பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

ரஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
News
ரஷ்மிகா மந்தனா

ஆனால் ‘கணக்கெல்லாம் பக்காவா இருக்கு’ என்கிறது ராஷ்மிகா தரப்பு.

டோலிவுட் தலைப்புச் செய்திகளில் இப்போது அதிகம் அடிபடுவது ராஷ்மிகா மந்தனாதான். ‘தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் இவருக்குத்தான்’ என யாரோ கொளுத்திப்போட, அது இப்போது ஐ.டி ரெய்டில் வந்து நிற்கிறது. 29 மணிநேரம் நீடித்த ரெய்டின் முடிவில் கணக்கில் வராத பணம் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் ‘கணக்கெல்லாம் பக்காவா இருக்கு’ என்கிறது ராஷ்மிகா தரப்பு. மறுபக்கம், மகேஷ் பாபுவின் ஜோடியாய் அவர் நடித்த ‘சரிலேரு நீக்கெவரு’ படம் சூப்பர்டூப்பர் ஹிட். அடுத்து நிதின் ஜோடியாக தெலுங்கில் ஒருபடம், கார்த்தி ஜோடியாக தமிழில் ‘சுல்தான்’, கன்னடத்தில் ‘பொகரு’ என அவர் காலண்டர் முழுக்கப் படங்கள் நிரம்பி வழிகின்றன.

ரஷ்மிகா மந்தனா
ரஷ்மிகா மந்தனா

வெப் சீரிஸில் வரிசையாக `உள்ளேன் ஐயா' சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் பெரிய ஹீரோக்களும் ஹீரோயின்களும்! சமீபத்திய என்ட்ரி பல்லாவரத்துப் பேரழகி சமந்தா. அமேசான் ப்ரைமில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த `ஃபேமிலி மேன்' சீரிஸின் இரண்டாவது சீசனில் சமந்தாவுக்கு முக்கியமான ரோல். ``இந்த சீரிஸின் ஷூட்டிங்கில் ஒவ்வொரு நாளுமே நல்ல அனுபவமாக இருந்தது. என் கரியரில் இதுவரை செய்திடாத புது ரோல் இது’' என, தன் போர்ஷனை முடித்துவிட்டு இன்ஸ்டாவில் சென்டிமென்ட்டைப் பொழிந்திருக்கிறார் சமந்தா.

சமந்தா
சமந்தா