சினிமா
தொடர்கள்
Published:Updated:

“தயக்கத்துடன்தான் ஷோ போனேன்!”

 பவித்ரா லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
பவித்ரா லட்சுமி

படங்கள்: கேமரா செந்தில்

‘குக்கு வித் கோமாளி’ சமீபத்தில் பயங்கர சென்சேஷன் ஆன ஷோ. அந்த ஷோவால் பிரபலமாகி தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் பவித்ரா லட்சுமி. அவரிடம் பேசினேன்.

 “தயக்கத்துடன்தான் ஷோ போனேன்!”

`` ‘குக்கு வித் கோமாளி’க்குள்ள எப்படி வந்தீங்க?’’

“நான் ஆரம்பிச்சதே ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியிலதான். கோயமுத்தூர்ல இருந்து வந்து சென்னை வர்றது முதல் முறை. டிவில எப்படி நடந்துக்கணும்னு தெரியாது, என்னை எப்படிக் காட்டணும்னும் தெரியாது. எனக்குள்ள இருந்த நம்பிக்கைக் குறைவினாலேயே சீக்கிரம் எலிமினேட் ஆகிட்டேன். அப்புறம், வேற சேனல்ல சில ரியாலிட்டி ஷோ பண்ணினேன். நேஷனல், இன்டர்நேஷனல் புராஜெக்ட்ஸ்னு மாடலிங் பண்ணினேன். ‘உல்லாசம்’னு ஒரு மலையாளப் பட வாய்ப்பு வந்து, அதுல நடிச்சேன். அதுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள கொரோனா வந்திடுச்சு. படமும் ரிலீஸாகலை. விரக்தியில இருக்கும்போதுதான், ‘ஸ்டார்ட் மியூசிக்’ ஷோவுல கூப்பிட்டாங்க. அங்க போன பிறகு, ‘குக்கு வித் கோமாளி’க்குக் கூப்பிட்டாங்க. ‘குக்கிங் ஷோவுல நானா’ன்னு தயக்கம் இருந்தது. பேஸிக்கா குக்கிங் தெரியும். ஆனா, போட்டியில கலந்துக்கிற அளவுக்குத் தெரியாது. மூணு எபிசோடுல எலிமினேட் ஆகிடுவோம்னு நினைச்சுதான் போனேன். ஆனா, ஃபைனல்ஸ் வரைக்கும் வந்துட்டேன்.”

 “தயக்கத்துடன்தான் ஷோ போனேன்!”
 “தயக்கத்துடன்தான் ஷோ போனேன்!”

``முதல் நாள் ஷூட் எப்படியிருந்தது?’’

“காலையில 9.30-க்கு ஆரம்பிச்சு நைட் 2.30-க்குத்தான் முடிஞ்சது. ஆனா, அவ்வளவு நேரமாகிடுச்சுனு டைம் பார்க்கிற வரை தெரியாது. அவ்வளவு ஜாலியா இருக்கும். நான் ஹீல்ஸ் பயன்படுத்துறதனால அவ்வளவு நேரம் நிக்கும்போது கால் ரொம்ப வலிக்கும். அந்த வலியெல்லாம் அங்கிருக்கிற ஃபன்ல தெரியாது. வீட்டுக்கு வந்த பிறகுதான் வலி தெரியும். புகழ், பாலா, சரத், சிவாங்கி, தங்கதுரை அண்ணான்னு எல்லோரும் அவ்ளோ எனர்ஜியா இருப்பாங்க.”

 “தயக்கத்துடன்தான் ஷோ போனேன்!”
 “தயக்கத்துடன்தான் ஷோ போனேன்!”

``இந்த அளவுக்கு பாப்புலராவீங்கன்னு நினைச்சீங்களா?’’

