கட்டுரைகள்
Published:Updated:

“வாழ்க்கையை இணைக்கும் புள்ளி காகம்!”

காகங்கள் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
காகங்கள் படத்தில்...

எல்லா உயிரினங்களின் அடிப்படை உணர்வுகளான பசி, காமம், குரோதம், மரணம், பயம்னு ஆதார இச்சைகளைத்தான் கருப்பொருளா எடுத்துக்கறேன்.

‘காக்கா முட்டை’ படத்தின் இயல்பான, எளிமையான வசனத்திற்காக அப்போது விகடன் விருதை வென்ற ஆனந்த் அண்ணாமலை, இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். கிஷோர், விதார்த், லிஜோமோள் ஜோஸ் நடிப்பில் ‘காகங்கள்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு இடைவெளியில் ஆனந்தைச் சந்தித்தேன்.

காகங்கள் படத்தில்...
காகங்கள் படத்தில்...
காகங்கள் படத்தில்...
காகங்கள் படத்தில்...

‘‘காகங்கள் செல்லப் பறவைகள் அல்ல. ஆனாலும் சென்னை நகரம் முழுக்க சுதந்திரமாகத் திரியும் பறவைகளா இருக்கு. மதம், இனம், மொழி கடந்தும் காகங்கள் குறித்த ஒரு நம்பிக்கை எல்லோரிடமுமே இருக்கு. உதாரணமா, காகம் ஒருத்தருக்கு காலஞ்சென்ற அவரின் அப்பாவா இருக்கு. இன்னொருத்தருக்கு சனி பகவான் வாகனம். இப்படி எல்லாக் கலாசாரத்திலும் காகம் சம்பந்தப்பட்ட வெவ்வேறு புரிதல்கள் இருக்கு. புத்திக்கூர்மையுள்ள பறவையாகவும் பார்க்கப்படுது. காகத்துக்கு உணவு வச்சு, அதை அது எடுக்கலைன்னா, அது சம்பந்தப்பட்ட நம்பிக்கைகள்வேற இருக்கு. இப்படியான காகத்தை மையக் கதாபாத்திரமாக வச்சு, இந்தக் கதையை எழுதியிருக்கேன்...’’ ஆனந்தமாகப் பேசுகிறார் ஆனந்த் அண்ணாமலை.

காகங்கள் படத்தில்...
காகங்கள் படத்தில்...
யோகிபாபு
யோகிபாபு

‘‘மணிகண்டனின் முதல் படமான ‘காக்கா முட்டை’ தலைப்பைப்போல நீங்களும் சென்டிமென்ட்டா ‘காகங்கள்’ எனத் தலைப்பு வைத்தீர்களா?’’

‘‘காகமும் ஒரு கதாபாத்திரம் என்பதால், பொருத்தமான தலைப்பா இருந்தது, வச்சிட்டேன். எல்லா உயிரினங்களின் அடிப்படை உணர்வுகளான பசி, காமம், குரோதம், மரணம், பயம்னு ஆதார இச்சைகளைத்தான் கருப்பொருளா எடுத்துக்கறேன். பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவே இருக்கும் வாழ்க்கைச் சிக்கல்கள், நம்பிக்கைகளைத்தான் ‘காகங்கள்’ல சொல்லி யிருக்கேன். படத்துல கிஷோர், விதார்த், லிஜோ, குருசோமசுந்தரம், யோகிபாபு, இளவரசு, கிட்டி, ஷாலி நிவேகாஸ் என பலர் இருக்கின்றனர். விதார்த்தும், லிஜோவும் கிறிஸ்தவ தம்பதி. யோகிபாபு முருகபக்தர், கிஷோர் விஞ்ஞானப் பின்புலம் கொண்டவர். குருசோமசுந்தரம் ஒரு ஞானிகிட்ட சிஷ்யரா இருக்கார். இளவரசு, சாய்பாபாவின் பக்தர். இவங்க எல்லோரது வாழ்க்கையையும் இணைக்கற புள்ளியாகக் காகம் இருக்குது.

காகங்கள் படத்தில்...
காகங்கள் படத்தில்...
காகங்கள் படத்தில்...
காகங்கள் படத்தில்...

யோகிபாபுவை ‘காக்கா முட்டை’யில் இருந்தே தெரியும். இயல்பிலேயே அவர் முருக பக்தர். படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரம்னு நெகிழ்ந்து பண்ணியிருக்கார். ஒவ்வொருத்தர் கிட்டேயும் அரை மணி நேரம்தான் கதை சொல்லியிருப்பேன். ஆனா, கதையைக் கேட்டதும், அவங்களுக்கு நேர்ந்த தனிப்பட்ட அனுபவங்களை என்கிட்ட நாலு மணிநேரமாவது பகிர்ந்துகிட்டாங்க. இதுல கிஷோர்தான், கதையைக் கேட்டுட்டு அமைதியானார். மூணு தடவையாவது கதையைக் கேட்டுப்பார். அதன்பிறகு, ஸ்பாட்டில் அவ்ளோ உள்வாங்கி நடிச்சிருக்கார்.

ஒளிப்பதிவு கார்த்திக் கணேஷ். இந்தியில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். எம்.எஸ்.கிருஷ்ணாவின் இசை படத்திற்கு பலமா இருக்கும். திருஞானசம்பந்தரின் ‘சடையா யெனுமால்’ என்ற தேவாரப் பாடலை அடியொற்றி ‘அலைந்தே கலைந்தே அழுதேன், தொழுதேன்’ பாடலையும், பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலை ஒட்டி ‘தனிமைக் காட்டிலே தவியாய்த் தவித்தேன்’ பாடலையும் எழுதியிருக்கேன்.’’

ஆனந்த், யோகிபாபு
ஆனந்த், யோகிபாபு

‘‘நீங்க சினிமாவுக்கு வந்தது எப்படி?’’

‘‘என் சொந்த ஊர், மயிலாடுதுறை. கெமிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, ஆப்பிரிக்காவில் உள்ள மலாவியில் வேலை பார்த்தேன். என்னோட சிந்தனைகளை, கதைகளை, மலாவியில் உள்ள விஷயங்களை எல்லாம் இணையதள பத்திரிகை ஒன்றில் ‘மலாவி ஆனந்த்’ என்ற பெயரில் எழுதிட்டிருந்தேன். அந்த எழுத்துதான் பாலுமகேந்திரா சார், மணிகண்டன் உட்பட இயக்குநர்கள் பலரையும் அறிமுகம் செய்து வைத்தது. மணிகண்டனுக்கு என் எழுத்து பிடித்துப்போய்விட, ‘காக்கா முட்டை’யில் வசனம் எழுதினேன். அதன்பின், அவர் இயக்கிய ‘குற்றமே தண்டனை’க்குக் கதை எழுதினேன். இப்போது ‘காகங்கள்’ என்னை இயக்குநராக்கியிருக்கிறது’’ - சிரிக்கிறார் ஆனந்த்.