Published:Updated:

விடாமுயற்சி: இன்று தொடங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்பு; தள்ளிப்போனது ஏன்? - வெளிவராத தகவல்கள்!

அஜித்

`விடாமுயற்சி' படத்தில் மகிழை அடுத்து, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் அனிருத் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார்கள். ஹீராயின்களுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Published:Updated:

விடாமுயற்சி: இன்று தொடங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்பு; தள்ளிப்போனது ஏன்? - வெளிவராத தகவல்கள்!

`விடாமுயற்சி' படத்தில் மகிழை அடுத்து, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் அனிருத் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார்கள். ஹீராயின்களுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அஜித்
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது அஜித், மகிழ் திருமேனியின் கூட்டணியில் உருவாகும் `விடா முயற்சி' திரைப்பட அறிவிப்பு.

இந்நிலையில், `விடா முயற்சி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக இருந்தது என்றும், படப்பிடிப்பை அடுத்த மாதம் தள்ளி வைத்திருக்கின்றனர் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு. இதுகுறித்து விசாரித்தில் கிடைத்த தகவல்கள் இனி.

உலக சுற்றுப்பயணத்தின் போது..
உலக சுற்றுப்பயணத்தின் போது..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகை பைக்கில் சுற்றி வரும் பயணத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்து, சென்னை திரும்பினார் அஜித். இன்று ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அவரது உலக டூரான 'Leg 1'ல் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளைச் சுற்றி வந்து, முதல் சுற்றை நிறைவு செய்த திருப்தியில் இருக்கும் அஜித், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மகிழ் திருமேனியிடம் 'விடா முயற்சி' யின் முழுக்கதையையும் கேட்டிருக்கிறார். லைகா, மகிழை கமிட் செய்யும் போதே, அஜித்துக்கான லைனை சொல்லியிருந்தார் மகிழ். அதைப் போல, லைகா மூலமாக அஜித்துக்கும் அந்த லைன் அப்போதே தெரியும் என்றாலும், லெக் ஒன் பயணத்தை முடித்த பிறகே, கதையைக் கேட்டிருக்கிறார் அஜித்.

 - இயக்குநர் மகிழ்திருமேனி
- இயக்குநர் மகிழ்திருமேனி

`துணிவு' பக்கா ஆக்‌ஷன் கதை என்றாலும், வெளிநாடுகளில் அந்தப் படத்தை லைகா தான் ரிலீஸ் செய்திருந்தது. படத்தை குடும்பம் குடும்பமாக வெளிநாடுகளில் மக்கள் கண்டுகளித்தார்கள் என்பதால், அதை மனதில் வைத்து ஃபேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்திழுக்கும் எமோஷன்களை வைக்கச் சொல்லி கதையில் சில இன்புட்ஸ்களை அஜித் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே கதையை இன்னும் செதுக்கி வருகிறார் மகிழ். 'துணிவு' படத்தில் லுக்கிற்கு நேரெதிர் தோற்றத்தில் அஜித் இருப்பார் என்றும், அதற்காக இப்போது அவர் ரெடியாகி வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.

வெளிநாட்டில் அஜித்
வெளிநாட்டில் அஜித்

`விடா முயற்சி'யில் மகிழை அடுத்து, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, இசையமைப்பாளர் அனிருத் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராயிடம் பேசி வந்தனர். ஆனால், தேதிகள் சரிபட்டு வராததால், இப்போது த்ரிஷாவிடம் பேசி வருவதாக சொல்கிறார்கள். த்ரிஷா, லைகாவின் தயாரிப்பில் 'ராங்கி', 'பொன்னியின் செல்வன்' படங்களில் நடித்திருப்பதாலும், லைகாவின் குட்புக்கில் இருப்பதாலும், 'விடாமுயற்சி'யில் த்ரிஷா என்ட்ரி கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள்.

திட்டமிட்டபடி இன்று படப்பிடிப்பு வட இந்தியாவில் தொடங்கியிருக்க வேண்டும் என்றும், சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் வருமான வரி சோதனையை சந்தித்ததில், படப்பிடிப்பை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள் அனேகமாக ஜூன் இரண்டாவது வாரத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக படத்தைக் கொண்டு வரவும் திட்டமிட்டு வருகிறார்கள்.