
முதல்ல க்ராஃப்ட் தெரிஞ்சுக்கணும், அப்புறம் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். இயக்குநர் விஜய் அண்ணாவே மாமாவுடைய யூனிவர்சிட்டியிலதான் படிச்சார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் ‘ஜோஷுவா இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் வருண். ஏற்கெனவே, சில படங்களில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த வருண், சமீபமாக நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும்கூட. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் உறவினர்.
``கெளதம் மேனன் இயக்கத்துல ஹீரோவா நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?’’
‘`இது கெளதம் சார் படம்னு எனக்கு முதல்ல தெரியாது. என் மாமா ஐசரி கணேஷ் ஒரு நாள் என்கிட்ட ‘ஒரு படத்துக்கான போட்டோஷூட் பண்ணணும்டா, உடம்பைக் குறைச்சு ஃபிட்டா இரு’ன்னு சொன்னார். உடம்பைக் குறைச்சுட்டு போட்டோஷூட்டுக்குப் போன பிறகுதான் கெளதம் மேனன் சார் படம்னு தெரிஞ்சது. எனக்கு செம சர்ப்ரைஸ். மாமாவும் கெளதம் சாரும் அதுக்கு முன்னாடியே எல்லாம் பேசியிருக்காங்க. என்னுடைய ஷோ ரீலும் சார் பார்த்திருக்கார்னு அப்போதான் தெரிஞ்சது. போட்டோஷூட்டுக்குப் போனேன். ஆனா, லுக் டெஸ்ட் பண்ணி, சின்னச்சின்ன ஷாட்ஸ் எடுத்து படத்துடைய ஃபீல் எப்படி இருக்குன்னு பார்த்தாங்க. படம் முழுக்க ஆக்ஷன்தான். ஆக்ஷன் சீக்வென்ஸ்ல இப்படியான பன்ச், கிக் இருக்கணும், இங்கிருந்து விழுந்து இப்படி எழுந்து நின்னு பார்க்கணும்னு அப்படியே எழுதி வெச்சிருப்பார். சிலர் ஸ்டன்ட் கோரியோகிராபர்கிட்ட சொல்லிட்டு அவங்ககிட்ட விட்டுடுவாங்க. ஆனா, இவரே ஆக்ஷன் கோரியோகி ராபி எழுதிடுவார். அதைப் படிக்கும்போதே நமக்குள்ள விஷுவல் வந்திடும். எல்லா சீனையும் நடிச்சுக் காட்டுவார். அவர் பண்றதை அப்படியே பண்ணிட்டாலே போதும். ஹீரோயினைக் கடத்த நிறைய பேர் முயற்சி பண்ணுவாங்க. அவங்களை கடத்தவிடாமல் ஒரு பாடி கார்டா இருந்து அவங்களை எப்படிப் பாதுகாக்குறேங்கிறதுதான் என்னுடைய கேரக்டர். ராஹி, கிருஷ்ணா ப்ரதர், டிடின்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. என்னை பாரிஸுக்கு அனுப்பி அங்கிருக்கும் ஸ்டன்ட் கோரியோகிராபர் யானிக் பென்கிட்ட ஸ்டன்ட் ட்ரெயினிங் எடுத்துக்கச் சொன்னார் கெளதம் சார். அவர்தான் ‘தி ஃபேமிலி மேன்’ சீரிஸுக்காக சமந்தாவை ட்ரெய்ன் பண்ணுனவர். அங்கேயே நாலு மாசம் தங்கியிருந்து மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்கிட்டு வந்தேன். பயங்கரமான அனுபவமா இருந்தது. படத்தைப் பெரிய ஸ்க்ரீன்ல பார்க்க ஆவலா இருக்கேன்.’’


`` ‘தலைவா’ படத்துல உதவி இயக்குநராகவும் நடிகராகவும் வேலை செஞ்சிருக்கீங்க. முதல் படமே விஜய்கூட... எப்படியிருந்தது?’’
“முதல்ல க்ராஃப்ட் தெரிஞ்சுக்கணும், அப்புறம் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். இயக்குநர் விஜய் அண்ணாவே மாமாவுடைய யூனிவர்சிட்டியிலதான் படிச்சார். அதனால, மாமா மூலமா எனக்கு நல்லா தெரியும். அப்படிதான் ‘தலைவா’ படத்துல அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்தேன். இன்னும் சொல்லணும்னா, விஜய் சார் எப்படி நடிக்கிறார்னு பார்க்கணும்னு ஆசையா இருந்தது. ஆஸ்திரேலியாவுல ஷூட்டிங். திடீர்னு ஒரு நாள் இயக்குநர் விஜய் அண்ணா என்கிட்ட, ‘நீ நடிக்கணும்னுதானே ஆசைப்பட்ட? இதுல ஒரு கேரக்டர் இருக்கு, பண்ணு’ன்னு சொன்னார். நான் டான்ஸும் கத்திருந்தேன். அப்படியே அந்தக் கேரக்டர்ல நடிச்சுட்டு அசிஸ்டென்ட் டைரக்டராவும் வேலை செஞ்சேன்.’’
``பிக்பாஸ் வீட்டுக்குப் போயிட்டு வந்த பிறகு, உங்ககிட்ட என்னவெல்லாம் மாறியிருக்கு?’’
‘`நான் ரொம்ப ஜாலியான நபர். மண்டைய ஒடச்சுக்கிட்டு யோசிச்சு, தேவையில்லாம டென்ஷனாகிக்கலை. இது ஒரு கேம். அதுக்காகத்தான் எல்லாம் பண்றாங்கன்னு எனக்குள்ள நல்லா பதிஞ்சிடுச்சு. அதனால, நான் எப்போவும் போல ஜாலியாத்தான் இருந்தேன். அக்ஷரான்னு நல்ல பிரெண்ட் பிக்பாஸ் மூலமா கிடைச்சிருக்காங்க.’’
``பிக்பாஸ் போயிட்டு வந்த பிறகு, ஏதாவது படங்கள் கமிட்டானீங்களா?’’
‘`நிறைய கதைகள் கேட்டுட்டு இருக்கேன். ரெண்டு படங்கள் ஓகே ஆகியிருக்கு. சீக்கிரம் அறிவிப்பு வரும்.’’
`` ‘சினிமாப் பின்னணி இருந்ததால ஈஸியா வந்துட்டார்’னு சொல்லிடுவாங்க. ஆனா, அதுல இருக்கும் சவால் என்ன?’’
“கார் ஓட்ட கார் வெச்சிருந்தால் மட்டும் போதுமா? ஓட்டத் தெரிஞ்சிருக்கணும். என்னைக்கும் திறமையும் உழைப்பும்தான் ஜெயிக்கும். நான் நினைச்சிருந்தால், எப்போவே ஹீரோவா நடிச்சிருக்கலாம். ஆனா, நம்ம முறைப்படி க்ராஃப் கத்துக்கிட்டு படிப்படியா வரணும்னுதான், ‘தலைவா’, பிரபுதேவா அண்ணன்கிட்ட ‘ஆக்ஷன் ஜாக்சன்’, ‘ஆர் ராஜ்குமார்’னு ரெண்டு பாலிவுட் படங்கள்ல அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை செஞ்சேன். ‘வனமகன்’, ‘போகன்’, ‘சீறு’ மாதிரியான சில படங்கள்ல சின்னச்சின்ன கேரக்டர்கள் பண்ணினேன். ஒரு விஷயத்தைக் கத்துக்கிட்டுப் பண்ணும்போதுதான் சுவாரஸ்யமா இருக்கும்.’’