சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பன்முக பிறவிக் கலைஞன்!

எஸ்.பி.பி.
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.பி.பி.

முதலில் இந்தப் படத்தில் ‘மண்ணில் இந்தக் காதலின்றி’ பாட்டு இல்லை. அவர் பாடின ஹிட் பாடல்களுடைய முதல் வரிகளையெல்லாம் கலந்து ஒரு பாட்டு ரெடி பண்ணி ஷூட்டும் பண்ணிட்டோம்.

பாடகராக மட்டுமல்ல... நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பல துறைகளிலும் அழுத்தமாக முத்திரை பதித்தவர் எஸ்.பி.பி. ஒவ்வொரு துறையிலும் எஸ்.பி.பி-யின் சாதனைகளையும் அவருடனான அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள் அத்துறை சார்ந்த பிரபலங்கள்.

இயக்குநர் வஸந்த்

‘‘பாலசந்தர் சார் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் ஒரு கேமியோ ரோலில் எஸ்.பி.பி நடித்தார். அப்போ நான்தான் அவருக்கு வசனங்கள் சொல்லிக் கொடுப்பேன். என்கிட்ட எப்படி இயல்பா பேசிட்டு இருந்தாரோ, அதே மாதிரிதான் டேக்கிலும் பேசினார். அது எனக்குப் பிடிச்சிருந்துச்்சு. ‘கேளடி கண்மணி’க்காக அவர்கிட்ட போய்க் கேட்டப்போ ‘எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உனக்கு இது முதல் படம். சரியா போகலைன்னா அடுத்த படம் கிடைக்கிறதுல பிரச்னை வரும். நல்லா யோசி’ன்னு சொன்னார். அதுக்கப்புறமும் ‘நீங்கதான் நடிக்கணும்’னு உறுதியா நின்னேன்.

முதலில் இந்தப் படத்தில் ‘மண்ணில் இந்தக் காதலின்றி’ பாட்டு இல்லை. அவர் பாடின ஹிட் பாடல்களுடைய முதல் வரிகளையெல்லாம் கலந்து ஒரு பாட்டு ரெடி பண்ணி ஷூட்டும் பண்ணிட்டோம். ஆனால், எனக்கு அதில் முழுத் திருப்தி இல்லை. அதுக்கப்புறம் வந்த ஐடியாதான், மூச்சுவிடாமல் பாடுறது. ‘மூச்சுவிடாம முழுப் பாடலையும் உங்களால பாட முடியுமா’ன்னு எஸ்.பி.பி சார்கிட்ட கேட்டப்போ, ‘அப்போ யாரை வெச்சுப்பா படத்தை முடிப்பே?’ன்னு கேட்டார். ‘அஞ்சு நிமிஷமெல்லாம் யாராலும் மூச்சுவிடாம இருக்க முடியாதுப்பா’ன்னு அவர் சொன்னதுக்குப் பிறகுதான் சரணத்துல மட்டும் மூச்சுவிடாமல் பாடலாம்னு முடிவு பண்ணி அந்தப் பாட்டை எடுத்தோம்!”

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

பின்னணிப் பாடகர் மனோ

‘‘நான் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி ஐயா, சக்கரவர்த்தி சார்கிட்ட உதவியாளரா வேலை பார்த்த காலத்திலிருந்தே எஸ்.பி.பி அண்ணன் எனக்குப் பழக்கம். அவர் எப்படிப் பாடுறார், எப்படி எமோஷனை வெளிப் படுத்துறார்னு பார்த்துப் பார்த்துக் கத்துக்கிட்டவன் நான். எனக்குக் கல்யாணம் ஆகும்போது நான் உதவியாளரா இருந்தேன். அவர் வந்து சாட்சிக் கையெழுத்து போட்டதனாலதான், என்னை நம்பிப் பொண்ணே கொடுத்தாங்க. அதுமட்டுமல்ல... அவராலதான் இப்போ நான் பாடகனாக இருக்கேன்.

2020 ஜனவரியில் இளையராஜா சாரோட கச்சேரிக்காகக் கோயம்புத்தூர் போயிருந்தோம். இரவு 10 மணிக்கு அவரோட அறைக்குப் போனால், அடுத்த நாள் கச்சேரிக்கு பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தார், ‘என்னண்ணா நீங்களே ப்ராக்டிஸ் பண்ணலாமா?’ன்னு கேட்டேன், ‘இந்தப் பாட்டைப் பாடி ரொம்ப வருஷம் ஆச்சுடா. சரியா பாடலைன்னா, ‘எஸ்.பி.பி.க்கு வயசாகிடுச்சு’ன்னு சொல்லிடுவாங்கடா’ன்னு சிரிச்சார். இறக்குறதுக்கு 10 நாளுக்கு முன்னாடிகூட ‘நான் வீட்டுக்குப் போனதுக்குப் பிறகு எத்தனை நாள் கழிச்சி பாடப் பயிற்சி எடுத்துக்கலாம்’னு பேப்பர்ல எழுதிக் கேட்டிருக்கார். அவர் இறந்துட்டார்கிற செய்தியைக் கேட்டதுமே ரொம்ப உடைஞ்சிட்டேன். உடலைப் பார்க்கிறவரைக்கும் தைரியமா இருந்தேன். பார்த்ததும் ‘நாளைக்கு நம்ம அண்ணனைப் பார்க்க முடியாது’ன்னு நினைச்சப்போ என்னால துக்கத்தை கன்ட்ரோல் பண்ணமுடியலே.”

