தமிழில் நடித்து வெளியானவை 3 படங்கள்தான் என்றாலும் அவற்றில் 2 ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகள். க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸால் தனக்கென ஒரு ரசிகப்படையை உருவாக்கியிருக்கும் ப்ரியங்கா மோகனுக்கு தனுஷ், ஜெயம் ரவி என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் பட வாய்ப்புகள். புன்னகை ஒளி வீசும் இந்த நட்சத்திரத்துக்கு அவள் விகடனின் `யூத் ஸ்டார்' விருது வழங்கப்பட்டது.

டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிற `கட்டா குஸ்தி' திரைப்படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவு மற்றும் நாயகன் விஷ்ணு விஷால் ஆகியோர் இவ்விருதினை வழங்க மேடையேறினர். நடனக்கலைஞர்கள் `ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டிதான்' என்கிற வைரல் பாடலுக்கு நடனமாடியபடியே பிரியங்கா மோகனை மேடையேற்றினர்.
விருதினைப் பெற்றுக்கொண்ட பிரியங்கா, வெள்ளி விழா கொண்டாடும் அவள் விகடனுக்கு வாழ்த்துகளும், விருதுக்கு நன்றியும் தெரிவித்தார்.
அவள் விருதுகள் நிகழ்வினைத் தொகுத்த சின்னத்திரைப் பிரபலங்களான தீபக் - நட்சத்திரா ஆகியோர் அவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்...
``டாக்டர் படத்துல சிவகார்த்திகேயன் உங்களைப் பொண்ணு பார்க்க வர்றப்போ நிறைய கேள்விகள் கேட்டீங்க. ரியல் லைஃப்ல என்னவெல்லாம் கேட்பீங்க?"
``நம்பிக்கையானவரா இருப்பாங்களா... ரெஸ்பெக்ட் பண்ணுவாங்களான்னு பார்ப்பேன். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கக்குறதுக்கு நோ சொல்லக்கூடாது" என்று ப்ரியங்கா சொல்லவே, விஷ்ணு விஷால் இடைமறித்து ``கல்யாணத்துக்கு முன்னால ஆமான்னுதான் சொல்லுவாங்க" எனச் சொல்லவே அரங்கில் கனத்த சிரிப்பலை எழுந்தது.

அடுத்ததாக, ஆம், இல்லை இரண்டில் ஒன்று சொல்லும்படியான கேள்விகளைக் கேட்டனர்.
Relationship Status Single -ஆ?
``யெஸ்"
Rugged Boy Ok - ஆ? தாடியெல்லம் வெச்சுக்கிட்டு?
``யெஸ்... தாடி வெச்சிருக்குற பசங்களைப் பிடிக்கும்"
நீங்க Party Girl- ஆ
``நோ"
First Bencher - ஆ?
``ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் பெஞ்ச்சர்... காலேஜ்ல அப்படியே பின்னாடி போயிட்டேன்".
Foodie-ஆ?
``நிறைய சாப்பிட மாட்டேன்... ஆனா, நிறைய எக்ஸ்ப்ளோர் பண்ணப் பிடிக்கும்" என அனைவரும் ரசிக்கும் விதமாக க்யூட் பதில்களைச் சொல்லி கைத்தட்டல்களை வாங்கினார்.