
இந்தக் கொரோனாவால ஷூட்டிங் எல்லாமே தள்ளிப்போயிருக்கு. நான் நடிச்சிட்டிருக்குற படங்களுடைய பட்ஜெட் ரொம்பப் பெருசு.
‘2020-ல என்னவெல்லாம் பிளான் பண்ணி வெச்சிருந்தீங்க... அதுல எதெல்லாம் நடக்கலை’ன்னு சிலர்கிட்ட கேட்டோம். ரகளையா பதில் வந்துச்சு. இதுல எதெல்லாம் நிஜம்... எதெல்லாம் உல்லுல்லாயி, எது நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும்... நீங்களே முடிவெடுங்க மக்களே!

பிரியாமணி, நடிகை
“ ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்ல நடிச்சிட்டிருக்கேன். அந்தப் படத்தை ஸ்க்ரீன்ல பார்க்கக் காத்திருந்தேன். ஆனா, லாக்டெளன் எல்லாத்தையும் தலைகீழா மாத்திடுச்சு. இப்போதைக்கு ரியாலிட்டி ஷோ ஷூட்டிங் தொடங்கிட் டாங்க. அதுக்குப் போயிட்டி ருக்கேன். சினிமா ஷூட்டிங் எப்போ தொடங்குவாங்கன்னு வெயிட்டிங்!’’

வெங்கட்பிரபு இயக்குநர்
“2020 ரொம்பக் கடுப்பா இருக்கு. ஏன்னா, படத்தோட ஷூட்டிங் முடிச்சிட்டு இப்போ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இருந்திருப்போம். கிட்டத்தட்ட ரிலீஸ் தேதியை அறிவிச்சிருப்போம். ஷூட்டிங் மே மாசத்துக்குள்ள முடிக்கணும்னு பரபரப்பா ஓடிக்கிட்டிருந்தோம். எல்லாம் சரியாப் போய்க்கிட்டு இருந்தப்போ டக்குனு நின்னுருச்சு. அதனால, கொஞ்சம் கடுப்பா இருக்கு.’’

சமுத்திரக்கனி இயக்குநர்
‘` ‘RRR’ படத்தோட ஷூட்டிங் முடிஞ்சிருக்கும். ‘தலைவி’ படத்துக்கும் பரபரப்பா ரெடியாகிட்டிருந்தேன். இந்தக் கொரோனாவால ஷூட்டிங் எல்லாமே தள்ளிப்போயிருக்கு. நான் நடிச்சிட்டிருக்குற படங்களுடைய பட்ஜெட் ரொம்பப் பெருசு. அதனால, உடனே ஷூட்டிங் ஆரம்பிச்சிரு வாங்களான்னு தெரியல. இந்த வருஷம் இப்படியே போயிடும்போல. அடுத்த வருஷமாவது நல்லாருக்கணும்!’’

நீலிமா ராணி நடிகை
‘`2020... கேட்கவே கேட்சியா இருந்துச்சு. ரொம்பவே சிறப்பா இருக்கும்னு தோணுச்சு. என் தயாரிப்பு நிறுவனத்தில் ‘என்றென்றும் புன்னகை’ங்கிற இரண்டாவது சீரியலை மார்ச் மாதம் ஆரம்பிச்சோம். ரெண்டே வாரத்துல லாக் டெளனால சீரியல் ஷூட்டிங் நின்னுடுச்சு. நானாவே ஒரு பிரேக் எடுத்துட்டு, குடும்பத்தோடு நேரம் செல வழிக்கணும்னு இருந்தேன். அதுக்கு இந்த லாக்டெளன் உதவிருச்சு. அப்புறம் மாடித் தோட்டம் அமைக்கலாம்னு ப்ளான் பண்ணி, பூக்கள், காய்கறிகள்னு நிறைய விளைய வெச்சேன். அதான் ரொம்பவே சந்தோஷம். இப்படி ஏமாற்றமும் மகிழ்ச்சியும் கலந்ததா இருக்கு.”

