Published:Updated:

``எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடுதான்"- வைரலாகும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டா வீடியோ!

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இசைஞானி இளையராஜாவுடன் எடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

``எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடுதான்"- வைரலாகும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டா வீடியோ!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இசைஞானி இளையராஜாவுடன் எடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இசைஞானி இளையராஜாவுடன் சென்னை விமான நிலையத்தில் எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இளையராஜாவுக்கு அருகில் ஏ.ஆர்.ரகுமான் அமர்ந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா அண்மையில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்த எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதேபோல் அண்மையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தார்.

இதனிடையே இருவரும் தங்களது வெளிநாட்டு பயணங்களை முடித்துவிட்டு சென்னை திரும்பும்போது விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது அப்போது ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவுடன் சென்னை விமான நிலையத்தில் எடுத்த வீடியோவைப் பகிர்ந்து, "நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடுதான்" என்று பதிவிட்டுள்ளார். புதாபெஸ்டிலிருந்து இளையராஜா, அமெரிக்கா, கனடாவிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்ட சில மணி நேரங்களிலே பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.