Published:Updated:

`காடும் டார்க்கு, காமெடியும் டார்க்கு... ஆள விடுங்க சாமிகளா!' - `ட்ரிப்' சுனைனா

நடிகை சுனைனா

தற்போது வெப் சீரிஸில் அதிக கவனம் செலுத்திவருகிறார் சுனைனா. இவர் நடிக்கும் வெப் சீரிஸ்களுக்கும் இணையத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. சினிமா, வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கும் சுனைனாவிடம் பேசினோம்.

Published:Updated:

`காடும் டார்க்கு, காமெடியும் டார்க்கு... ஆள விடுங்க சாமிகளா!' - `ட்ரிப்' சுனைனா

தற்போது வெப் சீரிஸில் அதிக கவனம் செலுத்திவருகிறார் சுனைனா. இவர் நடிக்கும் வெப் சீரிஸ்களுக்கும் இணையத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. சினிமா, வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கும் சுனைனாவிடம் பேசினோம்.

நடிகை சுனைனா

`காதலில் விழுந்தேன்' படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர், சுனைனா. `சில்லுக் கருப்பட்டி', `எனை நோக்கி பாயும் தோட்டா', `ட்ரிப்' ஆகிய தமிழ்ப் படங்கள் இவரது கைவசம் உள்ளன. தற்போது வெப் சீரிஸிலும் அதிக கவனம் செலுத்தி வரும் சுனைனாவுக்கு, இணையத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. சினிமா, வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கும் சுனைனாவிடம் பேசினோம்.

`சில்லுக் கருப்பட்டி'ங்கிற ஆந்தாலஜி படத்துல நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?

``நான் சமுத்திரக்கனி சார்கூட ஏற்கெனவே `நீர்ப்பறவை', `தொண்டன்'னு இரண்டு படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கேன். இது மூணாவது படம்ங்கிறதால, நடிக்கிறதுக்கு ரொம்ப ஈஸியா இருந்தது. இந்தப் படத்துல நடிக்கச் சொல்லி ஹலீதாதான் கேட்டிருந்தாங்க. தன்னைவிட 13 வயசு அதிகமான ஒரு ஆளை கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ணுக்கும், அவருக்குமான உறவுல இருக்கிற பிரச்னைகள்ல ஆரம்பிச்சு, அவங்களுக்குள்ள இருக்கிற அன்பை வெளிக்காட்டி எப்படி சந்தோஷமா வாழ்றாங்கங்கிறதுதான் கதை. சிம்பிளான இந்தக் கதையில, வசனங்கள்ல அதிக கவனம் செலுத்தியிருக்காங்க ஹலீதா. நிச்சயமா, படத்துல நிறைய மேஜிக் இருக்கும். கனி சாரும் நானும் சண்டை போட்டு விவாதம் பண்ற மாதிரியான ஒரு காட்சி மூணு நிமிஷம் போகும். மொத்தக் காட்சியும் சிங்கிள் ஷாட். அந்த மாதிரியான சில காட்சிகள்ல நடிக்கும்போது ரொம்பவே சவாலா இருந்தது. இயக்குநர் ஹலீதா, ஒளிப்பதிவாளர் யாமினினு எல்லோருமே திறமையானவங்க. படத்தின் ஷூட்டிங் ரொம்பக் குறைவான நாள்தான் நடந்தது. ஆனா, மறக்க முடியாத அனுபவமா இருந்தது."

``யோகி பாபுவோடு நடித்த `ட்ரிப்' படம் எந்த அளவில் இருக்கு?"

நடிகை சுனைனா
நடிகை சுனைனா

``இன்னும் ஒரு பாட்டு மட்டும் ஷூட் பண்ணணும். யோகிபாபுவும் கருணாகரனும் படம் முழுக்கவே என்கூட வருவாங்க. இந்தப் படத்துல எனக்கு ஜோடி இல்லை. முழுக்க முழுக்க அடர்ந்த காட்டுல நடக்கிற கதை. ஒரு பக்கம் கதை சீரியஸா போனாலும் படம் முழுக்க டார்க் காமெடி இருந்துட்டேயிருக்கும். யோகி பாபுவும், கருணாகரனும் இருக்கிற செட் ரொம்பவே ஜாலியா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அங்கதான் நான் நேர்ல பார்த்தேன். அவங்க அடிக்கிற லூட்டிலாம் பார்த்தா ஆள விடுங்க சாமிகளான்னு இருக்கும். நான் சிரிச்சு முடிக்கிற வரைக்கும் டைரக்டர் வெயிட் பண்ணி, ஆக்‌ஷன் சொல்வார். இதுவரைக்கும் இது எந்த ஷூட்டிங்லேயும் நடந்தது இல்லை. முதல்முறையா அது `ட்ரிப்'லதான் நடந்தது. கதையில இருக்கிற ஹியூமரைத் தாண்டி ஸ்பாட்ல செம ரகளை நடக்கும்.''

``முழுப் படத்திலும் காட்டுக்குள் நடித்தது சிரமமா இருந்ததா?"

