கட்டுரைகள்
Published:Updated:

“மனதோட வெளிச்சம்தான் மானுட வெளிச்சம்!”

வடக்கன் படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
வடக்கன் படத்தில்

‘இன்னைக்கு எல்லா இடத்திலும் வடக்கத்தியர்களைக் காண்பது சாதாரணமாக இருக்கு. எங்க ஊருக்குப் பக்கத்தில்கூட ஒரு மில்லில் வேலை பார்க்கிறவர்களில் அநேகம் பேர் வடக்கே இருந்து வந்தவங்கதான்

``இந்த ‘வடக்கன்' படத்தின் கதை சமகாலத்தில் நடக்கிறதுதான். ஒரு நல்ல படம், பார்க்கிற அனுபவத்தோடு முடிஞ்சிடக் கூடாது. அது பார்த்தவரின் மனதில் தொடர்ந்து வளரணும். இந்தக் கதையை எழுதி முடிஞ்சதும் மனசில் தங்கிடுச்சு. பக்குவமாக ஒரு நல்ல படைப்பாக எழுந்து நின்றது. எனக்கு படத்தில் மண்ணின் வாசமும், மனிதனின் சாயலும் இருக்கணும். சினிமா என்பது ஒரு கலை. கலைகள்தான் மனித உணர்வுகளைப் பக்குவப்படுத்தும். என்னோட ஏக்கம் என்னன்னா, எப்பவும் இங்கே மனுஷத் தன்மை போயிடக் கூடாது. ரசனை கெடக்கூடாது. நெஞ்சில் ஈரம் குறைந்திடக் கூடாது. இத்தனை நாள் கழிச்சு படம் செய்யும்போது அப்படிப்பட்ட படங்களைத்தான் என் மனம் விரும்பியது. உண்மையைச் சொல்லும்போது அதன் விளிம்பு வரை சென்று எட்டிப்பார்க்கும் ஒரு முனைப்பு எனக்கு எப்போதும் உண்டு. சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தை ஒரு சமூக மனிதனாக மனித உணர்வுகள் வழியே பார்த்திருக்கிறேன். அதையும் எளிய மனிதர்களைக் கொண்டு வழி நடத்தியிருக்கேன். சினிமா ஒரு தொழிலாக, வியாபாரமாக இருந்தாலும், வேடிக்கைகளில் ஈடுபடும் எண்ணம் என்னிடம் இல்லை. இங்கே சொல்லவேண்டியதை, சொல்லாமலிருப்பதை, என் வரையிலாவது சொல்லலாம் என்பதன் வடிவமே ‘வடக்கன்' திரைப்படம்'' - தெளிவாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கர் சக்தி. பத்திரிகையாளராகவும், சிறுகதை ஆசிரியராகவும், திரை எழுத்தாளராகவும் அறியப்பட்டவர்.

பாஸ்கர் சக்தி
பாஸ்கர் சக்தி

`` ‘வடக்கன்' உங்கள் கனவுப்படைப்பாக இருக்கும் போலிருக்கே...’’

‘‘இன்னைக்கு எல்லா இடத்திலும் வடக்கத்தியர்களைக் காண்பது சாதாரணமாக இருக்கு. எங்க ஊருக்குப் பக்கத்தில்கூட ஒரு மில்லில் வேலை பார்க்கிறவர்களில் அநேகம் பேர் வடக்கே இருந்து வந்தவங்கதான். ஒரு பெரிய சமூகமாக அவங்க நம்மகிட்ட வேலை பார்க்க வந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் அவங்களோட நமக்கு ஒரு முரண் இருந்துக்கிட்டே இருக்கு. இனம்புரியாத சினம் வருது. இதை அரசியலாக, ஊடுருவலாக, நம்ம வேலைவாய்ப்பைக் குறைக்கிறவிதமாக பார்க்கிறாங்க. இதை ஒரு கலைஞனாக, கிரியேட்டராக எப்படி அணுகுவது என்று இதில் முயற்சி பண்ணிப் பார்த்திருக்கேன். உணர்வுகளைக் கடத்துவது முக்கியம். எழுத்தாளனாக இருப்பதால் ஒரு சீன் எழுதினாலே, அதன் ரிசல்ட் உடனே எனக்குத் தெரிந்துவிடுகிறது.

எதைச் செய்கிறோம் என்பதில் தெளிவாக இருந்தேன். அத்தனை அபத்தங்களையும் அடிச்சு நொறுக்கி அன்பையும் அக்கறையையும் முன்வைக்கிற படம். எளிய மனிதர்களை வச்சு அதை உங்களுக்கு உணர்த்தும் இந்த ‘வடக்கன்.’ மனதோட வெளிச்சம்தான் மானுட வெளிச்சம்னு இன்னமும் நம்புறேன்.

வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்

ஒரு சினிமாங்கிறது இரண்டரை மணி நேரம்தான். ஆனால் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம். ‘வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா'ங்கற விட்டோரியா டிஸிகாவோட கோட் எவ்வளவு உண்மை. என்னோட சிறுகதைகளில் சீரியஸான விஷயத்தையும் காமெடியாகச் சொல்லிப் பார்க்கிற ஸ்டைல் இருக்கும். அதற்கான ஸ்கிரிப்ட் அமைந்த பிறகு அப்படியே எழுதிட்டேன். நகைச்சுவை எங்கெல்லாம் இருக்கோ அங்கே மனிதம் வந்து அப்படியே படுத்திருக்கும். சாப்ளினைவிட வாழ்க்கையின் அவலங்களை யாரும் இங்கே சொல்லிடலை. அதையும் மனதில் வச்சிருக்கேன்.''

வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்

``எல்லோரும் புதுமுகமாகவே இருக்காங்க..!’’

‘‘மீடியமாக இருக்கிற ஹீரோக்களை வைத்துப் பண்ணலாமேன்னு நண்பர்கள் சொன்னாங்க. நான் தான் கேரக்டரின் சுதந்திரத்திற்கு இடையூறாக இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அவர்களுக்காக கேரக்டர்களின் ஒரிஜினாலிட்டி மாறுமோன்னு எண்ணம் வந்துவிட்டது. நிறைய தேடி ஞாநியின் பரீக்‌ஷாவிலும், கூத்துப்பட்டறையிலும் இருந்த குங்குமராஜும், பாரதிராஜாவின் ‘தெக்கித்திப் பொண்ணு' தொடரில் நடித்திருந்த வைர மாலாவும் இதில் முத்தையா, செல்லம்மாவாக வருகிறார்கள். குங்குமராஜின் நடிப்பைப் பார்த்தவுடனேயே அவர் அசாதாரணமான கலைஞன்னு தெரிஞ்சுபோச்சு. நம்ம ஊரில் பார்க்கிற மாதிரி ஒரு பொண்ணு வேணும். கேரளா, மும்பைன்னு போனால் நம்ம ஊர் வார்த்தைகளை ரத்தமும் சதையுமாக அவர்களால் சொல்ல முடியாது. பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா ஒரு அருமையான ரோலில் வருகிறார். அவரோட இடம் பேசப்பட்டு நினைவில் வைக்கப்படும். இந்திக்காரர் களாக பர்வேஸ், சமீரா நடிக்கிறார்கள்.''

வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்
வடக்கன் படத்தில்

``பாடல்கள் நல்லா வந்திருக்கு...’’

‘‘ரமேஷ் வைத்யாவே மூன்று பாடல்களையும் எழுதினார். இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஜனனி சினிமாவுக்குப் புதிதே தவிர இசையுலகில் பிரபலமானவர். இசையின் அத்தனை விதங்களையும் கற்றுத் தேர்ந்தவர். வார்த்தைகளின் மீது ஏறி நிற்காமல் இசை வருது. தேனி ஈஸ்வர்தான் கேமராமேன். இன்னைக்கு தமிழ், மலையாளம் இரண்டிலும் கொண்டாடப்படுகிற வித்தைக்காரர். எனக்கு நண்பனும்கூட! கூடவே பயணித்ததில் ‘நானே ஒளிப்பதிவு செய்கிறேன்' என ஆர்வமாக வந்தார். அவர் வந்ததும் படத்திற்கு இன்னும் வெளிச்சம் கிடைத்தது. எடிட்டராக நாகூரானின் உழைப்பு பிரமாதம். படத்தை மனமுவந்து தயாரித்த டிஸ்கவரி வேடியப்பனுக்கு நன்றி. ஸிங் சவுண்ட் என்ற நேரடி ஒலிப்பதிவை ராஜேஷ் படத்தில் வடிவமைத்திருக்கிறார். சுவாரஸ்யமான வடக்கன் இருக்கும். ஒரு வார்த்தையாக இருந்தாலும் ‘சுள்'ளுனு தைக்கிற வீரியமும் முதல் அடியிலிருந்து கடைசி வரை துள்ளலாக ஓடும் கதையோட்டமும் எல்லோருக்குமே பிடிக்கும். இப்ப ஓ.டி.டி வரைக்கும் வந்து சமகாலப் பிரச்னைகளை எடுத்து வைக்கலாம்னு வாசல் திறந்தாச்சு. சில விஷயங்களை உணர்வோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என நம்பிக்கை வந்துவிட்டது.''