ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

``ஹீரோக்கள் எல்லாம் ஸ்லிம்மா, ஃபிட்டாதான் இருக்காங்களா?’’

வித்யா பாலன்
பிரீமியம் ஸ்டோரி
News
வித்யா பாலன்

- வித்யா பாலன் எக்ஸ்க்ளூசிவ்

வித்யா பாலன்... இந்தப் பெயரைக் கேட் டாலே அவர் நடித்த கதாபாத்திரங்கள்தான் மன கண்களில் விரியும். சயின்டிஸ்ட்டோ, சகுந்தலா தேவியோ, ஃபாரெஸ்ட் ஆஃபீஸரோ, ஊடகவியலாளரோ... ஏற்கும் கேரக்டராகவே மாறிவிடும் மாயவித்தை தெரிந்தவர். தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்று உச்சம் தொட்டவர்களில் இந்தத் தலை முறையின் பெருமை வித்யா பாலன். இவர் நடிப்பில் ‘ஜல்சா’ படம் அமேஸான் ப்ரைமில் ரிலீசாகியிருக்கிறது. ஊடகவியலாளராக மாயா மேனன் கேரக்டருக்கு கம்பீரம் சேர்த்திருப் பவர், நமக்காக அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியில் ஏராளமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

``நாங்க பாலக்காட்டு ஐயர். அதனால என் தமிழ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்...’’ டிஸ்க்ளெய்மருடன் பேச ஆரம்பிக்கிறார் வித்யா.

‘ஜல்சா’ படம் பற்றியும் அதில் தன் பெர்ஃபாமன்ஸ் குறித்தும் நம் கருத்துகளைக் கேட்டுக் கொள்கிறார். அந்தப் படத்தில் ஊடகவியலாளராக நடித்த அனுபவத்துடன் உரையாடலைத் தொடர்கிறார்.

``ஒரு நடிகையா படத்தோட கதையை முழுமையா புரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ‘ஜல்சா’ படத்துல ஜர்னலிஸ்ட்டா என் கேரக்டர் பத்தி தெரிஞ்சுக்க டைரக்டர் சுரேஷ் திரிவேணிகிட்ட நிறைய கேள்விகள் கேட்டேன். நான் எப்பவும் நியூஸ் பார்ப்பேன். கடந்த 17 வருஷங்களா நடிகையா இருக்கேன். பத்திரிகையாளர்களோடு பலவருட பழக்கம் இருந்திருக்கு. சில நேரம் நியூஸ்ரூம்வரைக்கும் கூட போயிருக்கேன். ‘ஜல்சா’ படத்தோட ஷூட் ரெண்டாவது லாக்டௌன் டைம்ல நடந்தது. அதனால பெருசா வெளியில போய் ரிசர்ச் பண்ண முடியலை. ஆனா, ஒரு பத்திரிகையாளரா என் பர்சனாலிட்டி எப்படி இருக்கணும்னு டைரக்டர் எனக்கு முழுமையா விளக்கினார். பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்திட்டிருக்கு... சந்தோஷமா இருக்கு...’’ பளீரென சிரிப்பவரின் படங்கள் வரிசையாக ஓடிடியில் ரிலீசாகின்றன.

``ஹீரோக்கள் எல்லாம் ஸ்லிம்மா, ஃபிட்டாதான் இருக்காங்களா?’’

தியேட்டர்ல ரிலீஸாகுற படங்கள்னா மக்களோட வரவேற்பை நேரடியா தெரிஞ்சுக்க முடியும். உங்க படங்கள் வரிசையா ஓடிடிலயே ரிலீசாயிட்டிருக்கு... அதுல வருத்தம் ஏதாவது இருக்கா?

``ஓடிடியோ, தியேட்டரோ என் நடிப்பைப் பார்த்துட்டு மக்கள் என்னைப் பாராட்டறதைப் போல சந்தோஷம் வேற இருக்காது. தியேட்டர் ரிலீசுக்கும் ஓடிடிக்கும் நடிப்புல நாங்க எந்த வித்தியாசத்தையும் காட்டப் போறதில்லை. எனக்கு எல்லா மீடியம்லயும் எல்லா கேரக்டர் லயும் எல்லாவிதமான கதைகள்லயும் நடிக் கணும். ஏன்னா எனக்கு பேராசை அதிகம். எனக்கு மக்களோட அன்பு நிறைய வேணும்.''

