Published:Updated:

"நான் எந்த மாதிரியான ஒரு நடிகை ஆகணும்னு இந்தப் படம் புரிய வெச்சிருக்கு!"- அக்‌ஷரா ஹாசன்

அக்‌ஷரா ஹாசன்

" 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்துல நான் ரொம்ப அப்பாவியான கேரக்டர். முதல் முறையா காமெடி பண்ணியிருக்கேன். மாடர்ன் அப்புறம் நம்ம ஊர் பொண்ணுன்னு ரெண்டு விதமான ரோல் இதுல" - அக்‌ஷரா ஹாசன்.

Published:Updated:

"நான் எந்த மாதிரியான ஒரு நடிகை ஆகணும்னு இந்தப் படம் புரிய வெச்சிருக்கு!"- அக்‌ஷரா ஹாசன்

" 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்துல நான் ரொம்ப அப்பாவியான கேரக்டர். முதல் முறையா காமெடி பண்ணியிருக்கேன். மாடர்ன் அப்புறம் நம்ம ஊர் பொண்ணுன்னு ரெண்டு விதமான ரோல் இதுல" - அக்‌ஷரா ஹாசன்.

அக்‌ஷரா ஹாசன்
அக்‌ஷரா ஹாசன் நடித்திருக்கும் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' நாளை அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. தமிழில் 'கடாரம் கொண்டான்', 'விவேகம்', இந்தியில் 'ஷமிதாப்' என நடித்திருக்கும் அக்‌ஷரா, இந்தப் படம் குறித்து நம்மிடம் பேசினார்.

'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' - டைட்டில், போஸ்டர், டிரெய்லர்னு எல்லாமே சுவாரஸ்யமாவும் இருக்கு. ரொம்ப போல்டான படமாவும் தெரியுதே...

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

"இந்தப் படத்தோட கதையைக் கேட்டப்போ ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. ஏன்னா, இந்த மாதிரி கதையை பெருசா யாரும் பண்ணினதில்லை. ரொம்ப ஸ்ட்ராங்கான ஸ்க்ரிப்ட். அதுமட்டுமல்லாம, கதையை காமெடியாவும் கொண்டு போயிருக்காங்க. பெரிய ஒரு மெசேஜ் இருக்கு. ரொம்ப சென்சிட்டிவா இதை ஹேண்டில் பண்ணியிருக்காங்க. இந்தப் படத்தோட கேரக்டரோட நான் ரொம்ப கனெக்ட் ஆகியிருக்கேன். ஏன்னா, எல்லாரும் லைப்ல இந்த மாதிரி நிறைய விஷயங்களைத் தாண்டி வந்திருக்கோம். வாழ்க்கையோட சில தருணங்கள்கூட கனெக்ட் பண்ணி நடிச்சிருக்கேன்."

படத்துல உங்களோட ரோல் பத்தி...

"படத்துல நான் ரொம்ப அப்பாவியான கேரக்டர். முதல் முறையா காமெடி பண்ணியிருக்கேன். அதுவே ரொம்ப சவாலா இருந்தது. டைரக்டர் என்ன சொன்னரோ அதை பாலோ பண்ணினேன். டைரக்டர் மைண்ட்ல இருக்குறதை மட்டும் ரெஃபரன்ஸ் எடுத்துக்கிட்டு அதை வெச்சு வொர்க் பண்ணியிருக்கேன். மாடர்ன், அப்புறம் நம்ம ஊர் பொண்ணுன்னு ரெண்டு விதமான ரோல் இதுல."

'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' அக்‌ஷரா ஹாசன்
'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' அக்‌ஷரா ஹாசன்

முழு நேர நடிகையா நீங்க மாறுவதற்கு வீட்ல இருந்து சப்போர்ட் இருக்கா? அக்கா, அப்பாகிட்ட டிப்ஸ்...

"வீட்டைப் பொறுத்தவரைக்கும் அம்மா, அக்கா, அப்பான்னு எல்லார்கிட்டயும் வெளிப்படையா பேசுவேன். யார் ஃப்ரீயா இருக்காங்களோ அவங்ககிட்ட பேசுவேன். ஒரு நடிகையா இந்தப் படமே எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்தது. நான் எந்த மாதிரியான ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆகணும்னு புரிய வெச்சிருக்கு. ஒரு நடிகையா எனக்கு நம்பிக்கை கூடியிருக்கு."

இந்தப் படத்துல உஷா உதுப் இருக்காங்க. அவங்களோட நடிச்ச அனுபவம் பற்றிச் சொல்லுங்க...

"படத்துல உஷா உதுப் மேம் எனக்கு பாட்டியா நடிச்சிருக்காங்க. என்னோட அஞ்சு வயசுல உஷா மேமை முதல் முறையா பார்த்தேன். அதனால எனக்கு ஒரு ஸ்பெஷல் பாண்ட் அவங்ககிட்ட இருக்கு. ஷூட்டிங் டைம்ல ரொம்ப சந்தோஷமா இருந்தேன். பேமிலி மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்க கூட வேலை செஞ்சது எனக்குப் பெரிய அனுபவம். அவங்க ஒரு நடிகையா இந்த வயசுலயும் கத்துக்க ரெடியா இருக்காங்க. ரொம்ப கூலா இருந்தாங்க. வாழ்க்கைல சினிமா பத்தி இன்னும் படிச்சிட்டு இருக்காங்க. ரொம்ப மேஜிக்கான பவர்புல் லேடி உஷா மேம்."

அக்‌ஷரா ஹாசன், உஷா உதுப்
அக்‌ஷரா ஹாசன், உஷா உதுப்

உங்க வீட்ல எல்லாரும் படம் பார்த்துட்டாங்களா? அவங்க ரிவ்யூ என்ன?

"இந்தப் படத்தை இன்னும் எங்க குடும்பத்துல யாரும் பார்க்கல. ஓ.டி.டி தளத்துல ரிலீஸாகுறதனால எல்லாரும் ஒரே நேரத்துல பார்க்கலாம்னு உங்களை மாதிரியே வெயிட் பண்ணிட்டிருக்கோம்."