எல்லாம் அமையும் போது, அந்தப் படத்தை ரசிச்சுப் பன்றேன். ஹீரோவோட நடிக்கற படமாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படமா இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் அது மக்களைக் கவரணும். ‘மை நேம் இஸ் ஸ்ருதி' வித்தியாசமான திரைக்கதை கொண்ட படம். படம் விறுவிறுப்பா போகும். ‘ரவுடி பேபி' படமும் நல்ல ஸ்கிரிப்ட். ஆர்.கண்ணன் இயக்குற படமும் மிரட்டலும் சுவாரசியமுமான கதை. ‘பார்ட்னர்' படம் எனக்குக் கொஞ்சம் ஸ்பெஷல். ஏன்னா, ஒவ்வொரு ஹீரோயினுக்குமே அப்படி ஒரு படம் பண்ணணும்னு ஆசை வந்திடும். ‘பார்ட்னர்'ல நான் நடிச்சிருக்கறது கிட்டத்தட்ட என் நிஜ கேரக்டரை பிரதிபலிக்கும் வேடம்னுகூடச் சொல்லலாம்.''

“தோல்விகளால் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்!”
“தோல்விகளால் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்!”

``ஒரு சமயத்துல நிறைய ஓவியங்கள் வரையறதுல ஆர்வமானீங்க. இப்ப ஓவியங்களில் கவனம் செலுத்தறதில்லையா? ஓவியக் கண்காட்சி வைக்கணும்ங்கற உங்க ஆசை என்ன ஆச்சு?’’

‘‘தொடர்ச்சியான வேலைகளால் ஏற்படற மன அழுத்தத்தைக் குறைச்சு என்னை அமைதிப்படுத்தும் விஷயமா ஓவியங்களைப் பார்க்கிறேன். நினைச்ச நேரத்துல திடீர்னு ஓவியம் வரைஞ்சிட முடியாது. அது தியானம் மாதிரி. அதுக்காக நேரம் செலவழிக்கும்போது மனம் லேசாகிடும். மனசுல ரொம்பவும் நெருக்கடியா உணரும்போது ஓவியம் பக்கம் போயிடுவேன். வரைஞ்சு முடிக்கறதுக்கு குறைஞ்சது நாலஞ்சு மணி நேரமாவது ஆகிடும். இடையே ஷூட்டிங்ல பிஸியானதால எதுவும் வரையல. எல்லா ஓவியங்களையும் கண்காட்சியா வைக்கற எண்ணம் இப்பவும் இருக்கு. நிச்சயம் ஓவியக் கண்காட்சி நடத்துவேன்.''

``சமீபமா நீங்க புத்த மத போதனைகளைப் பின்பற்றுவதாகச் செய்திகள் வந்ததே?’’

‘‘புத்தர் மீது நம்பிக்கை இருக்கு. அவர் போதனைகள் பிடிக்கும். ஆனா, நான் புத்த மதத்தைப் பின்பற்றல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனா, இவரைப் பிடிக்கும், அவரைப் பிடிக்கும்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. கோயில்களுக்குச் செல்வது பிடிக்கும். சமீபத்துலகூட காளிகாம்பாள் கோயில் பக்கம் ஆர்.கண்ணன் சார் படத்தோட படப்பிடிப்பு நடந்தபோது, காளிகாம்பாளை தரிசனம் பண்ணினேன்.''

“தோல்விகளால் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்!”

``உதயநிதி ஹீரோவா அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி'யில் அவரோட ஜோடியா நடிச்சிருந்தீங்க. இப்ப அவர் அரசியல்ல அசத்துறார். அவர்கிட்ட பேசுறதுண்டா?’’

‘‘எப்பவாவது போன்ல பேசிப்போம். உதயநிதியும் நானும் ஒருத்தரை ஒருத்தர் மச்சான்னுதான் கூப்பிட்டுக்குவோம். மச்சான் இப்ப நல்ல நடிகராகவும் கலக்குறார். ஒரு பேச்சாளரா அசத்துறார். இப்ப அருமையா பேசுறார். அவர் இன்னும் சிறந்து விளங்க வாழ்த்துகள்... ஆல் த பெஸ்ட் மச்சான்!''

``ஜெய்ப்பூர் அரண்மனையில் உங்கள் திருமண ஏற்பாடுகள் எப்படிப் போயிட்டிருக்கு?’’

‘‘அதைப் பத்தி இன்னொரு சந்தர்ப்பத்துல விரிவா பேசலாம். நோ பர்சனல் ப்ளீஸ்!''