’’ஜோதிமணி கரூர் எம்.பி.
“எம்.பியா பொறுப்பு எடுத்ததுமே, என் தொகுதியில இருக்கிற 6,800 கிராமங்களுக்கும் விசிட் போய், அந்த மக்களோட குறைகளைக் கேட்டுடணும்னு மனசுக்குள் முடிவு பண்ணி, ’வில்லேஜ் விசிட்’டைத் தொடங்கினேன். பாதி கிராமங் களுக்கு மேல போயிட்டு வந்துட்டேன். 2020 ஜனவரியில, `இந்த வருஷம் எப்படியாச்சும் இதைக் கம்ப்ளீட் செய்து டணும்’னு நினைச்சேன். அது நடக்கலை. அடுத்த வருஷ மாச்சும் நடக்கணும். தேர்தல் நேரத்துல மக்களுக்கு நாங்க வாக்குறுதி தர்றது, தொகுதி மேம்பாட்டு நிதியை நம்பித்தான். ஆனா மத்திய அரசு, அந்த நிதியை அடுத்த ரெண்டு வருஷத்துக்கு நிறுத்தி, எங்க தலையில இடியை இறக்கியிருக்கு. மொத்தத்துல மோசமான ஆண்டுங்க!’’

அர்ச்சனா தொகுப்பாளர்
“ஓ.டி.டி தளம் ஆரம்பிக்கணும்கிறது 2019 பிளான். 2020 தமிழ்ப் புத்தாண்டுல தொடங்கியிருக்க வேண்டியது. தமிழ்நாடு முழுக்க ஆடிஷன் நடத்தி பல திறமையாளர்களை இறக்கி விடணும்னு நினைச்சிருந்தேன். கொரோனா கும்மியடிச்சதுல அது நடக்கலை. அதனால என்னங்க, உள்ளூர் ஆட்டக் காரங்களைக் கொண்டு யூடியூப் சேனல் கொண்டு வந்துட்டேன். நான், என் பொண்ணு, தங்கச்சி இவங்கதான் அந்த உள்ளூர் ஆட்டக்காரங்க. பரவால்ல, அது நல்லபடியாத்தான் போயிட்டிருக்கு. மத்தபடி, இந்த லாக்டெளன் நாள்களில் நிறைய கத்துக்க முடிஞ்சிருக்கு!’’

டேனியல் பாலாஜி நடிகர்
‘`தெலுங்குல நானி நடிக்கிற ‘டக் ஜெகதிஸ்’ படத்துல அவருக்கு வில்லனா நடிக்க கமிட்டாகியிருந்தேன். அந்தப் பட ஷூட்டிங் மே மாசம் முடியுற மாதிரி ப்ளான். ஜூன்ல நண்பர்களோடு இமயமலை, காஷ்மீர் ட்ரிப் போலாம்னு ஐடியா. ஆனா, ‘டக் ஜெகதிஸ்’ பட ஷூட்டிங்கே இன்னும் முடியலை. அதனால வேற எந்தப் படத்தையும் கமிட் பண்ணிக்கலை. ஆனா, இந்த லாக்டெளனில் நிறைய கதைகள் கேட்டு வெச்சிருக் கேன். லாக்டெளன் முடிஞ்சதும் பட வேலைகளை முடிச்சுட்டு, ட்ரிப் கிளம்பணும்!’’

கே.என்.நேருமுன்னாள் அமைச்சர்
‘‘சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமா திருச்சியில மாநில மாநாட்டை நடத்தறது தி.மு.க-வில் காலங்காலமா இருந்துட்டு வர்ற வழக்கம். 2021 தேர்தலை எதிர்கொள்ள இந்த வருஷம் அதுக்குத் தயார் பண்ணுற வகையில அந்த மாநாட்டை நடத்தத் திட்ட மிட்டிருந்தோம். அது முடியலை. கட்சி நிர்வாகிகள் வீட்டு விழாக்களில் கலந்துக்க முடியலை.
தனிப்பட்ட முறையில விவசாய வேலைகள் தாமதமாகிடுச்சு. வேலைக்கு ஆள் கிடைக்கலை. கரும்பு வெட்டத் தாமதமாச்சு. வாழையில் இதுவரை இல்லாத அளவு பெரிய நஷ்டம். தம்பி மகனுக்கு இந்த வருஷம் கல்யாணம் நடத்த நினைச்சி ருந்தோம். அதுவும் தள்ளிப் போயிருக்கு. இப்ப வரைக்கும் கொரோனா நிவாரணப் பணிகள் மட்டும் நடந்துட்டே இருக்கு!’’

