‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்து பிரபலமானவர் கார்த்திக். தற்போது ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கும், ‘மேயாத மான்’, ‘தேவ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அம்ருதா ஶ்ரீனிவாசனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்களின் புகைப்படம் சமூகவலைதள பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு பாடகி சுசித்ராவை கார்த்திக் திருமணம் செய்தார்.

பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். கார்த்திக் தொடர்ந்து ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். நீண்ட நாள் நண்பர்களான கார்த்திக் - அம்ருதா இருவருக்கும் இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது