Published:Updated:

`` `சின்னதம்பி' படத்துக்கு அப்புறம்தான் எனக்கு கோயில் கட்டினாங்க!'' - குஷ்பு #30yearsofchinnathambi

சின்னதம்பி... குஷ்பு - பிரபு

பி.வாசு இயக்கத்தில் 'சின்னதம்பி' திரைப்படம் வெளியாகி 30 வருடம் நிறைவடைந்ததையொட்டி படம் குறித்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நடிகை குஷ்பு.

Published:Updated:

`` `சின்னதம்பி' படத்துக்கு அப்புறம்தான் எனக்கு கோயில் கட்டினாங்க!'' - குஷ்பு #30yearsofchinnathambi

பி.வாசு இயக்கத்தில் 'சின்னதம்பி' திரைப்படம் வெளியாகி 30 வருடம் நிறைவடைந்ததையொட்டி படம் குறித்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நடிகை குஷ்பு.

சின்னதம்பி... குஷ்பு - பிரபு

'' 'சின்னதம்பி' பட வாய்ப்பு எனக்கு வர்றதுக்கு முன்னாடி வேறொரு நடிகை நடிக்குறதா இருந்தது. ஆனா, சில காரணங்களால் அந்த நடிகையால படத்துல நடிக்க முடியல. இதுக்குப் பிறகு இந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. இந்தப் படத்துல குஷ்பூ நடிச்சா நல்லாயிருக்கும்றதுல இயக்குநர் வாசு உறுதியா இருந்தார். ஏன்னா, தயாரிப்பாளர் பாலு, 'குஷ்பூ கிளாமர் லுக்ல நடிச்சிட்டு வர்றாங்க. அவங்களுக்கு எப்படி நந்தினி கேரக்டர் செட்டாகும்'னு வாசுகிட்ட கேட்டிருக்காங்க. ஆனா, குஷ்பு நடிச்சாதான் சரியா இருக்கும்னு வாசு சார் சொல்லியிருக்கார். டைரக்டர் மட்டுமில்ல நடிகர் பிரபுவும் இதுல உறுதியா இருந்தார். ஏன்னா, இதுக்கு முன்னாடி நிறையப் படங்கள்ல பிரபு என்கூட சேர்ந்து நடிச்சிருந்ததுனால என்னோட பர்ஃமான்ஸ் பிரபுவுக்கும் நல்லா தெரிஞ்சிருந்தது. இதனால, தயாரிப்பாளர் பாலுகிட்ட, 'குஷ்புவுக்கு இது மாதிரியான வாய்ப்பு அமையல. கொடுத்து பாருங்க. நம்பிக்கையா நடிக்க வெக்கலாம். தப்பா போகாது'னு சொல்லியிருக்காங்க. இவங்க ரெண்டு பேருடைய நம்பிக்கையினால பாலு இந்தப் படத்தை எனக்கு கொடுத்தார்.

"'குஷ்பூ என் மகள்', 'குஷ்பூவைதான் கல்யாணம் பண்ணிப்பேன்'னு 'சின்னதம்பி' படத்துக்கு பிறகு என்னோட வீட்டு வாசல்ல தர்ணா...

Posted by Vikatan EMagazine on Monday, April 12, 2021

இந்தப் படம் ரிலீஸாகி பெரிய வரவேற்பு கிடைச்சது. சொல்லப்போனா, இந்தப் படத்துக்கு அப்புறம்தான் எனக்கு தமிழ்நாட்டுல கோயில் கட்டுனாங்க. ஞாயிறு கிழமை ஆச்சுனா வீட்டு வாசல்ல பஸ்ல ரசிகர்கள் வந்துட்டே இருப்பாங்க. கிட்டத்தட்ட ஆயிரம் பேர்கிட்ட வருவாங்க. இதனால பொது மக்களுக்கு இடைஞ்சல் ஆகக்கூடாதுனு ரசிகர்கள்கிட்ட வர வேண்டாம்னு சொன்னேன். முக்கியமா, எனக்காக ரசிகர்களின் நேரம் செலவு ஆகுறத நான் விரும்பல. இதுமட்டுமில்லாம இரத்தத்துல கடிதம் எழுதி அனுப்புவாங்க. 'உங்களைதான் கல்யாணம் பண்ணுவேன்'னு வீட்டு வாசல்ல நின்னுட்டு இருப்பாங்க. எல்லாத்துக்கு மேல, 'திருவிழாவுல தொலைஞ்சு போன எங்க குழந்தை குஷ்பு'னுலாம் சொல்லிட்டாங்க. நிறைய தர்ணா போராட்டாம்லாம் நடந்தது. நிறைய விஷயங்கள் 'சின்னதம்பி' ரிலீஸூக்குப் பிறகு நடந்தது. என்னோட கணவர் சுந்தர் சி 'சின்னதம்பி' ரிலீஸான நேரத்துலதான் கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு கிளம்பி வந்திருக்கார். ' 'சின்னதம்பி' ரிலீஸான நேரத்துல என் போட்டோவை யாராவது காட்டி இவன்தான் உன் வருங்கால கணவன்னு சொல்லியிருந்தா காரி துப்பியிருப்பா'னு சொல்லி கிண்டல் பண்ணுவார். 'உன்னோட தலையெழுத்து உனக்கு நான் புருஷனா வந்துட்டேன்னு' சொல்லி சிரிப்பார்.

