சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“ஹீரோயின் ஆகணும்னு நினைச்சதில்லை!”

நிக்கி கல்ராணி
பிரீமியம் ஸ்டோரி
News
நிக்கி கல்ராணி

படங்கள்: கிரன் சா

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் நிக்கி கல்ராணியிடம் ஒரு ஜாலி அரட்டை!

`` ‘ராஜவம்சம்’, `இடியட்’னு இரண்டு படங்கள் தமிழில் நீங்க நடித்து வெளியாக இருக்கு. எப்படி இருந்தது இந்த இரண்டு பட அனுபவங்கள்?’’

‘‘ ‘இடியட்’ ஸ்பாட் செம ஜாலியா இருக்கும். சிவா இருக்கார், சொல்லவா வேணும்? காலையில ஷூட் ஆரம்பிச்சதிலிருந்து ஈவ்னிங் முடியுற வரை ஒரே வேடிக்கைதான். ஊர்வசி மேடம்தான் ஹைலைட். ஏற்கெனவே, நான் அவங்களோட மலையாளத்துல ஒரு படம் பண்ணியிருக்கேன். எல்லோரையும் நல்லா கலாய்ப்பாங்க. அவங்க ஹீரோயினா இருந்த காலத்தில் நடந்த கதைகள் நிறைய சொல்லுவாங்க. ‘ராஜவம்சம்’ படத்துல பாதித் தமிழ் இண்டஸ்ட்ரியே நடிச்சிருக்கு. பொள்ளாச்சியில ஷூட் பண்ணினோம். 15 கேரவன் வரிசையா நிற்கிறதைப் பார்க்கவே பிரமாண்டமா இருக்கும்.’’

“ஹீரோயின் ஆகணும்னு நினைச்சதில்லை!”
“ஹீரோயின் ஆகணும்னு நினைச்சதில்லை!”

``மலையாளத்துல அர்ஜுன்கூட ‘விருன்னு’ படம் நடிச்சிட்டிருக்கீங்க. அவர்கிட்ட ஃபிட்னஸ் பற்றி ஏதாவது டிப்ஸ் கேட்டீங்களா?’’

‘‘இந்தப் படம் ஒரு மர்டர் மிஸ்ட்ரி தொடர்பான கதை. பாதி ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. அர்ஜுன் சார் பார்க்க செம ஃபிட். ஆனா, நல்லா சாப்பிடுவார். தினமும் எனக்கு ஸ்வீட்ஸ், சாக்லேட்ஸ் கொண்டுவந்து கொடுப்பார். நான் டயட், டயட்னு சொல்வேன். ‘அதெல்லாம் சாப்பிடலாம் சாப்பி டுங்க’ன்னு சொல்லிக் கொடுப்பார். அவர் இருக்கிறதே பயங்கர ஃபிட். அதனால, அவர் சாப்பி டலாம். நான் அப்படியில்லை. சாப்பாட்டு வாசனையை முகர்ந்தாலே குண்டாகிடு வேன். நான் ரொம்ப கவனமா இருந்தேன். அர்ஜுன் சார்கூட வொர்க் பண்ணினது ரொம்ப சூப்பரா இருந்தது. தவிர, சுசீந்திரன் சாருடைய இயக்கத்துல தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படத்துல நடிச்சிருக்கேன். தமிழ்ல ‘சிவசிவ’ ஜெய் – மீனாட்சி பண்ணியிருக்காங்க. தெலுங்கு வெர்ஷனான ‘ஷிவடு’ல நானும் ஆதியும் நடிச்சிருக்கோம். சுசி சார் செம ஸ்பீடு. நாங்க ஏதாவது ஒன்ஸ்மோர் பண்றோம்னு சொன்னா, ‘எதுக்கு ஒன்ஸ்மோர். இதுவே, சூப்பரா இருந்துச்சே’ன்னு சொல்லி அடுத்தடுத்து கூட்டிட்டுப் போவார். அவர் எங்க மேல அவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தார். ஒரே சீனை தமிழ்ல ஒரு முறை, தெலுங்குல ஒரு முறை எடுப்பாங்க. அவங்க நடிக்கும்போது நாங்களும், நாங்க நடிக்கும்போது அவங்களும் வெயிட் பண்ணுவோம். இந்த மாதிரி எனக்கு இதுதான் முதல் முறை அனுபவம். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.’’

“ஹீரோயின் ஆகணும்னு நினைச்சதில்லை!”
“ஹீரோயின் ஆகணும்னு நினைச்சதில்லை!”

``சினிமாவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகிடுச்சு. சினிமாவுல என்னெல்லாம் பண்ணணும்னு நினைச்சு வந்தீங்க. என்னெல்லாம் இன்னும் பண்ணலைன்னு நினைக்கிறீங்க?’’

‘‘உண்மையைச் சொல்லணும்னா, நான் அப்படியே ஒரு ஃப்ளோவுல சினிமாவுக்குள்ள வந்தேன். அதைப் பண்ணணும், இதைப் பண்ணணும்னு எதையும் அதிகமா யோசிக்கலை. நான் இவ்வளவு பண்ணினதே சந்தோஷமா இருக்கு. ஆனா, இன்னும் நிறைய பண்ணணும்னு ஆசையாவும் இருக்கு. சின்ன வயசுல இருந்து நான் டாக்டராகணும்னு அம்மா என்கிட்ட சொல்லிச் சொல்லி எனக்கும் ஆசை வந்திடுச்சு. ஆனா, பெரிய பெரிய புத்தகங்களை எல்லாம் பார்த்த பிறகுதான், இது நமக்கு செட்டாகாதுன்னு புரிஞ்சது. அப்புறம், மாடலிங், சினிமான்னு வந்துட்டேன். ஹீரோயினாகணும்னு எப்போவும் நான் நினைச்ச தில்லை. அது நடந்திடுச்சு. இந்த அடையாளம் கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.’’