வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

'தனுஷ்..தனுஷ்' என்ற ரசிகர்களின் ஆரவரத்துடன் தொடங்கியது வாத்தி திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா. இவ்விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, "என் இனிய தமிழ் மக்களே.. .என் இனிய தமிழ் மகன் வேட்டி சட்டையோட வந்து இருக்கான். ஐ லவ் ஹிம்.. கடவுளின் குழந்தை தனுஷ். நான் 100 கலைஞர்களுக்குச் சொல்லி கொடுத்தவன். பெண், ஆண் என பல பேர். அவன் நடந்து வரும்போது என்னால நம்ம முடியல. எப்படி டா இப்படி ஒரு ஜீவ சக்தி. அவரது பெற்றோரான கஸ்தூரி ராஜா மற்றும் அவரது மனைவிக்கு நன்றி. தனுஷ் நீ மிரட்டிட டா நீ ஜெயிப்ப... தனுஷ் - நீ வச்ச குறி தப்பாது. உலகத்தை சுருட்டி கைல வச்சுருக்க. நம்ம பையன் எவனாச்சும் ஹாலிவுட் போயிருக்கானா... தனுஷை ஒரு ஆர்ட்டிஸ்டாக பார்க்கிறோம். அவன் மனிதன். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தது என்னுடைய அனுபவத்திற்காக அல்ல. என் மேல் வைத்த பாசத்திற்காகத் தான். ஜி.வி... என் புள்ள படல்கள் போட்டு இருக்கான் பாரு அய்யோ" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.