குஷ்பு - பிரபு
குஷ்பு - பிரபு

'சின்னதம்பி' படத்துக்கு முன்னாடி நிறையப் படங்கள்ல நடிச்சிருந்தாலும் என்னோட முதல் விருது இந்தப் படத்துக்காகத்தான் கிடைச்சது. சிறந்த நடிகைகான மாநில விருது வாங்கியிருந்தேன். நடிக்க வந்த புதுசுல தமிழ் சரியா பேச வராது. இதனால, எனக்கு அனுராதாதான் டப்பிங் கொடுப்பாங்க. என்னால டப்பிங் கொடுக்க முடியாத காரணத்துனால விருது கிடைக்காதுனு நினைச்சிருந்தேன். ஆனா, தேசிய விருதுக்குத்தான் நாம சொந்த குரல் கொடுக்கணும். மாநில விருதுக்கு அவசியமில்லைனு விருது கிடைச்சப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன். அதே மாதிரியே க்ளைமாக்ஸ் காட்சில வர 'நீ எங்கே என் அன்பே' போது என்னோட அண்ணா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார். அப்போ என்னோட ஷாட் பார்த்துட்டு என்கிட்ட வந்து, 'இந்தப் படத்துல நடிச்சிட்டு விருது வாங்கிட்டு போகலாம்னு இருக்கியா'னார். எங்க அண்ணா வார்த்தை பலிச்சிருச்சு. படத்துக்காக நிறைய விருது எனக்கு கிடைச்சது. ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்போ இருக்குற நிறையப் பேர் இந்தப் பாட்டை ரீமேக் பண்றதை பார்க்குறப்போ சந்தோஷமா இருக்கு. முப்பது வருஷத்துக்கு அப்புறமும் க்ளாசிக் படமா மக்கள் மனசுல நிக்குறது ஹேப்பியா இருக்கு. சில க்ளாசிக் படங்களை இப்போ ரீ க்ரியேட் பண்றதே கஷ்டம்.

'குயிலை பிடிச்சு' பாட்டுக்கு அப்புறம் ராதாரவி அண்ணாவுக்கு, எனக்கும் பிரபுவுக்கும் கல்யாணம் ஆனது தெரிய வரும். இதுக்கு அப்புறம் என்னை கூட்டிட்டு போயிட்டு ரவி அண்ணா பேசுவார். அப்போ, ஒரு பெரிய டயலாக் சிங்கிள் ஷாட்ல பேச வேண்டியிருந்தது. தமிழ் சரியா தெரியாததுனால எனக்கு பேச வரல. இந்த சீன்ல நடிக்க அப்போ ரொம்ப கஷ்டப்பட்டேன். இதே மாதிரியே 'சின்னதம்பி' படம் கன்னடம், தெலுங்கு, இந்தினு ரீமேக் ஆச்சு. தெலுங்குல நடிக்க முதல்ல என்னை கேட்டாங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். ஆனா, கால்ஷீட் பிரச்னையால கடைசில நடிக்க முடியாம போயிருச்சு. 'சின்னதம்பி' தெலுங்கு ரீமேக்ல நடிச்சிருந்தா தமிழ்ல 'அண்ணாமலை' மற்றும் 'சிங்காரவேலன்' படத்தை மிஸ் பண்ணியிருப்பேன். கன்னடம் ரீமேக்கும் கேட்டாங்க. ஆனா, என்னால நடிக்க முடியல.

குஷ்பு
குஷ்பு

படம் ரிலீஸாகி முப்பது வருஷம் ஆனதையொட்டி நேற்று காலையில படத்தோட சம்பந்தப்பட்ட எல்லோரும் பேசிக்கிட்டோம். தயாரிப்பாளர் பாலு அண்மையில மறைஞ்சிட்டார். இதுதான் வருத்தமா இருக்கு'' என்றார் குஷ்பு.