அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

பத்ரி #VikatanReview

பத்ரி #VikatanReview
பிரீமியம் ஸ்டோரி
News
பத்ரி #VikatanReview

அப்போவே ஸ்போர்ட்ஸ் படத்துல நடிச்சி மிரள வைச்சிட்டாருல்ல...!

ரசியல் கூட்டங்களில் பெருந்தலைகள் வந்துசேரும் வரையில் நேரம் கடத்த லோக்கல் பகுதி செயலாளர்கள் வாய்போன போக்கில் எதையோ பேசிக்கொண்டிருப்பார்கள். நடுநடுவே சிரிப்புத் துளிகளைத் தெளிப்பார்கள்! பத்ரியில் முதல் பாதி கிட்டத்தட்ட இந்த ரகம்தான்! கனமான கதையும் அழுத்தமான சம்பவங்களும் பின்பாதியில். காதல், மோதல், கல்லூரி கலாட்டாக்கள் என்று முன்பாதி சும்மா ஜாலி டைம் பாஸ்! அப்பா கிட்டிக்குக் கட்டுப்படாமல், படிப்பிலும் கவனம் செலுத்தாமல் ‘பஞ்சபாண்டவ’ உதவாக்கரை நண்பர்களுடன் வெட்டியாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் விஜய். பணக்கார வீட்டுப் பெண் மோனலுடன் காதல் வயப்பட்டு, அதற்கு தோதாக தன்னையும் பசை மிக்க தொழிலதிபர் ஒருவரின் மகன் என்று ரீல் விடுவதிலேயே பல ரீல்கள் காலி! 

பத்ரி #VikatanReview
பத்ரி #VikatanReview

கார் கராஜின் உரிமையாளரின் மகளான எதிர் வீட்டுப் பெண் பூமிகாவுடன் (தமிழுக்குப் புதுசு) நட்புடன் பழகி, தேவைப்படும் போதெல்லாம் அவரிடமிருந்து பணம் கறந்து, ரிப்பேருக்கு வரும் கார்களையும் வாங்கிச் செல்கிறார் விஜய். இவர் மீது பூமிகாவுக்கு எக்கச்சக்க காதல்! காதலர் தினத்தன்று ஒற்றை ரோஜா கொடுத்து ‘ஐ லவ் யூ’ சொல்லி, மோதிரம் அணிவிக்கத் திட்டமிடும் விஜய், அதே இடத்துக்கு பூமிகாவையும் வரச் சொல்லி ‘ஒத்திகை’ பார்க்க. அதை நிஜம் என்று நம்பும் பூமிகா, பின்னர் உண்மை தெரிந்து உடைந்துபோகுமிடம் 'குக் குச் ஹோதா ஹை’ விஷயமென்றாலும், டச்சிங்! மோனலிடமும் பூமிகாவின் அப்பாவிடமும் விஜய்யின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிவிட்ட பிறகு அவரை வீட்டை விட்டே துரத்திவிடுகிறார் கிட்டி. அதைத் தொடர்ந்து கோயில் பிராகாரத்தில் பூமிகா செய்யும் ‘வாழ்க்கை உபதேசங்கள்’ விஜய்க்கு மட்டுமில்லாமல், படத்துக்கும் திருப்புமுனை!

பத்ரி #VikatanReview
பத்ரி #VikatanReview

‘கிக் பாக்ஸில்’ போட்டியில் அண்ணன் ரியாஸ்கான் கலந்து கொள்ள முடியாத நிலையில், தம்பி விஜய் வெறித்தனமாகப் பயிற்சி மேற்கொள்வதும், போட்டியில் கலந்துகொண்டு கலக்கி, அப்பாவைக் கண்கலங்க வைத்து, பூமிகாவுடன் இணைவதுமான இறுதிக் கட்டங்கள் சத்தானவை! (டைரக்ஷன் பி.ஏ.அருண்பிரசாத்)பூமிகாவைவிட நடிப்பில் ரொம்பவும் பின்தங்கியிருக்கிறார் மோனல்! காதலில் பூரிக்கும்போதும், கோபத்தில் வெடிக்கும்போதும் சிம்ரனின் தங்கையான மோனலுக்கு ஒரே மாதிரியான சவசவ முகபாவம்! ஈவ்டீஸிங் மாதிரியான சில்மிஷ காமெடிகளை வைத்து விவேக் அண்ட் கோ விளையாடுகிற இடங்கள் எரிச்சலைக் கிளப்புகின்றன.

பத்ரி #VikatanReview
பத்ரி #VikatanReview

பாக்ஸிங் போட்டிக்குத் தயாராக விஜய் பயிற்சி எடுக்கும் பாடல் காட்சி பிரமாதம். நொடிக்கு நொடி ஓடுவதும் ஓடுகள், சட்டிகள் மற்றும் பானைகளை உடைப்பதுமாக சரியான ஆக்ஷன் பாட்டு (இசை: ரமணா கோகுல்). குப்புறப் படுத்துக் கொண்டு தன் கையில் கார் டயர்களை அவர் ஏறச் செய்யும்போது, படம் பார்ப்பவர்களுக்கு கை வலிக்கிறது. துணிச்சலுக்கு கங்கிராட்ஸ் விஜய்!

- விகடன் விமர்சனக்குழு

(22.04.2001 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)