Published:Updated:

AK 62 Exclusive: விக்னேஷ் சிவனிடம் கதை கேட்ட விஜய் சேதுபதியின் ரெஸ்பான்ஸ்; ஐஸ்வர்யா ராய் நாயகியா?

அஜித்

விக்னேஷ் சிவன், லைகா நிறுவனத்துடன் கமிட்டான அடுத்த சில வாரங்களிலேயே கதையை ரெடி செய்துவிட்டார். அதை தனது ஆஸ்தான ஹீரோவான விஜய் சேதுபதியிடமும் சொல்லியிருக்கிறார்.

Published:Updated:

AK 62 Exclusive: விக்னேஷ் சிவனிடம் கதை கேட்ட விஜய் சேதுபதியின் ரெஸ்பான்ஸ்; ஐஸ்வர்யா ராய் நாயகியா?

விக்னேஷ் சிவன், லைகா நிறுவனத்துடன் கமிட்டான அடுத்த சில வாரங்களிலேயே கதையை ரெடி செய்துவிட்டார். அதை தனது ஆஸ்தான ஹீரோவான விஜய் சேதுபதியிடமும் சொல்லியிருக்கிறார்.

அஜித்
அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அவரது இயக்குநர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். `துணிவு' வெற்றி பெற்றதற்காகச் சபரிமலையில் வேண்டுதலை நிறைவேற்றி வந்துள்ளார் இயக்குநர் அ.வினோத். அஜித்தை அடுத்து இயக்கும் விக்னேஷ் சிவனும், `படம் சிறப்பாக வரவேண்டும்' என சபரிமலை சென்று வேண்டி வந்திருக்கிறார். இந்நிலையில் லைகா தயாரிப்பில் `அஜித் 62' படத்தின் அப்டேட் குறித்து விசாரித்ததில் கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் இதோ...
'துணிவு' பாடலில்..
'துணிவு' பாடலில்..

'துணிவு' வரவேற்பை அள்ளியதில் அஜித் டீமை விட, பெரும் உற்சாகத்தில் உள்ளார் விக்னேஷ் சிவன். லைகா நிறுவனத்துடன் அவர் கமிட்டான அடுத்த சில வாரங்களிலேயே கதையை ரெடி செய்துவிட்டார். அதைத் தனது ஆஸ்தான ஹீரோவான விஜய் சேதுபதியிடமும் சொல்லியிருக்கிறார். 'செம மாஸ்' என சேதுவும் உற்சாகமாக விக்கியை வாழ்த்தியிருக்கிறார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, பெரும் விலைக்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் படத்தை வாங்கியிருப்பதால், மகிழ்ச்சியில் இருக்கிறது லைகா வட்டாரம்.

இந்நிலையில் 'அஜித் 62'க்கான படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க உள்ளது எனத் தகவல் பரவியிருக்கிறது. அஜித், உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றாக Leg 1-ஐ முடித்திருக்கிறார். அதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவர் பைக் ரைடில் அசத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் ஒரு சில வாரங்களில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகச் சொல்கிறார்கள். பிப்ரவரியில் 'அஜித் 62' படப்பிடிப்பு தொடங்கும் என்றும், குஜராத், மும்பை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது எனவும் தகவல். 'நானும் ரவுடிதான்' படத்தில் பார்த்திபன் செய்தது போல ஒரு கேரக்டரில் இதில் சந்தானம் நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள்.

சந்தானம்
சந்தானம்

கதாநாயகியாக த்ரிஷா பரிசீலனையிலிருந்தார். ஆனால், அவர் ஏற்கெனவே 'விஜய் 67'க்காக மொத்தமாக மாதக்கணக்கில் கால்ஷீட் கொடுத்திருப்பதால், அவரால் இதில் நடிக்கமுடியாமல் போனது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிப்பதாக வெளியான தகவலைப் படக்குழுவினர் மறுத்துள்ளனர். ஹீரோயினாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் எனப் பலரது பெயர்களைத் தற்போது பரிசிலீத்து வருகிறார்கள். விக்கியின் ஆஸ்தான இசையமைப்பாளரும், நண்பருமான அனிருத்தே இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.