எம்.ராஜேஷ் இயக்குநர்
“நானும் சந்தானமும் 2020 ஏப்ரல்ல ஒரு படம் ஷூட்டிங் ஆரம்பிச்சு ஆகஸ்ட்ல ரிலீஸ் பண்ணலாம்னு இருந்தோம். அந்தப் பட வேலைகள் போய்க்கிட்டிருந்தபோதே ‘சிவா மனசுல சக்தி-2’ படத்துக்கான ஒன் லைனை டெவலப் பண்ணி என் முதல் படத் தயாரிப்பாளரான விகடன் சீனிவாசன் சாரை சந்திச்சுக் கதை சொல்லலாம்னு இருந்தேன். இந்த இரண்டு படமும் 2020 முடியறதுக்குள்ள ரிலீஸ் பண்ணிடலாம். அப்புறம், ஆர்யாவை மனசுல வெச்சு ஒரு ஒன்லைன் இருக்கு. அதுக்கான ஸ்கிரிப்ட் வேலை களை ஆரம்பிக்க லாம்னு நினைச்சிருந்தேன். ஆனா, இதுல எதுவுமே நடக்கலை. நடந்த ஒரு விஷயம்னா, த்ரில்லர் தீம்ல ஒரு ஆந்தாலஜி படம் உருவாகுது. அதுல எனக்கான போர்ஷனை எழுதி, எடுத்து முடிச்சிருக்கேன். என் 2020 திட்டம்லாம் 2021ல நடக்கும்னு நம்புறேன்!”

ரியோ நடிகர்
“2020 ஏப்ரல்ல என் ரெண்டாவது படம் ‘பிளான் பண்ணிப் பண்ணணும்’ ரிலீஸாகியிருக்கும். அப்படியே அடுத்த படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பிச்சு, இந்நேரம் முடிஞ்சிருக்கும். ஹ்ம்... சில காரணங்களால அந்தப் படத்துக்கு இனி வாய்ப்பில்லை. குழந்தை பிறந்தவுடன் கிடா வெட்டி விருந்து, பெயர் வைக்குற விழான்னெல்லாம் பிளான் பண்ணியிருந்தேன். எதுவுமே நடக்கலை. நடந்த நல்ல விஷயம்னா, முதல் சிரிப்பு, குப்புற விழுந்தது, அப்பான்னு சொன்னதுன்னு குழந்தையுடைய முதல் ஆறு மாசத்தை அணுஅணுவா ரசிக்க வாய்ப்பு கிடைச்சது. அவளுக்கு முதல்முறை நகம் வெட்டிவிட்டதை மறக்க முடியாது!’’

சிநேகன் பாடலாசிரியர்
“மலேசியா, சிங்கப்பூர், கனடா இந்த மூணு நாட்டுல என்னுடைய புத்தக வெளியீட்டு விழா, உலகம் முழுக்க இருக்கிற தமிழ் அறிஞர்களை கெளரவிக்கும் விதமா தமிழ்நாட்டுல ஒரு விருது நிகழ்ச்சி... இதெல்லாம் நடத்த முடியலை. நான் தயாரிச்சு நடிச்ச ‘பொம்மிவீரன்’ படத்தை வெளியிட முடியலை. என் ஊர்ல நூலகம் கட்டுறதுக் கான பணிகளை 2020-ல ஆரம்பிச்சிடலாம்னு நினைச்சி ருக்கேன்... பார்ப்போம். இது வருத்தங் களுக்கு நடுவுல சின்ன ஆறுதல்... ‘சூரரைப் போற்று’ படத்துல வர்ற ‘காட்டுப்பயலே’ பாடல் ஹிட்டானதுதான்!’’

அசோக் செல்வன் நடிகர்
“ரொம்ப வருஷம் கழிச்சு எனக்கு ஹிட் கொடுத்த வருஷம் 2020. ‘ஓ மை கடவுளே’ ஹிட்டானவுடன் இந்த வருஷம் செம பிஸியா இருக்கப் போறேன்னு நினைச்சேன். தவிர, என் மலையாள அறிமுகப்படம் ‘அரபிக் கடலிண்டே சிம்ஹம்’, தெலுங்குல நான் அறிமுக மாகப்போற படம் ரெண்டும் வெளியாகியிருக்கும். ‘ஓ மை கடவுளே’ ஹிட்டைத் தொடர்ந்து, நான் நடிச்சு முடிச்சு ரிலீஸாகாமல் இருக்கிற சில படங்களும் வந்திருக்கும். பல வருஷங்கள் கழிச்சு என் சொந்த ஊரான சென்னிமலைக்குப் போய் மாசக்கணக்கா அங்கிருந்து அந்த வாழ்க்கை முறைக்கு செட் ஆகிட்டேன். அந்த இயற்கையான சூழல்ல இருந்துட்டு சென்னைக்கு வரவே பிடிக்கலை!”