‘பா’, ‘மிஷன் மங்கள்’, ‘சகுந்தலா தேவி’, ‘ஷெர்னி’... இப்போ ‘ஜல்சா’ வரை உங்களுடைய கேரக்டர்ஸ் எல்லாம் உங்களுக்காகவே டிசைன் பண்ணது மாதிரி இருக்கே... அப்படித்தான் அமையுதா அல்லது நீங்க அந்த கேரக்டர்ஸாவே மாறிடறீங்களா?

``நீங்க சொன்ன இந்த எல்லா பட கேரக்டர்களும் என்னை மனசுலவெச்சு எழுதப்பட்டவை தான். கதையும் டைரக்‌ஷனும்கூட எனக்கேத்தபடி அமைஞ்சிடுது. ஒரு நடிகையா என் பெஸ்ட்டை கொடுக்கணும்னு நினைப்பேன். எனக்குள்ள இருக்குற பெஸ்ட்டை கொண்டுவரச் சொல்லி டைரக் டர்ஸ்கிட்டயும் பேசுவேன். ஸ்டீரியோடைப் கேரக்டர்ஸை உடைக்கணும்ங்கிறது என் ஆசை. அதிர்ஷ்டவசமா எனக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள்தான் வருது. . வித்தியாசமான கதையோ, கேரக்டரோ இல்லைனா எனக்கு சீக்கிரம் போரடிச்சிடும். நான் என்ன பண்ணாலும் முதல்ல அதை நான் ரசிக்கணும்னு நினைப்பேன். அதுக்காகத்தான் எப்போதும் புதுசு, புதுசா முயற்சி பண்ணிட்டே இருப்பேன்.’’

சினிமாக்கள் பெண்களை சித்தரிக்கிற விதம் மாறியிருக்கிறதா நினைக்கிறீங்களா?

``முழுசா மாறலைன்னாலும் நிறைய மாறியிருக்கு. இப்போ வரும் பெரும்பாலான படங்கள்ல பெண்களோட கேரக்டர்கள் ரொம்ப பிரமாதமா டிசைன் பண்ணப்படுது. நிஜ வாழ்க்கையில பெண் வெறுமனே ஒருத்தரோட அம்மாவா, மனைவியா, அக்கா, தங்கையா, மகளா மட்டுமே இருக்கறதில்லை. நம்மை தனிப்பட்ட மனுஷங்களா பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. அந்த மாற்றம் சினிமாவிலும் வர ஆரம்பிச்சிருக்கு. ஸ்டீரியோ டைப் கேரக்டர்கள் மாற ஆரம்பிச்சதுக்கும் அதுதான் காரணம். சினிமாவுல வர்ற பெண் கேரக்டர்களுக்கும் வெற்றிகள், தோல்விகள், போராட்டங்கள் இருக்கும்னு உணர்ந்து அதுக்கேத்தபடி டிசைன் பண்றாங்க. பெண்களோட பல பரிமாணங்களைக் காட்டற கேரக்டர்ஸை வெப்சீரிஸ், படங்கள்னு எல்லாத்துலயும் பார்க்க முடியுது.’’

கல்யாணத்துக்குப் பிறகு நடிகைகளுக்கான வரவேற்பு மாறுவதை எப்படிப் பார்க்கறீங்க? கல்யாணத்துக்குப் பிறகான கம்பேக் உங்களுக்கு எப்படி இருந்தது?