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

இசையமைப்பாளர் தேவா

“என் முதல் படத்தோட கம்போஸிங் 1983-ல் நடந்துச்சு. அதில் எஸ்.பி.பி சாரை பாடுறதுக்காகக் கேட்டேன். அப்போ தொடங்கி 2020, ஜனவரியில் நான் இசையமைத்த இயேசுநாதர் ஆல்பம் வரைக்கும் எனக்காகப் பல பாடல்களைப் பாடிக் கொடுத்திருக்கிறார். தேவான்னு ஒரு இசையமைப் பாளர் வெளியில தெரிஞ்சதுக்கு எஸ்.பி.பி சார் முக்கியமான காரணம். எஸ்.பி.பி சார் எப்படி ஒரு நல்ல பாடகரோ அதே அளவிற்கு நல்ல நடிகர்; நல்ல இசையமைப்பாளர். எவ்வளவு கஷ்டமான பாடலாக இருந்தாலும் 15 நிமிஷத்தில் கத்துக்குவார். பாடகராக மட்டும் இருக்கிற வங்களுக்கு இந்த வேகம் இருக்காது. இசையமைப்பாள ராகவும் இருக்கவங் களுக்குத்தான் இது முடியும். அதே மாதிரி, ஒரு பாட்டைக் கத்துக்கிட்டதுக்கு அப்புறம் அதில் என்னென்ன சங்கதிகள் சேர்க்கலாம்னு வொர்க் பண்ணுவார். ஒரு இசையமைப்பாளர் தன்னோட பாடல்களை எப்படி மெருக் கேற்றுவாரோ, அதே மாதிரி எஸ்.எஸ்.பி, பாடல்களை தன்னோட மேஜிக்கால அலங்கரிப்பார். அதே மாதிரி, ஒரு நடிகரா பாடல்களோட எமோஷனை தன்னோட குரலில் கொடுப்பார். திரையில் பாடப்போற கேரக்டரின் மனநிலை எப்படியிருக்கும்னு இயக்குநர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அதையும் தன்னோட குரல்ல வெளிப்படுத்துவார். குறிப்பா, ‘அவ்வை சண்முகி’ படத்துல ‘வேலை வேலை’ன்னு ஒரு பாட்டு பாடியிருக்கார். அது கமல் சார் லேடி கெட்டப் போட்டுட்டு எவ்வளவு பரபரப்பாக வேலை பார்க் கிறார்னு காட்டுற பாட்டு. அந்தப் பாட்டோட வீடியோவைப் பார்க்காமல், வெறும் பாட்டைக் கேட்டாலே நமக்கு அந்தப் பரபரப்பு தெரியும்.

40 படங்களுக்கு மேல் இசையமைச்சிருக்கார். ‘சிகரம்’ படத்துல தாஸ் அண்ணா பாடிய ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ பாட்டு இப்போ வரைக்கும் எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு.’’

தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்

‘`எஸ்.பி.பி சார்கிட்ட 50 கேரக்டர்களைக் கொடுத்து வித்தியாசமா டப்பிங் பேசுங்கன்னு சொன்னாலும், சிறப்பாச் செய்வார். அவருக்கு ‘தசாவதாரம்’ டப்பிங் எல்லாம் சாதாரணம். ஈஸியா பேசி முடிச்சிட்டார். எஸ்.பி.பி சார் ரொம்பப் பாசிட்டிவான மனிதர். எப்பவும் சிரிச்ச முகத்தோடவே இருப்பார். அவரைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையா இருக்கும். 100 கோடியில் ஒருத்தருக்குத்தான் இப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கும். ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கார். காலம் உள்ளவரைக்கும் அவரோட பாடல்கள் நிற்கும்.”

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

“ஆரம்பத்துல கமல் சாரோட படங்கள் தெலுங்கில் டப் ஆனா, மனோதான் டப்பிங் பேசுவார். ‘அவ்வை சண்முகி’, ‘தெனாலி’ படங்களோட தெலுங்கு விநியோக உரிமையை எஸ்.பி.பி சார் வாங்கியிருந்ததால, இந்த ரெண்டு படங்களுக்கும் எஸ்.பி.பி சாரே டப்பிங் கொடுத்தார். ‘தசாவதாரம்’ படத்தோட தெலுங்கு உரிமையை தாசரி நாராயண ராவ் வாங்கினார். அவருக்கு எஸ்.பி.பி நல்ல நண்பர். அவரே டப்பிங் பேசினா நல்லா ருக்்கும்னு முடிவு பண்ணி னோம். ஒரு நாளில் ஒரு கேரக்டர்னு 10 கேரக்டருக்கும் எஸ்.பி.பி சார்தான் டப்பிங் கொடுத்தார். பாட்டி கேரக்டரை அசால்ட்டா செஞ்சார். கலிபுல்லா கேரக்டருக்குக் கொஞ்சம் டைம் எடுத்துக் கிட்டார். பைனல் அவுட் புட்டைப் பார்க்கும் போது, ரொம்பவே நேர்த்தியாக இருந்துச்சு. எஸ்.பி.பி சார் ஒரு வேலையைக் கையில் எடுத்துட்டா, அதில் எந்தக் குறையும் இல்லாமல் சூப்பரா பண்ணிக் கொடுத் திடுவார். எஸ்.பி.பி சாரோட மறைவு என் குடும்பத்தில் முக்கிய மானவரை இழந்ததைப் போன்ற ஒரு சோகத்தை எனக்குக் கொடுத்திருக்கு. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.’’