
லாக் டெளன்லகூட நிறைய தமிழ் புராஜெக்ட்ஸ் தேடி வருது. மொழி தெரிஞ்சிக்கிட்டு நடிக்குறப்போ ஆத்மார்த்தமா நடிக்க முடியும்.
‘‘ஆரம்பிச்சப்போ லாக்டெளன் ஈஸி மாதிரி இருந்தது. போகப் போக ரொம்ப கஷ்டமா இருக்கு. வீட்டுல என் வேலைகள நானே செஞ்சுட்டு வரேன். நேரத்துக்கு எப்போவும் பெரிய மரியாதை கொடுக்குற பொண்ணு நான். அதனால, பாசிட்டிவ் வழியில என்னோட நேரத்தைச் செலவழிச்சிட்டு வரேன். தமிழ் எனக்கு எழுதப் படிக்கக் தெரியாது. அதனால, ஆன்லைன்ல தமிழ் க்ளாஸ் படிக்கிறேன். கிதார் வாசிக்கிறேன். எனக்குப் பிடிச்ச சாப்பாட்டை நானே செஞ்சு சாப்பிடுறேன். சில ஆன்மிகப் புத்தகங்களும் படிக்கிறேன்’’ என்கிறார் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நடிகை ராஷி கண்ணா.
‘`எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறீங்க. ஆனா, ஏன் ஆன்லைன் மூலமா கத்துக்க தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்தீங்க?’’

‘`ஏன்னா இப்போ நிறைய படங்கள் தமிழில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். லாக் டெளன்லகூட நிறைய தமிழ் புராஜெக்ட்ஸ் தேடி வருது. மொழி தெரிஞ்சிக்கிட்டு நடிக்குறப்போ ஆத்மார்த்தமா நடிக்க முடியும். என் தமிழ் புரொபஸர் பேரு மிஸ்.லீலா. சீக்கிரமே டப்பிங் கொடுக்குற அளவுக்கு தமிழ் பேச ஆரம்பிச்சிருவேன்.’’
‘`சித்தார்த்கூட நடிக்கிற ‘சைத்தான் கே பச்சா’ ஷூட்டிங் முடிஞ்சிருச்சா?’’
‘`இன்னும் ஒரு பாட்டு இருக்கு. லாக்டெளனால தள்ளிப்போயிருக்கு. சித்தார்த் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். திறமையான நடிகர். அதே மாதிரி படத்தோட இயக்குநர் கார்த்திக்கும் நல்ல திறமைசாலி. இந்தப் படம் பார்க்குற ஆடியன்ஸுக்கு புது ஃபீல் கொடுக்கும். இப்போதைக்கு என் ரோல் பற்றி எதுவும் சொல்ல முடியாது.’’
‘` ‘அரண்மனை 3’ல நடிக்கிறீங்க. முதல் ரெண்டு பாகம் பார்த்துட்டீ ங்களா?’’
‘`யெஸ். சுந்தர்.சி சார் படங்கள் நிறைய பார்த்தி ருக்கேன். அவர் படம்னா சிரிச்சிட்டே இருக்கலாம். அரண்மனை ரெண்டு பார்ட்டும் நல்ல ஹிட். ஒரு ஹிட் சீரிஸ்ல இருக்குறதுல எனக்குப் பெரிய சந்தோஷம். இந்தப் படத்துக்கான வாய்ப்பு வந்தப்போ ரொம்ப ஆச்சர்யமா கிட்டேன். இந்தப் படத்தோட இன்னொரு ஸ்பெஷல் ஆர்யா. ஷூட்டிங் குக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். இதுதவிர, பா.விஜய் சாரின் படத்தோட அறிவிப்பும் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு.’’
‘`இன்ஸ்டால 5 மில்லியன் ஃபாலோயர்ஸ், லைவ் வீடியோஸ், போட்டோஷூட்ஸ்னு பரபரப்பா இருக்கீங்களே?’’

‘`ஆமாம். ஆனா, நான் தமிழில் நிறைய ரசிகர்கள் கிடைப்பாங்கன்னு நினைக்கல. இதுவரைக்கும் நாலு படங்கள் மட்டுமே தமிழில் நடிச்சி ருக்கேன். ரசிகர்கள் அன்புக் காகவே நிறைய படங்கள் பண்ண ஆசைப்படுறேன். சோசியல் மீடியால நிறைய பேர் ஃபாலோ பண்ணுறது, பொது இடங்களுக்குப் போறப்போ பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பேசுறது, போட்டோ எடுத்துக்குறதுன்னு இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்ட பொண்ணா ஃபீல் பண்ணுறேன். ரசிகர்களுக்கு நன்றி.’’
‘`கேரளாவில் கர்ப்பிணி யானை இறந்ததுக்கு வருத்தம் தெரிவிச்சிருந் தீங்களே?’’
‘`ஆமாம். அந்தச் சம்பவம் என்னை ரொம்ப பாதிச்சிருச்சு. ‘மனிதாபிமானம் இல்லாம ஏன் இப்படிச் செஞ்சாங்க’ன்ற கேள்வி எனக்குள்ள கேட்டுட்டே இருந்தது. இந்த யானை பற்றிய செய்தி படிச்சப்போ சிலருக்கு இதயமே இல்லைன்னு தெரிஞ் சிக்கிட்டேன். என்னைச் சுத்தியிருக்குற சமூகத்தை நினைச்சு கொஞ்சம் வேதனைப் பட்டேன்.’’