ஏ.ஆர்.அமீன் பாடகராக மீண்டும் தன் தந்தையின் இசையில் பாடியுள்ளார்.
`மெட்ராஸ் கிக்' என்ற சுயாதின பாடல் ஆல்பத்தின் முதல் சீசன் பலருக்கும் பிடித்தமான பாடல்களைக் கொடுத்திருக்கிறது. இந்த வருடம் அவ்வளவு வரவேற்புக்குரிய பாடல்களாக அமையவில்லை என்ற கருத்து இருந்த போதிலும், புது புது கலைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த சீசன். சினிமா அல்லாத பாடல்களை யாரும் கேட்காத நிலையை மாற்ற ஒரு மேடையாக இருக்கும் மெட்ராஸ் கிக்கின் இந்த சீசனில் இறுதியாக வந்திருக்கும் பாடல் `சகோ'.
