அரசியல்
கட்டுரைகள்
Published:Updated:

கல்யாணம் நடந்தாலும் ஓகே... இல்லனாலும் ஏத்துக்குவேன்!- ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ருதிஹாசன்

எப்போதும், என்னுடைய பார்ட்னர நினைச்சுப் பெருமைப்படுவேன். இதனால், சோசியல் மீடியா பக்கத்துல வெளிப்படையா பேசுவேன்.

பொண்ணு பார்க்கதான் செம ஸ்டைலீஷ். ஆனா, பேச ஆரம்பித்தால் பக்கத்து வீட்டுப்பெண் போல பாந்தம்.

‘‘தெலுங்கில் ரொம்ப பிஸியாகிட்டீங்கபோல. தமிழ்ல உங்களைப் பார்க்கவே முடியறதில்ல'' என சிம்பிளாகத்தான் கேட்டேன். ஹம்பிளாகப் பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்ருதி.

‘‘தமிழ்ல ‘லாபம்' பண்ணினதும், அடுத்து நடிக்கலாம்னு கதைகள் கேட்டேன். அந்தச்சமயத்துலதான் கோவிட் லாக்டௌன். அப்புறம், தெலுங்கில் படங்கள் வரவே, பண்ண ஆரம்பிச்சுட்டேன். இடையே சென்னைக்கு வந்தேன். இங்கே படங்கள் பண்ணணும்னு ஆர்வமாகவும் இருந்தேன். ஏன்னா, என் மனசு முழுக்க சென்னையில தான் இருக்கு. மும்பையில உள்ள என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டால்கூட, ‘ஸ்ருதி ஒரு தமிழ் மன்றம்'னு சொல்லுவாங்க.

ஏன்னா, வீட்லேயும் சரி, நண்பர்கள்கிட்டேயும் சரி எப்பவும் என் தமிழ் மொழியை விட்டுக்கொடுத்துப் பேசவே மாட்டேன். என் டீன் ஏஜ் வயசுல அமெரிக்காவுக்குப் போயிட்டேன். அங்கே இருந்தப்பதான் தமிழை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன். அப்போ எனக்கு வயது பத்தொன்பதுதான். நான் அடிக்கடி தமிழ்ல பேசுறது பார்த்துட்டு என் ஃப்ரெண்ட்ஸுங்க, ‘அவ ஒரு தமிழ் மன்றம்'னு கலாய்ப்பாங்க.''

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

அப்ப சென்னையை மிஸ் பண்ணுறீங்களா?

‘‘சென்னையை மட்டுமல்ல, அப்பாவையும் மிஸ் பண்ணுறேன். நான் சென்னை வரும்போது அவர் இருக்கறதில்ல. சமீபத்துலகூட நான் இங்கே வந்திருக்கேன். ஆனா, ‘இந்தியன் 2' படப்பிடிப்புக்காக அப்பா வெளிநாடு போயிட்டாங்க. அவரை நேர்ல பார்க்கறதே பெரிய விஷயமா இருக்கு.''

நீங்க சினிமாவுக்கு வந்து பத்து வருஷமாகிடுச்சு..

‘‘அப்படியா! என்னோட சின்ன வயசுல இருந்து நான் இயக்குநர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அப்புறம், வழக்கறிஞர் ஆகணும்னு நினைச்சேன். ஒரு கட்டத்துல மியூசிக்ல ஆர்வம் ஜாஸ்தியாகிடுச்சு. இசையோடு, குழந்தைகள் சைக்காலஜி மற்றும் மியூசிக் தெரபி ரெண்டும் படிச்சேன். அப்ப, இந்தத் துறை ரொம்பப் புதுசா இருந்தது. இப்போதும், சைக்காலஜி தெரபி பற்றிப் படிக்க ஆர்வமா இருக்கேன்.''

ரொம்பவே தைரியமான பொண்ணுன்னு உங்களைச் சொல்லலாம்...

‘‘ஆமா. நான் எல்லார்கிட்டயும் எப்போதும் ஒரு விஷயம் சொல்லுவேன். என்னுடைய இருண்ட காலத்தில் இருந்துதான் எல்லாத்தையும் கத்திருக்கேன். அதுல இருந்துதான் எனக்கு வெளிச்சமே கிடைச்சிருக்கு. என்னை முழுசா புரிஞ்சுகிட்டு வெளியே வந்திருக்கேன். எப்போதும், என்னுடைய பெற்றோர்கள் ஓப்பன் மைண்ட் செட்டா இருந்திருக்காங்க. ஆனா, அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றதுக்கு பயப்படுவேன். இதனால, என்னுடைய ப்ரெண்ட்ஸ்கிட்ட பகிர்ந்துக்குவேன். இன்னொரு விஷயம், எப்போதும் லைம் லைட் தேடி அலைய மாட்டேன். ‘go with the flow' பாலிஸிதான். எனக்குக் கிடைக்கிறதுல சந்தோஷப்படுவேன்.''

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

திருமண உறவில் நம்பிக்கை இருக்கா?

‘‘எப்போதும், என்னுடைய பார்ட்னர நினைச்சுப் பெருமைப்படுவேன். இதனால், சோசியல் மீடியா பக்கத்துல வெளிப்படையா பேசுவேன். திருமணத்தைக் கட்டமைப்பா பார்க்குறேன். இதுக்குன்னு மதிப்பு இருக்கு. புரிதல் இருக்கணும்னு நினைக்கிறேன். நடந்தாலும் ஓகே, இல்லன்னாலும் ஏத்துக்குவேன்.''

அடுத்து தமிழ்ல எப்ப பார்க்கலாம்?

‘‘கதை கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரமே பார்க்கலாம்''