Published:Updated:

Thalapathy 67: `Eagle' `Hunter' `குருதிப்புனல்' டைட்டில் எது; ரசிகர்கள் சொன்ன சாய்ஸ்!

'தளபதி 67'

‘தளபதி 67’ படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில் அப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும்? என்று சினிமா விகடன் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து கேட்டிருந்தோம்.

Published:Updated:

Thalapathy 67: `Eagle' `Hunter' `குருதிப்புனல்' டைட்டில் எது; ரசிகர்கள் சொன்ன சாய்ஸ்!

‘தளபதி 67’ படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில் அப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும்? என்று சினிமா விகடன் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து கேட்டிருந்தோம்.

'தளபதி 67'
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தளபதி 67’. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிக்கிறார். லோகேஷ்- அனிரூத் கூட்டணி தொடர 'தளபதி 67' திரைப்படத்திற்கும் இசையமைகிறார் இசையமைப்பாளர் அனிருத்.

எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்த படக்குழு சமீபத்தில் படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டிருந்தது.

தளபதி 67: விஜய், லோகேஷ்
தளபதி 67: விஜய், லோகேஷ்

லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்த பிலோமின் ராஜ் இப்படத்திற்கும் படத்தொகுப்பாளராக தொடர்கிறார். அதேபோல கைதி, விக்ரம் படங்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த அன்பறிவ் இப்படத்திற்கு ஆக்‌ஷன் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைதி ஆகியோர் படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது. அப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும்? என்று சினிமா விகடன் சமூக வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.

அதற்கு ரசிகர்கள் பலரும்  Eagle, Goat, Gangster, Hunter, Killer  கருடன், குருதிப் புனல் என்று பல்வேறு டைட்டில்களை பதிவிட்டிருக்கின்றனர். நீங்களும் 'தளபதி 67' படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை கமென்ட்டில் பதிவிடவும்