“ஏற்கெனவே சொன்ன மாதிரி, தயக்கத்தோடுதான் ஷோவுக்குள்ள போனேன். கொரோனா சமயத்துல நிறைய பேர் பொருளாதார ரீதியா சிரமத்துல இருந்தாங்க. எனக்கும் அப்போ அப்படிதான். என் வீட்ல பப்பி ‘கோகோ’ இருக்கா. இந்தச் சமயத்துல இந்த ஷோவுக்குப் போனா, அதுல வர்ற வருமானத்தை வெச்சு இவளை நல்லாப் பார்த்துக்கலாம்னுதான் போனேன். இதுதான் உண்மை. மீடியாங்கிறது ஸ்டாக் மார்க்கெட் மாதிரிதான். எப்போ மேல இருப்போம்; எப்போ கீழே இருப்போம்னு தெரியாது. இந்தச் சமயம் சரியா இருந்திருக்கு. நானும் அதைச் சரியா பயன்படுத்திருக்கேன்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடி ஆடிஷனுக்குப் போனா, என்னை யாருக்கும் தெரியாது. இப்போ எல்லோருக்கும் என்னைத் தெரியுதுன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு.’’

``இந்த நிகழ்ச்சி மூலமா அறிமுகமாகி உங்க வாழ்க்கையில ரொம்ப நெருக்கமானவங்க யார்?’’

“கனி அக்கா, ஷகீலா மம்மி, தாமு சார் இவங்க எல்லோரும்தான். ரெண்டு நாளுக்கு ஒரு முறை கால் பண்ணிடுவாங்க. தர்ஷாவை ஏற்கெனவே தெரியும். கரியர் அட்வைஸெல்லாம் நான் புகழ்கிட்டதான் கேட்பேன்.”

``சிவாங்கி?’’

“அது ஒரு பொம்மைக்குட்டி. செம க்யூட்டா இருந்தாலும் ஒருவகையில எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன் அவள்தான். நான் ஷார்ட்டா இருக்கேன்னு சொல்லி என் தோற்றத்தை நிறைய பேர் கிண்டல் பண்ணியிருக்காங்க. அதுல இருந்து வெளியே வர எனக்கு இவ்வளவு நாளாச்சு. சிவாங்கியையும் அப்படிக் கிண்டல் பண்ணியிருக்காங்க. தனக்கு இருக்கிற விஷயங்களை பாசிட்டிவா மாத்தி, இவ்வளவு சின்ன வயசுல அதைக் கையாளுறது சாதாரண விஷயமில்லை.”

 “தயக்கத்துடன்தான் ஷோ போனேன்!”
 “தயக்கத்துடன்தான் ஷோ போனேன்!”

``அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகிட்டிருக்கீங்க...’’

“கடவுளுடைய அருளால எல்லாம் நல்லபடியா நடக்குது. ‘குக்கு வித் கோமாளி’ ஃபைனல் நெருங்கிய சமயத்துல கிஷோர் கால் பண்ணி ‘உங்களுக்கு ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. நான் நரேட் பண்ணலாமா?’ன்னு கேட்டார். ஸ்கிரிப்டைக் கேட்டு முடிச்சவுடனே ஓகே சொல்லிட்டேன். எப்படியும் இந்த ப்ராசஸ் எல்லாம் முடிஞ்சு ஷூட்டிங் ஆரம்பமாக டைம் ஆகும்னு நினைச்சேன். ஆனா, ‘குக்கு வித் கோமாளி’ முடிஞ்ச அடுத்த நாளே புராஜெக்ட் ஆரம்பமாகிடுச்சு. சந்தோஷமா இருக்கேன்.”

 “தயக்கத்துடன்தான் ஷோ போனேன்!”

``சதீஷ்கூட நடிக்கிற அனுபவம்?’’

“செம ஜாலியா இருக்கும். ‘என் வீட்ல எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கும்’னு நான் அவர்கிட்ட சொன்னேன். அவரும் ‘எங்க வீட்ல இருக்கிறவங்களுக்கும் உங்களைப் பிடிக்கும்’னு சொன்னார். கதையும் ரொம்ப ஃபன்னா இருக்கும். ஜாலியா சிரிச்சுட்டே இருக்கலாம்.”

``கதிர்கூட ஒரு படம் பண்றீங்களாமே?’’

“ஆமா. தமிழ் - மலையாளம் பைலிங்குவல் படம். அதுவும் ஷூட்டிங் போயிட்டிருக்கு.”