``லொக்கேஷன் செட் ஆகலை, காட்டுல இருக்கோம்ன்ற நினைப்பே எனக்கு இல்ல. அந்த இடத்தை ரொம்பவே என்ஜாய் பண்ணேன். முதல் ஷெட்யூல் 20 நாள் ஷூட்டிங்கும் தலைக்கோணம்ங்கிற காட்டுப் பகுதியில் நடந்தது. அதே காட்டுக்குப் பக்கத்துலதான் தங்கியிருந்தோம். அதுமட்டுமில்லாம, அதே இடத்துலதான் `காதலில் விழுந்தேன்' க்ளைமேக்ஸும் எடுத்தாங்க. ஆபத்தான நாய் வகையான `பிட் புல்'ங்கிற ப்ரீடுகூடதான் இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். கோபம் வந்துட்டா வளர்ந்தவங்களையே கடிச்சு வெச்சிடுமாம். அதுகூட சில ஆக்‌ஷன் போர்ஷன்ல நடிச்சிருக்கேன். ஜாலியா இருந்தாலும் ஒரு பக்கம் பயமாதான் இருந்தது. என்னைவிட இயக்குநர் ரொம்ப பதட்டப்பட்டார். கடைசியில அந்த நாய்கூட ஃப்ரெண்டு ஆகிட்டேன்."

``நிறைய வெப் சீரிஸில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு?"

நடிகை சுனைனா
நடிகை சுனைனா

``ஜீ 5 ஒரிஜினல்ஸ் தயாரித்த `High Priestess'னு ஒரு தெலுங்கு வெப் சீரிஸ் பண்ணேன். அமலா மேம்தான் இதுல லீடு ரோல் பண்ணியிருக்காங்க. எங்களுக்கு அவ்ளோவா காம்பினேஷன் காட்சிகள் இல்லைனாலும், அவங்களோட பேசுற சந்தர்ப்பம் கிடைச்சது. ஒவ்வொரு எபிசோடிலும் நான்தான் இதுல கதையை நரேட் பண்ணுவேன். இந்த சீரிஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைச்சது. என் கரியர்ல முதல்முறையா டப்பிங் பேசினது மறக்க முடியாத அனுபவமா இருந்தது. `நிலா நிலா ஓடி வா'தான் நான் பண்ண முதல் வெப் சீரிஸ். இதைத் தவிர, அக்‌ஷராகூட `ஃபிங்கர் டிப்'னு சோஷியல் மீடியா பத்தின ஒரு வெப் சீரிஸில நடிச்சிருக்கேன். இதுபோக, பொலிட்டிக்கல் டிராமா ஜானர்ல ஒரு தெலுங்கு வெப் சீரிஸ்ல ரிப்போர்ட்டரா நடிச்சிருக்கேன்."

``வெப் சீரிஸ்களில் அதிக கவனம் செலுத்துவதற்கான காரணம் என்ன? இதுதான் அடுத்த பிளாட்ஃபார்ம்னு முடிவு பண்ணிட்டீங்களா?"

``சின்ன வயசுல இருந்து படங்களைவிட டி.வி சீரிஸ்தான் அதிகமா பார்ப்பேன். நிறைய சீசன்கள், எபிசோடுகள்னு போறதால அதுல வர்ற கதாபாத்திரங்களுக்குள்ள ஆழமா போக முடியும். அதனாலதான் சீரிஸ் பார்க்கிறவங்க, குறிப்பிட்ட கேடரக்டருக்கு ரசிகரா இருப்பாங்க. உதாரணத்துக்கு, `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆர்யா ஸ்டார்க் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். இப்போதான் நம்ம ஊர்ல சீரிஸ் பிரபலமாகி, குறைந்த காலத்துல அதிக வளர்ச்சியடைய ஆரம்பிச்சிருக்கு. 2020-ல் இது இன்னும் அதிகமாகும். இருந்தாலும் `பாகுபலி' மாதிரி தியேட்டர்ல பார்க்கிற படங்களும் நிறைய இருக்கு. தியேட்டர் அனுபவம்ங்கிறது மேஜிக்தான்."

``தொடர்ந்து வெப் சீரிஸ் பண்றதால சினிமா வாய்ப்புகள் குறையாதா?"

நடிகை சுனைனா
நடிகை சுனைனா

``வெப் சீரிஸ்ல நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான், பட வாய்ப்புகள் நிறைய வருது. எந்த மொழியில வெப் சீரிஸ் பண்ணாலும் அது இந்தியிலேயும் டப் ஆகுது. அதைப் பார்த்துட்டு, அந்தப் பக்கமும் எனக்கு நிறைய ரசிகர்கள் உருவாகியிருக்காங்க. எனக்கு மெசேஜும் பண்ணி வாழ்த்துறாங்க. என்னுடைய திறமையைக் காட்ட சீரிஸ்தான் நல்ல பிளாட்ஃபார்ம். அதுமட்டுமில்லாம, இங்க நிறைய சுதந்திரம் இருக்கு. நான் தெலுங்குப் பொண்ணுதான், இருந்தாலும் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிதான் எனக்கு நெருக்கமாவும் கம்ஃபர்ட்டாவும் இருக்கு."