``ஒரு காலத்துல அப்படி இருந்தது. இப்போ இல்லைனுதான் நினைக்கிறேன். சாமானிய பெண்களையே எடுத்துப் போமே... முன்னல்லாம் கல்யாணமாயிட்டா வேலையை விட்டுடு வாங்க. குழந்தை பிறந் துட்டா அப்புறம் அவ அம்மா மட்டும்தான். இப்போ அப்படி யில்லையே... கல்யாணம், குழந்தைக்குப் பிறகும் வேலைக்குப் போறாங்க இல்லையா... அது நடிகை களுக்கும் பொருந்தும். அது மட்டுமில்லாம இன்னிக்கு உள்ள நடிகைகள் வெறும் 20 வயசுப் பெண்ணா வந்துட்டுப் போறதில்லை. ஃபீமேல் லீடா அந்தக் கதையைத் தாங்கறாங்க. என் விஷயத்தையே எடுத்துக்கோங்க. எனக்கு 43 வயசு. இன்னிக்கு நான் அடைஞ்சிருக்கிற இந்த இடம், பத்து வருஷங்களுக்கு முன்னாடி நிச்சயம் சாத்தியமாகியிருக்காது. கல்யாணத்துக்குப் பிறகு நடிகைகளுக்கு அக்கா, அண்ணி கேரக்டர்கள் கொடுக்கப் பட்டுகிட்டிருந்ததும் மாற ஆரம்பிச்சிருக்கு. கத்ரினா கைஃப், கல்யாணத்துக்குப் பிறகும் லீடு ரோல்ல நடிச்சிட்டிருக்காங்க. கரீனா கபூருக்கு ரெண்டு குழந்தைங்க பிறந்த பிறகும் லீடு ரோல் பண்ணிட்டிருக்காங்க. அதனால மாற்றங்கள் இல்லாம இல்லை. என் விஷயத்துல நான் கல்யாணத்துக்குப் பிறகு பிரேக்கே எடுக்கலை. கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னாடிவரை வொர்க் பண்ணினேன். கல்யாணமான அடுத்த மாசமே மறுபடி நடிக்க வந்துட்டேன்.’’

பாடி ஷேமிங் பத்தி தைரியமா பேச ஆரம்பிச்ச நடிகைகள்ல நீங்கதான் முன்னோடி... உருவகேலி யிலேருந்து நீங்க எப்படி மீண்டு வந்தீங்க?

``அஞ்சு விரல்களும் ஒண்ணா இருக்காதில்லையா... கட்டைவிரல் தடிமனா இருக்கும். நடுவிரல் நீளமா இருக்கும். ஆனா, அந்த அஞ்சு விரல்களும் இல்லைனா கை சரியா வேலை செய்யாது. அப்படித்தான் எல்லாரோட உடல் வாகும் ஒரே மாதிரி இருக்காது. என் உடல் வாகு ஒரு மாதிரி இருக்கும். உங்க உடல் வாகு வேற மாதிரி இருக்கும். அவங்கவங் களுக்கு அமைஞ்ச உடல்வாகைக் கொண் டாடப் பழகணும். நம்ம உடம்புதான் நம்மளை உயிரோட வெச்சிருக்கு. அதுக்காக நாம நன்றி யோட இருக்கணும். உடம்பு வேலை செய்யறதை நிறுத் திட்டா வாழ்க்கையே இல்லையே... எனக்கு அந்தத் தெளிவு வந்தபோது என் உடல்வாகை பத்தின தாழ்வு மனப்பான்மையை நான் விட்டுட்டேன். ஒல்லியாகணும்ங்கிற ஆசை எனக்கு ரொம்பவே இருந்தது. எந்த டிரஸ் போட்டாலும் என்னால சந்தோஷமா இருக்க முடியாது. கண்ணாடில பார்த்தா என்னை எனக்கே பிடிக்காம இருந்த நாள்கள் இருக்கு. என்னை உயிரோட வெச்சிருக்கிற உடம்பை நான் எப்போதும் திட்டிட்டே இருக்கேனே... அது நியாயமே இல்லையேன்னு ஒருகட்டத்துல எனக்குப் புரிஞ்சது. என் உடலை நான் பாராட்டவும் ஏத்துக்கவும் ஆரம்பிச்சதும் என் ஹெல்த் இம்ப்ரூவ் ஆச்சு... நான் முன்னைவிட சந்தோஷ மான மனுஷியா மாறினேன்.’’

நடிகைகளுக்கு சைஸ் ஜீரோங்கிற பிரஷர் கொடுக்கப்படுதுதானே... நடிகைகள் குண்டா இருந்தா தப்பா என்ன?

``அப்படிப் பார்த்தா எல்லா ஹீரோக்களும் ஸ்லிம்மா, ஃபிட்டாதான் இருக்காங்களா... எத்தனை வயசானாலும் சின்ன சின்ன பெண்களோடு நடிக்கிறாங்க. அந்த மாதிரி நடிகர்களுக்குத்தான் வயசு கம்மியா, ஒல்லி யான ஹீரோயின்கள் வேணும், அப்போதான் அவங்க இளமையா தெரிவாங்கன்னு நினைக்கிறாங்க. உண்மையில இது ஆண்களுடைய இன்செக்யூரிட்டிதான். அதனால பெண்கள்மேல பிரஷர் போடறாங்க. எனக்கும் அந்த பிரஷர் இருந்திருக்கு. எல்லா டைரக்டர்ஸும் என்னை வெயிட்டை குறைக்கச் சொல்லியிருக்காங்க. ஆனா என்னால முடியலை. ஒரு கட்டத்துல ‘உங்களுக்கு ஒல்லியான நடிகைதான் வேணும்னா வேற யாரையாவது செலக்ட் பண்ணிக்கோங்க. என்னால வெயிட்டை குறைக்க முடியாது’ன்னு சொல்லிட்டேன். அப்புறம் என்கிட்ட அப்படிக் கேட்கறதை நிறுத்தினாங்க. இன்னிக்கு மக்கள் நான் எப்படி இருக்கேனோ அப்படியே என்னை ஏத்துக் கலையா....’’

 `ஜல்சா' படத்தில் வித்யா பாலன், ஷெஃபாலி ஷா
`ஜல்சா' படத்தில் வித்யா பாலன், ஷெஃபாலி ஷா

பாலின பாகுபாடுகளை சந்திச்ச அனுபவம் உண்டா உங்களுக்கு?

``என் முதல் பாலிவுட் படம் ‘பரிணீதா’. ‘முதல் படம் வேணா இப்படி அமையலாம். ஆனா, அடுத்தடுத்து அப்படியே அமையும்னு நினைக்காதே... ஹீரோவோட ரொமான்ஸ் பண்ற ஹீரோயின் ரோல்ல நடிக்க ரெடியாயிடு... ஸ்ட்ராங்கான ஃபீமேல் லீடு கேரக்டரை எல்லாப் படங்கள்லயும் எதிர்பார்க்க முடியாது'ன்னு சொன்னாங்க. ஆனா அதை யெல்லாம் நான் கண்டுக்கவே இல்லை.’’

தமிழ் சினிமா மேல உங்களுக்கு என்ன கோபம்... இந்தப் பக்கம் உங்களைப் பார்க்க முடியலையே...

``ஐயையோ... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நல்ல படங்கள் வந்தா நடிக்க நான் ரெடி. ஹிந்தியில பண்ற மாதிரியான சேலஞ்சிங் கான கேரக்டர்ஸ் வந்தா சந்தோஷமா பண்ணு வேனே...’’

தமிழ்ப் படங்கள் பார்க்கறீங்களா... உங்க ஃபேவரைட் ஆக்டர்ஸ் யார்?

``கடைசியா ‘பாவக் கதைகள்’ ஆந்த்தாலஜி பார்த்தேன். சாய் பல்லவி, காளிதாஸ் நடிப்பைப் பார்த்து அசந்துட்டேன். ஹீரோஸ்ல தனுஷையும் ஹீரோயின்ஸ்ல சாய் பல்லவியையும் ரொம்ப பிடிக்குது. அந்த ‘ரவுடி பேபி...' சாங்... யப்பா... சான்ஸே இல்லை. மத்தபடி நான் நிறைய தமிழ்ப்படங்கள் பார்க்கிறதிலலை. அதனால யார் இருக்காங் கன்னு தெரியலை.’’

உங்க ட்ரீம்ரோல்...?

``எம்.எஸ். சுப்புலட்சுமியா நடிக்கணும்ங் கிறது என் கனவு. ஆனா அதுக்கான ரைட்ஸ் எங்களுக்கு கிடைக்கலை. அதனால அது இன்னும் கனவாவே தொடர்ந்திட்டிருக்கு.’’